தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 november 2014

விடுதலைப் புலிகள் இன்னும் இருக்கிறார்கள் என காட்ட நினைத்தேன்! யாழில் கைதான இளைஞனின் வாக்குமூலம்!


அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் விபத்தில் பலி- குழியில் தவறி விழுந்த சிறுவன் மரணம்
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 02:06.26 PM GMT ]
அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவின் பாதுகாப்பு உத்தியோகஸ்தராக கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம் மதவாச்சி பிரதான வீதியின் வான்கடவல குளத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் சார்ஜன்ட் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் சென்ற தனியார் பஸ் அதில் மோதியுள்ளது.
கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் 46 வயதானவர் எனவும் பொலிஸார் கூறினர்.
குழியில் தவறி விழுந்த சிறுவன் மரணம்
கல்முனை இஸ்லாமாபாத் சுனாமி வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த சிறுவனொருவன் கழிவு நீர் குழியொன்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலையில் இச்சம்பவம் கல்முனை  மாநகர சபைக்கு உட்பட்ட இஸ்லாமாபாத் எனும் இடத்தில் நடைபெற்றுள்ளது.
யாகத்தலி முகம்மது நுபையில் (வயது 13) என்ற சிறுவனே மேற்படி சம்பவத்தில் பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
கல்முனை மாநகர சபையினால் கழிவு நீர் சேகரிப்பதற்காக வெட்டப்பட்ட சுமார் 6 அடி ஆழமான குழியில் தற்போது பெய்து வரும் மழை நீர் நிரம்பி இருந்த வேளையில் இச்சிறுவன் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை 6.30 மணியிலிருந்து சிறுவன் காணாமல் போயுள்ளதாகவும் இதன் பின்னர் பெற்றோரினால் தேடப்பட்ட போது இரவு 9 மணியளவில் கழிவு நீர்க் குழியிலிருந்து சடலமாக சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.
கல்முனை மாநகர சபையின் செயற்பாட்டினாலே இச்சம்பவம் நடைபெற்றதாகவும்  அதனை கண்டித்து இஸ்லாமாபாத்  மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை கல்முனை மாநகரசபைக்கு  முன்னால்  செய்வதற்கு முற்பட்டபோதும்  சிலரின் தலையீட்டினால்  அது தடைப்பட்டதாகவும்  அறியமுடிகின்றது.
சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பிரதேச பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார்
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmq5.html


விடுதலைப் புலிகள் இன்னும் இருக்கிறார்கள் என காட்ட நினைத்தேன்! யாழில் கைதான இளைஞனின் வாக்குமூலம்
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 02:44.50 PM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கம் செய்ய நான் நினைக்கவில்லை. சமகாலத்தில் வடமாகாணத்தில் அதிகரித்திருக்கும் வாள் வெட்டுக்கள், போதைப் பழக்கங்கள், விலை மாதுக்களின் சிக்கல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்காகவே விடுதலைப் புலிகள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை காட்ட நினைத்தேன்.
அதற்காகவே மாவீரர் தின சுவர் ஒட்டிகளையும் ஒட்டுவதற்கு நான் தீர்மானித்தேன் என சாவகச்சேரி- புத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் மாவீரர் தின சுவர் ஒட்டிகளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் தமக்கு சாட்சியம் வழங்கியிருப்பதாக யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்.பொலிஸாரின் மாதாந்த பத்ரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
குறித்த சுவர் ஒட்டிகளை கணனியில் வடிவமைத்து பிறிண்ட் எடுப்பதற்காக பென்றைவில் கொண்டு சென்ற சிறுவன் ஒருவனை, நாம் முன்னதாகவே கண்டுபிடித்துவிட்டோம்.
எனினும் அந்தச் சிறுவனுக்குப் பின்னால் யார் இருக்கிறார்? அவர்கள் என்ன செய்ய நினைக்கிறார்கள்? என்பதை அறிவற்காக பார்த்துக் கொண்டிருந்த போதே அவர்கள் சுவர் ஒட்டிகளை பிறிண்ட் எடுத்து ஒட்டுவதற்காக கொண்டு சென்றதை நாம் கண்டு பிடித்து அவர்களை கைது செய்தோம்.
பின்னர் அவர் எமக்கு வாக்குமூலம் வழங்கும்போது யாழ்.குடாநாட்டில் அதிகரித்திருக்கும் வன்முறைப்போக்கு, விலைமாதுக்கள், போதைப் பொருள் பாவனை போன்றன தன்னை அதிகம் பாதித்தி ருப்பதாக அவன் கூறியிருப்பதுடன், அவற்றை கட்டுப்படுத்தவேண்டுமானல் புலிகள் இன்னமும் இருக்கிறார்கள் என காட்ட வேண்டிய தேவை தனக்கு எழுந்ததாகவும் அதற்காக மாவீரர் தின சுவர் ஒட்டிகளை தயாரித்து ஒட்ட நினைத்ததாகவும் கூறியிருக்கின்றான்.
ஆனால் அவன் செய்திருப்பது ஒரு பயங்கரவாத நடவடிக்கையாகவே பார்க்கப்படுகின்றது. அதனடிப்படையில் அவர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.
யாழில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்த விசேட புலனாய்வு அணி
யாழ்.குடாநாட்டுக்கு இந்தியாவின் கேரளா பகுதியிலிருந்து கொண்டுவரப்படும் போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்துவதற்கும், குற்றவாளிகளை கண்டறிவதற்கும் விசேட புலனாய்வு அணி உருவாக்கப்பட்டு களமிறக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் போருக்குப் பின்னர் அதிகளவு போதைப் பொருள் பாவனை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த போதைப் பொருட்கள் யாழ்.குடாநாடு மற்றும் மன்னார் வழியாக வந்து இலங்கையின் மற்றைய பாகங்களுக்கும் கடத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்திருக்கின்றன.
இந்நிலையில் குடாநாட்டுக்கும் மன்னார் பகுதிக்கும் போதைப் பொருளை இலங்கையின் எல்லைக்குள் நுழையும் இந்திய தமிழகம் மற்றும் கேரளா மீனவர்கள் கொண்டுவருவதாகவும் அதனை இங்குள்ள மீனவர்கள் மூலமாக போதைப் பொருள் கடத்தல்காரர்கள் எடுத்துக் கொள்வதாகவும் தெரியவருகின்றது.
இந்நிலையில், போதைப்பொருள் பாவனை அனைத்து மட்டங்களையும் எட்டும் நிலையில் யாழ்.குடாநாடு இன்று இருந்து வருகின்றது.
இந்நிலையில் போதைப் பொருள் கட்டுப்பாடு தொடர்பில் அண்மையில் விசேட அணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குடாநாட்டுக்குள் போதைப் பொருள் வரும் இடங்களை அடையாளம் கண்டுள்ள நிலையில், விரைவில் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்படுவார்கள். என அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmrz.html

Geen opmerkingen:

Een reactie posten