[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 07:10.33 AM GMT ]
ஊவா மாகாண முதலமைச்சர்கள், அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கு உடல் வெப்பத்தை சீர்ப்படுத்தும் செம்மறி ஆட்டின் முடியில் இருந்து தயாரிக்கப்பட்ட ஆடை, தொப்பி, உள்ளாடைகள் என்பவற்றை உதவியாக எம்பிலிப்பிட்டிய நகர சபை வழங்க வேண்டும் என யோசனை முன்வைப்பதாக அவர் கூறியுள்ளார்.
இந்த யோசனையை வழிமொழிந்து உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லசந்த சிறிபுர, ஹல்துமுல்லவில் நிலச்சரிவு ஏற்பட்ட போது குளிர் ஏற்படாத ஊவா மாகாண முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள குளிர் எங்கு போய் முடியுமோ என்று தெரியாது.
இதனால், குளிருக்கு அணியும் உடைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற யோசனையை நான் வழிமொழிகிறேன் என்றார்.
ஊவா மாகாணத்தில் கடும் குளிர் நிலவுவதால், மாகாண சபைக் கூட்டத்தை இரண்டரை மாதங்களுக்கு ஒத்தி வைப்பதாக ஆளும் கட்சி அறிவித்தது.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் மூன்று உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணையவுள்ளனர். இதனால், ஊவா மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் எதிரணிக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்கும் நோக்கில், ஊவா மாகாண சபை இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlr2.html
எனது ஆட்சியிலேயே சட்டம் பாதுகாக்கப்பட்டது: மகிந்த ராஜபக்ஷ
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 07:46.13 AM GMT ]
இது சம்பந்தமாக அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்த எவருக்கும் முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அரச இரசாயன பரிசோதகர்கள் மற்றும் இலங்கை விஞ்ஞான சேவை அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனை கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தமை, அபிவிருத்தி பற்றி எதனையும் பேச முடியாத எதிர்க்கட்சிகள் நல்லாட்சி மற்றும் சட்டத்தின் செயற்பாடுகள் பற்றி அரசாங்கத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன.
நாடு முழுவதும் வீதிகளை நிர்மாணிக்கும் போது கமிஷன் பணத்தை பெறுவதற்காகவே வீதிகள் நிர்மாணிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தினாலும் நாட்டில் தற்போது முன்னேற்றமாக வீதி கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி ஆட்சியில் இருந்த போது வீதி அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை எனவும் மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlr4.html
மைத்திரியுடன் சென்ற குணவர்தனவை அரசுக்கு மீண்டும் இழுக்க தீவிர முயற்சி
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 08:03.31 AM GMT ]
அவர், அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த போது அரசாங்கத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்துடன் அரசாங்கத்தில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது? அவற்றை தீர்க்க பணம் இருக்கின்றதா?. மீண்டும் அரசாங்கத்திற்கு வருவதற்கு எவ்வளவு பணம் தேவை என தொலைபேசி அழைப்பை எடுத்த நபர் கேட்டுள்ளதாக தெரியவருகிறது.
தொலைபேசி அழைப்பை எடுத்தவர் முன்வைத்த யோசனைக்கு நன்றி தெரிவித்த குணவர்தன, ஐயா நான் வறிய மனிதன். எனினும் நான் இந்த செயலை விரும்பவில்லை.
5 ஆயிரம் ரூபா நாணயத்தாள்களை கொண்ட ஒரு கப்பலை கொடுத்தாலும் நான் மீண்டும் வரப் போவதில்லை.
இதனால் பேச்சு இத்துடன் நிறுத்திக்கொள்வோம். ஆனால், எமது நட்பு தொடரட்டும் என குணவர்தன பதிலளித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlr5.html
கொஸ்லாந்த மீரியபெத்தவில் மரணித்த மக்களுக்கு அறிவகத்தில் நினைவஞ்சலி!
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 09:21.31 AM GMT ]
இதில் வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, அரியரத்தினம், கரைச்சி பிரதேச சபை தலைவர் குகராசா உட்பட கட்சி நிர்வாகிகள் அமைப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு மண்சரிவினால் மரணித்தவர்களின் நினைவு நாளில் சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்.
இதில் கலந்துக்கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் அரியரத்தினம் வணக்க உரை நிகழ்த்துகையில், மண்சரிவினால் மலையகத்தில் மரணித்த உறவுகளுக்கு நாம் எமது மக்கள் சார்பிலே இந்த ஆழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அவர்களின் வாழ்வு இன்றைக்கும் அவலங்களையே சந்தித்து வருகின்றது. அம்மக்களுக்கான ஆரோக்கியமான சிந்தனையை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை.
அதனால் இருளிலேயே வாழ அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். எமது உறவுகளான மலையக மக்களோடு எமது உறவுகள் வலுப்படுவதை அரசாங்கம் விரும்பவில்லை.
தமிழர்கள் ஓரணியாகி விடுவார்கள் என்பதற்காக மலையக மக்களுக்கும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும் இடையில் உள்ள உறவு பிணைப்புக்கு அரசாங்கம் இடையூறுகளை விளைவிக்கின்றது என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlr7.html
என்னை வெளியேறும்படி கூற சுவாமிக்கு தகுதி இல்லை! ராஜா கூறியது நகைப்புக்குரியது: வைகோ
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 09:58.03 AM GMT ]
நாகர்கோவிலில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
என்னைப்பற்றி எச்.ராஜா கூறியது நகைப்புக்குரியது. எச்.ராஜா கட்சியில் பெயர் வாங்குவதற்காக இப்படி பேசியுள்ளார்.
கூட்டணியில் இருந்து வெளியேறும்படி கூற சுப்பிரமணிய சுவாமிக்கு தகுதி இல்லை. எச்.ராஜா மற்றும் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக ம.தி.மு.க.வினர் செயல்படக்கூடாது.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன். ஆனால் நேரில் சந்திக்கும் போது என்னிடம் அன்பும், மரியாதையும் காட்டினார்.
நேற்று தானே உங்களை விமர்சனம் செய்தேன் என்று கூறும் போது உங்கள் கொள்கைக்காக நீங்கள் போராடுகிறீர்கள். அதற்காக தானே பேசினீர்கள் என்று கூறுவார்.
எம்.ஜி.ஆரை பற்றி கொள்கை ரீதியாக விமர்சனம் செய்த போது அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தவில்லை.
தி.மு.க.வில் இருந்து வெளியேறிய போது கருணாநிதியை கொள்கை ரீதியாக கடுமையாக விமர்சனம் செய்த போதும் இப்படி யாரும் கூறவில்லை.
எனவே எச்.ராஜா மற்றும் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக போராட்டம் நடத்தவோ, உருவப்பொம்மை எரிக்கவோ கூடாது என்று ம.தி.மு.க.வினரிடம் ஏற்கனவே நான் கடுமையாக கூறி இருக்கிறேன்.
என்னை யாரும் அச்சுறுத்த முடியாது என்று கூறினார் வைகோ.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlsy.html
Geen opmerkingen:
Een reactie posten