தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 november 2014

நாங்கள் தோற்கப்படவில்லை! ஏமாற்றப்பட்டிருக்கின்றோம்: புலிப்பார்வை இயக்குனரின் சிறப்புப் பேட்டி!

அலரி மாளிகையில் விமுக்தி
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 01:02.52 PM GMT ]
போர் எதிர்ப்பு படையினருக்கு அவதூறு ஏற்படுத்தும் மேற்குலக சதித்திட்டகாரர்களின் திரைப்படம் என முத்திரை குத்தப்பட்ட சுலங்க எனு பிணிச (கற்று வீசுவதற்காக) என்ற சர்ச்சைக்குரிய திரைப்படத்தின் இயங்குனரான விமுக்தி ஜயசுந்தர கடந்த சில தினங்கள் அலரி மாளிகையில் தங்கியிருந்ததாக தெரியவருகிறது.
ஜனாதிபதியின் 10 தேர்தல் பிரச்சார காணொளி விளம்பரங்களை விமுக்தியே உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. சுலங்க எனு பிணிச திரைப்படம் பிரான்ஸ் கேன்ஸ் திரைப்படவிழாவில் கெமரா டையர் விருதை பெற்றது.
கேன்ஸ் திரைப்பட விழாவில் செங்கம்பளத்தில் நடந்து சென்ற இலங்கையின் ஒரே திரைப்பட இயக்குனர் விமுக்தி எனக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும் ராஜபக்ஷ அரசின் யுத்தவாதிகள் இந்த திரைப்படம் படையினருக்கு எதிராக எடுக்கப்பட்டது எனக் கூறி ஆர்ப்பாட்டங்களை கூட நடத்தினர்.
அரசாங்க பணியில் இருந்த இயக்குனர் அசோக ஹந்தகம தனது அக்ஷரய திரைப்படம் தடை செய்யப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். ஆனால் விமுக்தி ஜயசுந்தர அமைதியாக இருந்தார்.
அந்த அமைதியின் பிரதிபலனாக விமுக்தி ஜயசுந்திர இன்று அலரி மாளிகைக்கு செல்லும் பாக்கியத்தை பெற்றுள்ளதுடன் ஹந்தகம எனும் தனது அடுத்த திரைப்படத்திற்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnu0.html
உலகத் தமிழர் பேரவையின் கருத்தால் மகிந்தவுக்கு சாதகம்: கலாநிதி தயான் ஜயதிலக்க
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 01:37.40 PM GMT ]
பொது வேட்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன போட்டியில் இறங்கியுள்ள போதிலும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் அதிகமான வாய்ப்பு இன்னும் மகிந்த ராஜபக்ஷவிற்கே இருப்பதாக அரசியல் ஆய்வாளரான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
கிராமிய, விவசாய அடிப்படையை கொண்ட, மக்களுக்கு மிக நெருக்கமான, நீண்டகால அரசியல் அனுபவங்களை கொண்டுள்ள மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக போட்டியிடுவதால், ஜனாதிபதித் தேர்தல் பலத்த போட்டியான ஒன்றாக மாறியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மைத்திரிபாலவின் வருகை ஆக்கபூர்வமான ஒன்று. எனினும் அவர் வெற்றி பெற்று ராஜபக்ஷவை தோற்கடிப்பார் என்று கருதி விட முடியாது.  எனினும் இங்கு பலத்த போட்டி உள்ளது. எப்போதும் இருக்காத அரசியல் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
பொது வேட்பாளரின் பின்னால் சர்வதேச சதித்திட்டம் இருப்பதாக அரசாங்கம் சுமத்தும் குற்றச்சாட்டுக்கு எவ்விதமான சாட்சியங்களும் இல்லை.
பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிட முன்வந்ததமையானது சர்வதேச சதித்திட்டங்கள் பின்தள்ள காரணமாக அமைந்துள்ளது எனவும் தயான ஜயதிலக்க கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் நாட்டின் இன்றைய அரசியல் சூழ்நிலையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைய கூடிய வாய்ப்புகள் அதிகம் என சிரேஷ்ட ஊடகவியலாளரான விக்டர் ஐவன் அண்மையில் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் கூறியிருந்தார்.
ஆனால், ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருடன் ஒப்பிடும் போது மைத்திரிபால சிறிசேனவுக்கு மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்கும் இயலுமை காணப்படுகின்ற போதிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கலாநிதி தயான் ஜயதிலக்க கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறிசேன சிறந்த அரசியல் பாத்திரத்தை கொண்டவர் என்பதால், பலத்த போட்டியை ஏற்படுத்த முடியும். அவரது வருகை சிறந்த நடவடிக்கையாக இருந்தாலும் அவர் எடுத்துள்ள அரசியல் நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டால், அவர் தன்னை முடிச்சுக்குள் சிக்க வைத்து கொண்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன, பொது வேட்பாளராக தான் நன்கு அறிந்த பெரும்பான்மை விவசாய மக்களின் விருப்பு, வெறுப்புகளுக்கு அமைவான வேலைத்திட்டம் ஒன்றை முன்வைக்காது 100 நாட்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவது போன்ற வேலைத்திட்டத்தை முன்வைத்தமை துரதிஷ்டவசமானது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று நாட்டு மக்களின் பெரும்பாலானவர்கள் கோருகின்றனர் என்பதற்கு எந்த சாட்சியமும் இல்லை.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இருவரும் ஒரு விதத்தில் முகமூடி அணிந்து கொண்ட பாத்திரங்கள். அவர்களின் முகத்தை மாத்திரம் பார்த்து மக்களால் தீர்மானம் ஒன்றை எடுக்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது.
அத்துடன் ஜனாதிபதித் மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தால், அவரை போர் குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியும் என உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளமை, மகிந்த ராஜபக்ஷவுக்கு சாதகமானது.
இலங்கையின் இன்றைய ஆட்சியாளர்களை, தொடர்ந்தும் இலங்கையில் ஆட்சியில் வைத்திருக்க வேண்டிய தேவைக்காக உலகத் தமிழர் பேரவை இவ்வாறு தெரிவித்திருக்கலாம் எனவும் தயான் ஜயதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnu1.html
கொட்டிகாவத்தை – முல்லேரிய பிரதேச சபை தலைவர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 02:07.59 PM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக, கொட்டிகாவத்தை – முல்லேரியாவ பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன சோலங்கராச்சி உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பிரதேச சபையின் ஆளும் கட்சியின் உறுப்பினர்களை கூட்டி நடத்திய பேச்சுவார்த்தையின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரதேச சபையின் சகல உறுப்பினர்களின் ஆதரவும் சோலங்கராச்சிக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று அலரி மாளிகையில் கொலன்னாவ நகர சபை மற்றும் கொட்டிக்காவத்தை – முல்லேரிய பிரதேச சபை ஆகியவற்றின் உறுப்பினர்களை விசேட கூட்டத்திற்காக அழைத்திருந்த போதிலும் சோலங்கராச்சி அதில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
தலைவர் பிரசன்ன சோலங்கராச்சி முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnu2.html
ஹிருனிக்காவும் ஜீவன் குமாரதுங்கவும் மைத்திரிபாலவை சந்தித்தனர்!
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 03:45.59 PM GMT ]
மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர மற்றும்; தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க ஆகியோர் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பு மைத்திரிபாலவின் கொழும்பு வீட்டில் இரகசியமாக இடம்பெற்றுள்ளதுஇதன்போது குறி;த்த இருவரும் தமது ஆதரவை மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவித்துள்ளனர்.
சிறிசேனவின் குடும்பத்தினர் இந்த சந்திப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மைத்திரிபால சிறிசேன தூய்மையான அரசியல்வாதி என்று அண்மையில் ஹிருனிக்காää அரசியல் மேடை ஒன்றில் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஜீவன் குமாரதுங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் கணவரான விஜயகுமாரதுங்கவின் மருமகன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnu7.html
ஜெயலலிதா வழக்கை விசாரித்த நீதிபதி குன்கா நீதிமன்ற பதிவாளராக இடமாற்றம்!
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 04:11.01 PM GMT ]
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
இந்த கோர்ட்டில் நீதிபதியாக இருந்த பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றதையடுத்து, 2013–ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக ஜான் மைக்கேல் டி.குன்காவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது.
தொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா கடந்த செப்டம்பர் மாதம் 27–ந்தேதி தீர்ப்பு வழங்கினார்.
இதில் ஜெயலலிதாவுக்கு 4 வருடம் ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சுப்ரீம் கோர்ட்டு அவகாசம் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது அவர் கர்நாடக ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு நீதிமன்ற பதிவாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பெங்களூர் சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி சோமையா ராஜூக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
எனவே அவர் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnvy.html

நாங்கள் தோற்கப்படவில்லை! ஏமாற்றப்பட்டிருக்கின்றோம்: புலிப்பார்வை இயக்குனரின் சிறப்புப் பேட்டி
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 04:15.33 PM GMT ]
ஒவ்வொரு மண்ணுக்கும்  வாசம் உண்டு. அதே போல் தமிழ் மண்ணுக்கு ஒரு சுவாசம் உண்டு. அந்த சுவாசம் வீரத்தை மட்டும் இதுவரை சுவாசித்து வந்தது என்கிறார் புலிப்பார்வை திரைப்படத்தின் இயக்குனர் பிரவீன் காந்தி.
மாவீரன் பிரபாகரன் தலைமையில் போராடி உயிர் நீத்த விடுதலை புலிகள் வீரர் என்பதை இந்த உலகிற்கு மிகவும் நேர்மையாக கௌரவத்துடன் பதிவு செய்துள்ளனர்.அந்த தினமே இந்த மாவீரர் தினம்.
இயற்கை தமிழனுக்கான கிரீடத்தை மிக விரைவில் கொண்டு வந்து சேர்க்கும். அந்தக் கிரீடம் விரைவில் கௌரவத்துடன் ஒவ்வொரு தமிழனுக்கும் சூட்டப்படும்.
மேதகு பிரபாகரன் இந்தியாவைக் காதலித்தார். இந்திய மக்களைக் காதலித்தார். இந்தியத் தலைவர்கைள் காதலித்தார் என லங்காசிறி இணையத்திற்கு அவர் வழங்கிய விசேட நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnvz.html

Geen opmerkingen:

Een reactie posten