அன்னப் பறவை சின்னத்தில் போட்டியிடவுள்ளார் மைத்திரிபால- மைத்திரிபாலவின் தேர்தல் பிரசாரம் இன்று ஆரம்பம்
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 05:00.16 AM GMT ]
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் கீழ் “அன்னப் பறவை” சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயகாவின் பெயரில் புதிய ஜனநாயக முன்னணி என்ற கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகா குறித்த கட்சியின் கீழ் “அன்னப் பறவை” சின்னத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன “எங்கள் தேசிய முன்னணி” (Our National Front) கட்சியின் கீழ் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அதற்கு விருப்பம் தெரிவிக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.
மைத்திரிபாலவின் தேர்தல் பிரசாரம் இன்று ஆரம்பம்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசாரம் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.
மைத்திரி ஆட்சியுடன் இணைவோம் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலாவது பிரசார பொதுக் கூட்டம் இன்று மாலை பொலன்நறுவையில் ஆரம்பமாகிறது.
பொலன்நறுவை புலதிசிபுரவில் நடைபெறும் இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க உட்பட எதிரணியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனிடையே மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆசி வழங்குவதற்காக 500 பிக்குமார் கலந்து கொள்ளும் ஆசிர்வாத பிரித் ஓதும் நிகழ்வும் இன்று இடம்பெறுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlq3.html
த.தே.கூட்டமைப்பு பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதில் ஆட்சேபம் கிடையாது: ஹெல உறுமய
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 05:21.26 AM GMT ]
அரசியல் யோசனைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதில் பிரச்சினை கிடையாது.
நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த விரும்பும் கட்சிகள் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
தேசிய தேவைகளின் அடிப்படையில் தீர்மானம் எடுப்பதற்கு பின் நிற்கப் போவதில்லை.
போர் புரிந்த எவரையும் போர் குற்றவியல் நீதிமன்றில் ஆஜர் செய்ய இடமளிக்க முடியாது.
எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டமைப்பில் காத்திரமான மாற்றத்தை எதிர்பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்கு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது நிசாந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlq4.html
சந்திரிகாவின் கும்பல் பிரிவினைவாத கும்பல்!– விமல் வீரவன்ஸ
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 06:08.11 AM GMT ]
மாலபே பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
2005ம் ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது அவரது காலை பிடித்து இழுத்த சந்திரிகா தான் இன்றும் ஜனாதிபதியின் காலை பிடித்து இழுக்கிறார்.
சந்திரிகா காலை பிடித்து இழுக்கும் நேரத்தில் மறுபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பல்வேறு தரப்பினருடன் இணைந்து சதித்திட்டங்களை மேற்கொண்டது.
இப்படியான சூழ்நிலையில், அன்றைய தேர்தலில் மகிந்த ராஜபக்ச 90 ஆயிரம் மேலதிக வாககுகளை பெற்றார். அந்த 90 ஆயிரம் வாக்குகள் கிடைக்காமல் போயிருந்தால், இரண்டாக பிளவுபட்ட நாடே எமக்கு எஞ்சியிருக்கும்.
அப்படி நடந்திருந்தால், நாட்டுக்காக போரிட்ட வறிய தாய், தந்தையரின் பிள்ளை வரிசையாக இன்னும் உயிரிழக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கும்.
சந்திரிகா அம்மையார் சுனாமி நிவாரண சபையை புலிகள் அமைப்புக்கு வழங்கவிருந்தார். அப்படி வழங்கப்பட்டிருந்தால், கடன் வழங்கும் உலக நிறுவனங்களிடம் இருந்து புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாத செயற்பாடுகளுக்காக அவர்கள் நேரடியாக நிதியை பெற்றிருப்பர்.
இதனால், நாங்கள் நீதிமன்றத்தில் சென்று சந்திரிகா வழங்க முன்வந்த சுனாமி நிவாரண சபையை ரத்துச் செய்தோம் எனவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படியிருந்த போதிலும் 2005ம் ஜனாதிபதித் தேர்தலில், வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிக்காத காரணத்தினாலேயே மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்றார்.
சுமார் 6 லட்சம் தமிழ் மக்கள் அந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை. அவர்கள் வாக்களித்திருந்தால் எதிரணி வேட்பாளரே வெற்றி பெற்றிருப்பார் என அப்போது பேசப்பட்டது.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அன்றைய தேர்தலில் வாக்களித்திருந்தால், இறுதிக்கட்ட போரில் ஏற்பட்டது போன்று தமிழ் மக்களுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டிருக்காது என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlq7.html
பெயரை மாற்றி 18 வருடங்களாக தலைமறைவாக வாழ்ந்த நபர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 06:20.20 AM GMT ]
தனது பெயரை மாற்றி 18 வருடங்களாகத் தலைமறைவாக வாழ்ந்த நபரை நேற்று கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சுப்பிரமணியம் சுதேஷ்குமார் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் கூறினர்.
குறித்த நபர் மட்டக்களப்பு, மட்டிக்களிப் பிரதேசத்தில் வீடொன்றில் மறைந்திருந்த போது நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், ஆட்கொலை செய்ய எத்தனித்த வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு 4 வருட ஒத்தி வைக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 1996 ஆம் ஆண்டு ஆட்பிணையில் வெளிவந்து தலைமறைவாகியிருந்தார் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
உயர் நீதிமன்றத்தினால் பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமறைவான இந்த நபர் சுப்பிரமணியம் சுதேஷ்குமார் என்ற இயற் பெயரை சுப்பிரமணியம் சுதேஷ்பிள்ளை என்று பெயர் மாற்றம் செய்து நடமாடித் திரிந்துள்ளார்.
மட்டக்களப்பு மட்டிக்களியில் இரண்டாவது திருமணம் செய்து குடித்தனமும் நடத்தி வந்த வேளையிலேயே கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlry.html
கொள்ளுப்பிட்டியில் மூன்று சீனர்கள் கைது!- மஸ்கெலியாவில் குளவி தாக்குதல்: மூன்று பேர் வைத்தியசாலையில்
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 06:24.53 AM GMT ]
கொழும்பில் உணவகம் ஒன்றில் நேற்றிரவு குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட மூன்று சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டியில் உள்ள உணவகம் ஒன்றில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இன்று கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாகவும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
மஸ்கெலியாவில் குளவி தாக்குதல்: மூன்று பேர் வைத்தியசாலையில்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா காட்மோர் பகுதியில் நேற்று மாலை 5.00 மணியளவில் குளவி கொட்டியதால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த மகாமைத்துவ அதிகாரிகளே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
மண்சரிவு அபாயத்தை பரிசோதனை செய்வதற்காக சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேயிலைப்பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவி இவ்வாறு தங்களை தாக்கியுள்ளதாக அவ்வதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதில் ஒருவர் நேற்று மாலை மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlrz.html
மகிந்தவின் தேர்தல் பிரசார பணிகளில் இருந்து விலகிய துறைமுக ஊழியர்கள்!
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 06:40.46 AM GMT ]
வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் தேர்தல் பணிகளில் இருந்து இந்த ஊழியர்கள் விலகிச் சென்றமையானது அரசாங்கத்தின் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அமைப்பாளர்கள் மத்தியில் ஒரு விதமான பதற்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அரசாங்கம் 25 மாவட்ட தேர்தல் நடவடிக்கை அலுவலங்களை திறந்துள்ளது. அவற்றில் 300 ஊழியர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
களனி பியகம வீதியில் உள்ள ஒரு கட்டிடத்திலும் துறைமுகத்திற்கு அருகில் இருக்கும் இரண்டு பிரசார அலுவலங்களிலும் தெற்கில் மூன்று அலுவலங்களிலும் இந்த ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.
இந்த ஊழியர்களுக்கு வழங்கி வரும் சலுகைகளுக்கு மேலதிகமாக 500 மணி நேர மேலதிக கொடுப்பனவுகளை வழங்க துறைமுக நிர்வாகம் இணக்கம் வெளியிட்டிருந்தது.
தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் இருந்தே துறைமுக ஊழியர்கள் அவ்வப்போது தேர்தல் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
970 துறைமுக ஊழியர்கள் இவ்வாறு தேர்தல் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட துறைகளில் பிரதான அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlr0.html
ஜனாதிபதியையும் பிரதமரையும் முரண்பட வைக்கும் ஆட்சி முறை
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 06:58.06 AM GMT ]
நிறைவேற்று அதிகாரத்தை அவர் கொண்டு வரும் போது அதனை எதிர்த்தவர் எவருமில்லை.
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இருந்த போது கொண்டு வந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன இரு தடவைகள் இருந்தார்.
அதன் பின்னர் அவர் படைத்தருளிய நிறைவேற்று அதிகாரத்தை அவருக்கு விருப்பம் இல்லாதவர்களே வைத்திருந்தனர்.
தனக்குப் பின்னர் காமினி திஸநாயக்க, லலித் அத்துலத்முதலி ஆகியோர் அந்தப் பதவிக்கு பொருத்தமானவர்களாக இருப்பர் என்று எண்ணிய போது ஜே. ஆரின் விருப்பத்திற்கு இயற்கை இடம்கொடுக்கவில்லை.
காமினி திஸநாயக்கவும் லலித் அத்துலத்முதலியும் அகாலமரணம் அடைந்து போக ஜே.ஆருக்கு விருப்பம் இல்லாத ஆர்.பிரேமதாஸ ஜனாதிபதிப் பதவியைப் பெற்றுக் கொண்டார்.
ஜனாதிபதி ஆட்சியில் பிரதமர் பியோன் என்று கூறியவர் பிரேமதாஸ. ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதியாக இருந்த போது பிரேமதாஸ பிரதமராக இருந்தார்.
தனக்கு எந்த விதமான அதிகாரத்தையும் ஜே.ஆர் தரவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தவே ஜனாதிபதி ஆட்சியில் பிரதமர் பியோன் என்று பிரேமதாஸ குறிப்பிட்டிருந்தார்.
எனினும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பதவிக்காலம் முடியும் வரை காத்திருந்த பிரேமதாஸ ஜே.ஆரின் விருப்பத்திற்கு மாறாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இரு தடவைகள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதவியில் இருந்து விட்டு எதுவும் செய்ய முடியாத நிலையிலேயே ஜனாதிபதித் தேர்தலில் பிரேமதாஸ போட்டியிட்ட போது ஜே.ஆர் மெளனமாக இருந்தார்.
சந்திரிகா குமாரதுங்க பிரதமராக இருந்தே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார். சந்திரிகா குமாரதுங்க பிரதமராக இருந்த போது டி.பி.விஜயதுங்க ஜனாதிபதியாக இருந்தார்.
இரு வேறு கட்சி சார்ந்த டி.பி.விஜயதுங்கவும் சந்திரிகாவும் ஒருபோதும் முரண்படாமல் இருக்கவில்லை.
எனினும் பிரதமராக இருந்த சந்திரிகா ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய போது மீண்டும் ஜனாதிபதி, பிரதமர் என்ற பதவி இழுபறி ஆரம்பம் ஆயிற்று.
ஆம், சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்தார். இருவரும் ஒருமைப்பாட்டுடன் செயற்பட்டதே இல்லை.
இரு தடவைகள் ஜனாதிபதிப் பதவியை வகிந்த சந்திரிகா அம்மையாருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மகிந்த ராஜபக்ச போட்டியிடுவது இம்மியும் விருப்பம் அன்று.
இருந்தும் சந்திரிகாவின் விருப்பம் இன்மையை முறியடித்து மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
ஜே.ஆர், பிரேமதாஸ, டி.பி.விஜயதுங்க, சந்திரிகா, சந்திரிகா, மகிந்த என்ற தொடர் முரண்பாடு மகிந்த, டி. என் ஜெயரட்ன வரை நீண்டு செல்கின்றமை மிகவும் ஆச்சரியமான விடயமே.
இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவியின் ஒருவர் பின் ஒருவர் என்ற சங்கிலித் தொடர் பிரதமர் பதவியில் இருந்தவரே அடுத்த ஜனாதிபதி என்றாயிற்று.
ஆனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியிலேயே பிரதமர் டி.என்.ஜெயரட்ன அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என்ற தொடர்நிலை அறுந்துபோனது.
தனது ஆட்சியில் பிரதமராக இருப்பவர் ஜனாதிபதிப் பதவிக்கு ஆசைப்படக் கூடாது என்பதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மிகவும் தெளிவாக இருந்துள்ளார் போலும்.
அதன் காரணமாகவே அடுத்த ஜனாதிபதியாக வரக்கூடிய ஒருவரை அவர் பிரதமராக ஆக்காமல் டி.எம்.ஜெயரட்னவை பிரதமராக்கினார்.
எனினும் மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சென்ற போது ஜனாதிபதி மகிந்தவின் ஆத்திரம் எல்லாம் பிரதமர் ஜெயரட்ன மீதே பாய்ந்தது.
ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொண்டு வந்த நிறைவேற்று அதிகார ஆட்சி முறையில் ஜனாதிபதியும் பிரதமரும் ஒற்றுமையாக இருக்க முடியாத சாபம் இருப்பது ஏனோ தெரியவில்லை.
எதுவாயினும் கடந்த கால ஒழுங்கில் பிரதமர் டி.எம். ஜெயரட்ன ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதே முடியாத காரியம்.
ஏற்கெனவே குறிப்பிட்ட சாபம் டி.என்.ஜெயரட்னவை பிரதமர் பதவியில் இருந்து நிச்சயம் தூக்கி எறியும் என்று நம்பலாம்.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlr1.html
Geen opmerkingen:
Een reactie posten