தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 november 2014

அரச புலனாய்வு சேவையின் பிரதானியை பதவி நீக்கிய மஹிந்த: ராஜித சேனாரத்ன!

அரலிய லொறி தாக்குதல் சம்பவத்தின் பின்னணி என்ன?: கொழும்பு ஊடகம் ஒன்றின் பிந்திய தகவல்
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 08:12.23 AM GMT ]
ஜனாதிபதி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருக்கு சொந்தமான அரிசி லொறி ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
“அரலிய சாஹ்ல்” நிறுவன உரிமையாளரான டட்லி சிறிசேனவின் லொறியே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. தம்புள்ளை பகுதியில் உள்ள மகரான்டாகாமுல்ல என்ற இடத்தில் இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தகவல் அளித்துள்ள அரலிய சாஹ்ல் நிறுவனத்தின் பொதுமுகாமையாளரும் மைத்திரிபால சிறிசேனவின் மற்றும் ஒரு சகோதரருமான லால் சிறிசேன தமது லொறி ஆயுதக்குழு ஒன்றின் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவித்தார்.
இந்த தாக்குதலின் பின்னணியில் முக்கிய அமைச்சர் ஒருவர் இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
அரலிய சாஹ்ல் நிறுவனத்தின் உரிமையாளரான டட்லி சிறிசேன அண்மையில் அமைச்சர் ஜோன்ஸ்ட்டனின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தார்.
டட்லி சிறிசேன நாட்டில் அரிசி மாபியா நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் பெர்ணான்டோ குற்றம் சுமத்தியிருந்தார்.
இதேவேளை அமைச்சர் ஜோன்ஸ்டனின் அமைச்சு இறக்குமதி அரிசியை குறைந்த விலைகளில் தற்போது தேர்தலை முன்னிட்டு விநியோகித்து வருகின்ற நிலையிலேயே இந்த தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmv3.html

அரச அதிகாரிகளுக்கு தேர்தல் சட்டம் கற்பிக்கும் மனித உரிமை ஆணைக்குழு
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 08:39.14 AM GMT ]
தேர்தல் சட்டங்கள் குறித்து அரச அதிகாரிகளுக்கு விளக்க இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இது சம்பந்தமாக தேர்தல் ஆணையாளர், பொலிஸ் மா அதிபர், சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் விசேட கலந்துரரையாடல்களை நடத்தி வருவதாக மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmv4.html



இந்திய மீனவர்களை காப்பற்றிய இலங்கை கடற்படையினர்
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 08:43.25 AM GMT ]
யாழ்ப்பாணத்திற்கு வடக்கில், கடலில் தத்தளித்த இந்திய மீனவர்கள் சிலரை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.
நான்கு இந்திய மீனவர்களை அவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த படகுடன் கடற்படையினர் மீட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு வடக்கில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவர்களின் படகு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
அதில் இருந்த இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட மீனவர்கள் நெடுந்தீவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
யாழ்.வடமராட்சி கடற்பகுதியில் உடைந்த நிலையில் கரையொதுங்கிய படகிலிருந்த தென்னிலங்கை மீனவர்கள் 5 பேர், தமிழ் மீனவர்களினால் இன்று காப்பாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாக.
குடாநாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகின்றது. இதனால் வடமராட்சி மீனவர்கள் எவரும் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை கடுமையான காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக தென்னிலங்கையிலிருந்து வடபகுதி கடற்பரப்பில் கடற்றொழிலுக்காக வந்திருந்த தென்னிலங்கை மீனவர்கள் பயணித்த
படகு சேதமான நிலையில் கரையொதுகியிருக்கின்றனர்.
குறித்த படகிலிருந்த மீனவர்களை காப்பாற்றிய தமிழ் மீனவர்கள் அவர்களை பாதுகாப்பாக கரைசேர்த்ததுடன், காயமடைந்த நிலையிலிருந்த அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் வழங்கியிருக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmv5.html
அரச புலனாய்வு சேவையின் பிரதானியை பதவி நீக்கிய மஹிந்த: ராஜித சேனாரத்ன
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 09:05.47 AM GMT ]
புலனாய்வு தகவல்கள் சம்பந்தமாக பாரதூரமான மோதல்கள் ஏற்பட்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்திரா வாகிஷ்டவை அந்த பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் மைத்திரிபால சிறிசேன, பொது வேட்பாளராக போட்டியிட போவது குறித்து அரச புலனாய்வு சேவையின் பிரதானி அது பற்றி தகவல்கள் எதனையும் அறிந்திருக்கவில்லை.
அத்துடன் அரச புலனாய்வு சேவை ராஜபக்ஷவினருக்கு வழங்கிய புலனாய்வு அறிக்கையில் மைத்திரிபால சிறிசேனவுக்கான ஆதரவு 59 வீதமான அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் ஆத்திரமடைந்த ஜனாதிபதி வாகிஷ்டவை பதவியில் இருந்து நீக்கியுள்ளார் எனவும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் அரச புலனாய்வு சேவையின் பிரதானி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளரா என பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் கேட்ட போது, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வாகிஷ்ட அந்த பதவியில் நீடிப்பதாகவும் அவர் நீக்கப்படவில்லை எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmv6.html

Geen opmerkingen:

Een reactie posten