யாழ்.குடாநாட்டுப் பாடசாலைகளில் மாவீரர் தினப் பிரசுரங்கள்!
பாடசாலைக்கு வந்த அதிபர், ஆசிரியர்கள் குறித்த பிரசுரங்களை மீட்டுள்ளதுடன், படையினருக்கும் விடயத்தை தெரியப்படுத்தியிருக்கின்றனர்.
தமிழீழ மாவீரர் நாள் இன்று உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், யாழ்.குடாநாட்டிலுள்ள பாடசாலைகள் சிலவற்றில் மாவீரர் தின பிரசுரங்கள் போடப்பட்டுள்ளது. யாழ்.குடாநாட்டின் சகல இடங்களிலும், படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.இந்துக் கல்லூரி உள்ளிட்ட பல பாடசாலைகளில் மாவீரர்களை நினைவில் கொள்ளும் வகையிலான பிரசுரங்கள், நேற்று அதிகாலையிலேயே போடப்பட்டிருந்தன. பாடசாலைக்கு வந்த அதிபர், ஆசிரியர்கள் குறித்த பிரசுரங்களை மீட்டுள்ளதுடன், படையினருக்கும் விடயத்தை தெரியப்படுத்தியிருக்கின்றனர்.
இதனையடுத்து குறித்த பிரசுரங்களை மீட்ட படையினர் அவற்றை தாமே கொண்டு சென்றதுடன், பாடசாலைகளில் சோதனைகளை நடத்தியதாகவும் அதிபர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அதிகாலையில் குறித்த பிரசுரங்களை போட்டவர்கள் யார்? படையினரின் நடமாட்டம் மற்றும் சோதனைகள் அதிகமாகவுள்ள நிலையிலும் எவ்வாறு பிரசுரங்களை கொண்டு வந்தனர் என்பன போன்ற கேள்விகளுக்குப் பதில் கிடைக்காத நிலையில், நேற்று மதியம் தொடக்கம் யாழ் நகர் பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு அருகிலும் படையினர் நிலைகொண்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த பிரசுரங்களை மீட்ட படையினர் அவற்றை தாமே கொண்டு சென்றதுடன், பாடசாலைகளில் சோதனைகளை நடத்தியதாகவும் அதிபர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அதிகாலையில் குறித்த பிரசுரங்களை போட்டவர்கள் யார்? படையினரின் நடமாட்டம் மற்றும் சோதனைகள் அதிகமாகவுள்ள நிலையிலும் எவ்வாறு பிரசுரங்களை கொண்டு வந்தனர் என்பன போன்ற கேள்விகளுக்குப் பதில் கிடைக்காத நிலையில், நேற்று மதியம் தொடக்கம் யாழ் நகர் பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு அருகிலும் படையினர் நிலைகொண்டுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/88116.html
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 250 கிலோ கஞ்சா அகப்பட்டது….
இராமநாதபுரம் கீழக்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுகிறது என க்யூ பிரிவு காவல்துறைக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பொலிஸார் நடவடிக்கையில் இறங்கினர். இதன்போது காரில் கொண்டுவரப்பட்ட 250 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றினர். இந்தக் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 11 பேரைக் கைது செய்தனர். எனினும் மேலும் மூவர் தப்பிவிட்டனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இதற்கு உதவிய 2 மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 2 கோடி இந்திய ரூபா இருக்கும் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.jvpnews.com/srilanka/88121.html
மாவீரர் தினம்! வடக்கு முழுவதும் படையினர் கெடுபிடி
போர்க்காலங்கள் போல் வீதிகள் ஒழுங்களைகள் எங்கும் இராணுவம் நிலை நிறுத்தப்பட்டு வீதிகளில் செல்வோர் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஒருவார காலமாக குறிப்பாக யாழ்.பல்கலைக்கழகம், நல்லூர், யாழ்.போதனாவைத்தியசாலை போன்ற முக்கிய இடங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை முதல் குறித்த பகுதிகளில் அதிகளவு இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
யாழில் உள்ள ஆலயங்களுக்கு சென்ற இராணுவத்தினர் ஆலயங்களில் மணி அடிக்க வேண்டாம்,தீபம் காட்ட வேண்டாம் குறிப்பாக இன்று மாலை இந்த நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என பூசகர்களுக்கு கூறியுள்ளனர்.
இதேவேளை யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் உட்செல்வோரும் உள்ளிருந்து வெளியே வருவோரும் வழி மறிக்கப்பட்டு கடும் சோதனை நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/88124.html
Geen opmerkingen:
Een reactie posten