[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 02:12.52 AM GMT ]
நாடாளுமன்ற முறையை உறுதிப்படுத்தவும் நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்லக்கூடிய பிரதமர் ஒருவரை தெரிவு செய்யும் வகையில் இந்த செயற்பாட்டை தாம் ஏற்றுக்கொண்டதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கை, புதிய ஆண்டில் புதிய அரசாங்கத்துடன் தமது பயணத்தை ஆரம்பிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகோத்தாவில் நேற்று உரையாற்றிய அவர் மைத்திரிபாலவின் துணிச்சலான முடிவை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ரணில் கேட்டுக்கொண்டார்.
தேசிய அரசாங்கம் ஒன்றின் மூலம் இலங்கை நாட்டின் நலன் கருதிய செயற்பாட்டை முன்னெடுக்க முடியும் என்றும் ரணில் தெரிவித்துள்ளார்.
தாம், மஹிந்த ராஜபக்சவின் பழைய அரசியலை தொடர விரும்பவில்லை என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnp2.html
புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவர்!– அரசாங்கம்
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 02:02.39 AM GMT ]
மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாச இதனை அறிவித்துள்ளார்.
1990ம் ஆண்டு காலப்பகுதியில் 9700க்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் வடக்கு கிழக்கிலிருந்து புலிகளினால் விரட்டியடிக்கப்பட்டனர்.
இவர்கள் தற்காலிக அடிப்படையில் புத்தளத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த 17ம்ää 18ம் திகதிகளில் புத்தளம் மாவட்டத்தின் வனாத்தவில்லுää முந்தல்ää கல்பிட்டி உள்ளிட்ட பகுதிகளில கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
மக்களின் கருத்துக்களும் இதன் போது கேட்டறியப்பட்டுள்ளது.
மக்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு அவர்களை சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகததாச தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnp1.html
Geen opmerkingen:
Een reactie posten