தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 november 2014

பெளத்த மயமாகி வரும் கதிர்காம திருத்தலம்: வடக்கு முதலமைச்சர்!



கதிர்காமத்திற்கு நான் ஒவ்வொரு வருடமும் சென்று தரிசித்து வந்தேன். ஆனால் கடந்த சில தினங்களாக நான் கதிர்காமத்திற்கு செல்லவில்லை. அந்த பூமி தற்பொழுது பெளத்த மயமாகி வருகிறது என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இன்று நடைபெற்ற நாவலர் விழா மற்றும் ”கதிர்காமத்தை தரிசித்த சித்தர்களும் முனிவர்களும்” எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய வடக்கு முதலமைச்சர்,
கதிர்காமத்திற்கு நான் ஒவ்வொரு வருடமும் தரிசிப்பது உண்டு. கடந்த சில வருடங்களாக செல்லவில்லை.
கதிர்காமத்தில் அகஸ்த்தியர் முதல் யோகர் சுவாமி வரை தரிசித்தார்கள். ஆனால் அந்த பூமி தற்பொழுது பௌத்த மயமாகி வருகின்றது.
எமது அந்த கதிர்காமம் எங்களை விட்டு ஒழிக்கப்படுமோ என்ற அச்சம் எம்முள் நிகழ்கின்றது. அப்பிரதேசம் எமது பிரதாண சித்தர்கள் சிலைகள் அழிக்கப்படுகின்றன.
அதற்கு பதிலாக புத்தர்கள் சிலைகள் ஓங்கி ஒழிகின்றன. அந்த 1983களில் சிங்கள காடையர்களும், சிங்கள அரசியல்வாதிகளும் அதனை அழித்தார்கள்.
ஆனால் நீங்கள் அந்த கதிர்காமத்தை ஒவ்வொரு தமிழரும் தரிசிக்க வேண்டும். அங்கு அவர்கள் எதனை அழித்தாளும் எமது கதிர்காம தெய்வம் எம்மை ஆசிர்வதிப்பதற்கு காத்துக் கொண்டே இருக்கின்றது என்றார்.
இந்நிகழ்வினை அகில இலங்கை இந்து மாமன்றம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வு கந்தையா நீலகண்டன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக இந்து சமய பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசனும் நூலாசிரியர் என்.கே.எஸ் திருச்செல்வன் மற்றும் ஆங்கில மொழி முலமான ஹிந்துசிசம் வட் இட் ஸ் வட் இட் இஸ் நொட் என்ற நூலை எழுதிய பி.சோமபாலனும் கிழக்கு பல்கழைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ம. பாலகைலாசநாத சர்மாவும் உரையாற்றினார்கள்.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZlo2.html

Geen opmerkingen:

Een reactie posten