தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 november 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் காஞ்சி மக்கள் மன்றமும் இணைந்து மாவீர்ர் தின நாள் அனுஷ்டிப்பு!


போலி வைத்திய நிலையங்கள்! அதிகாரிகள் மீது பொலிஸார் குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 01:35.30 PM GMT ]
யாழ்.குடாநாட்டில் வேலி கட்டும் கட்டுக்கம்பியினால் மக்களுக்கு பல் கட்டும் தனியார் நிறுவனங்க ளைக் கட்டுப்படுத்த பொலிஸார் தங்கள் ஒத்துழைப்பினை வழங்குவதற்கு தயார். ஆனால் பொதுச் சுகாதார வைத்திய துறையிலிருக்கும் அதிகாரிகள் அதில் அக்களையற்றியிருக்கின்றார்கள். எ ன யாழ்.பொலிஸார் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
யாழ்.போதனா வைத்தியசாலை சுற்றாடலில் மிக பொருத்தமற்ற வைத்திய நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அண்மையில் ஊடகங்களுக்கு மனம் திறந்த போதனா வைத்திய சாலையின் வைத்திய நிபுணர்கள் குறித்த தனியார் வைத்திய சாலைகளில் மிதப்பு பல்லுக்கு சிகிச்சைக்கு சென்றவருக்கு வேலி கட்டும் கட்டுக்கம்பியினால் பல் கட்டியதாகவும்,
இங்கே கடமையாற்றுவோர் தங்களை வைத்தியர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டாலும் அவர்கள் உன்மையில் ஒரு வைத்தியர்கள் கிடையாது. வைத்தியர்களுக்கான சிகிச்சை எதனையும் பெறாதவர்கள் எனவும் சுட்டிக்காட்டியதுடன், குறித்த விடயம் தொடர்பாக தாம் பொலிஸாருக்கு கடிதம் எழுதியும் பதில் காணப்படவில்லை என குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற பொலிஸாரின் பத்திரிகையாளர் சந்திப்பில் குறித்த விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது குறித்த விடயம் தொடர்பாக உன்மையில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதனையடுத்து நாங்கள் உடனடியாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு பொலிஸாரி தெரியப்படுத்தினர்.
ஆனால் அது குறித்து பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனை அதிகம் அக்கறை காட்டியிருக்க வில்லை. அதனாலேயே விடயம் குறித்து எம்மால் அதிகம் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. துறைசார்ந்த உயர் அதிகாரிகள் உள்ளபோது அவர்களுடைய நடவடிக்கையினை மீறி எம்மால் எந்த நடவடிக்கையினையும் எடுக்க முடியாது.
எனவே இந்த விடயத்தில் பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையே அதிகம் அக்கறையற்றுள்ளது என பொலிஸார் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmq0.html


கனடாவில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன்
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 01:43.19 PM GMT ]
கனடாவில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தி உரையாற்றினார்.
எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் வழிக்காட்டுதலின்படி  மாவீரர் நாள் வீரவணக்கப் பொதுக் கூட்டம் பாண்டிச்சேரியில் நடைபெற்றது.
புதுச்சேரி மாநில செயலாளர் பாவாணன் தலைமை தாங்கினார். கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு வரவேற்புரையாற்ற, இளஞ் சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாநில செயலாளர் பொதினிவளவன் முன்னிலை வகித்தார்.
தோழர்கள் அரசு வணங்காமுடி, அமுதவன் உரையாற்றினர். நிறைவாக பொதுச் செயலாளர் ரவிக்குமார் மாவீரர் நினைவு உரையாற்றினார். முன்னதாக ஈகச்சுடரை தோழர் வன்னிஅரசு ஏற்ற சிறுத்தைகள் அனைவரும் அகவணக்கம் செலுத்தினர்.

நாட்டின் பௌத்த சமூகம் மைத்திரிபாலவுடன் இணையும்!– அத்துரலியே ரத்ன தேரர்
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 01:55.57 PM GMT ]
இலங்கையின் பௌத்த சக்திகள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து எதிர்கால தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை அனைவரும் காண முடியும் என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ரத்ன தேரர், எந்த அமைப்பு யாரை ஆதரித்தாலும் இலங்கை பௌத்த சமூகம் தமது அமைப்புடன் அணிதிரளும் என குறிப்பிட்டுள்ளார்.
சமூக பொருளாதார பிரச்சினை சம்பந்தமாக பௌத்தர்களின் எழுச்சியாது நாட்டில் வரலாற்றில் ஏற்பட்டிருக்கிறது. இதனால், பௌத்த சமூகம் இந்த காரணத்தின் அடிப்படையில் முன்னோக்கி வருவதை காணமுடியும்.
பொதுபல சேனா போன்ற அமைப்புகள் தாம் விரும்பு நபருக்கு ஆதரவை வழங்கும் உரிமையுள்ளது. இதனால், அவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது அந்தளவுக்கு சிக்கலானதல்ல.
அதேவேளை ஜாதிக ஹெல உறுய அடுத்த சில தினங்களில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள உள்ளது.
குறிப்பாக நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நாடாளுமன்றத்தின் சுதந்திரம் போன்ற விடயங்கள் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது எமது தேவை. அது பற்றி அடுத்த சில நாட்களின் அறிய தருவோம் எனவும் அத்துரலியே ரத்ன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmq2.html


மகிந்தவின் தேர்தல் பிரசார பணியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழிலாளி
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 01:57.55 PM GMT ]
வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான சிலாபம் அலுவலகத்தின் ஊழியர் ஒருவர் சட்டவிரோதமாக தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தொழிலாளி ஒருவர் நேற்று முற்பகல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சுவரொட்டிகளை மாதம்பை பழைய நகருக்கு அருகில் ஒட்டிக்கொண்டிருந்தார்.
இது குறித்து ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாதம்பை பிரதேசத்திற்கு பொறுப்பான வடமேல் மாகாண சபை உறுப்பினர் பாலித ரோஹனவின் கவனத்திற்கு கொண்டு வந்த போது, சுவரொட்டிகளை ஒட்ட தமக்கு அரச ஊழியர்கள் அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.
எனினும் தனது தொழிலை பாதுகாத்து கொள்ள விருப்பமின்றியேனும் இந்த சுவரொட்டிகளை ஒட்ட நேர்ந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தொழிலாளி குறிப்பிட்டுள்ளார்.
ஆனால்,அந்த தொழிலாளி தனது சுயவிருப்பத்தின் பேரில் சுவரொட்டிகளை ஒட்டியதாக பாலித ரோஹன கூறுகிறார்.
எது எப்படியிருந்த போதிலும் இந்த விடயம் சம்பந்தமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியாது என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சிலாபம் அலுவலகத்தின் நிறைவேற்று பொறியியலாளர் சார்ள்ஸ் டிவுன்ஜின் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmq3.html




தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் காஞ்சி மக்கள் மன்றமும் இணைந்து மாவீர்ர் தின நாள் அனுஷ்டிப்பு
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 01:59.37 PM GMT ]
தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் காஞ்சி மக்கள் மன்றமும் இணைந்து தமிழீழ மண் மீட்புப் போரிலே தங்கள் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுக்கு விளக்கேற்றி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்
காஞ்சி மக்கள் மன்றத்தின் இணைப்பாளர் மகேஷ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி,தி,வேல்முருகன், பிரதான பொதுச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்
தொடர்ந்து காஞ்சி மக்கள் மன்ற உறுப்பினர்களும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உறுப்பினர்களும் பொதுமக்களும் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்
இந்நிகழ்வில் மாவீரர்களை நினைவு கூர்ந்து காஞ்சி மக்கள் மன்ற சிறுவர்களினால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதோடு நிகழ்வின் இறுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி,தி,வேல்முருகன், அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது
பாண்டிச்சேரியில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்
எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் வழிக்காட்டுதலின்படி  மாவீரர் நாள் வீரவணக்கப் பொதுக் கூட்டம் பாண்டிச்சேரியில் நடைபெற்றது.
புதுச்சேரி மாநில செயலாளர் பாவாணன் தலைமை தாங்கினார். கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு வரவேற்புரையாற்ற, இளஞ் சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாநில செயலாளர் பொதினிவளவன் முன்னிலை வகித்தார். தோழர்கள் அரசு வணங்காமுடி, அமுதவன் உரையாற்றினர். நிறைவாக பொதுச் செயலாளர் ரவிக்குமார் மாவீரர் நினைவு உரையாற்றினார்.
முன்னதாக ஈகச்சுடரை தோழர் வன்னிஅரசு ஏற்ற சிறுத்தைகள் அனைவரும் அகவணக்கம் செலுத்தினர்.


Geen opmerkingen:

Een reactie posten