லண்டனில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில், அனைத்து ஊடவியலாளர்களையும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு புறந்தள்ளியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. மாவீரர் தினம் நடக்கும் மண்டபத்துக்குள் அவர்களை அனுமதிக்காது, மற்றும் படங்களை எடுக்க அவர்களை அனுமதிக்காது வெளியே ஒரு மேசையைப் போட்டு அவர்கள் சுதந்திரத்தை அடக்கியுள்ளார்கள். புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியே வரும். அதனை எடுத்து நீங்கள் பாவிக்கலாம் என்று அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் கூறப்பட்டுள்ளது. ஆனால் தீபம் TV, GTV , வானொலிகள் இணையங்கள் என்று பல மீடியாக்கள் வெளியே இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வர காத்துக் கொண்டு இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் இருந்து நிகழ்சியை ஒளிபரப்ப வந்த பல தொலைக்காட்சிகள், ஐரோப்பாவில் இருந்து இந்த நிகழ்சியை ஒளிபரப்ப வந்த சில தொலைக்காட்சிகள் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டு உள்ளார்கள். இலங்கையில் ஊடக சுதந்திரம் இல்லை, ஊடகவியலாளர் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்று தமிழர்கள் குரல்கொடுத்து வரும் நிலையில், மாவீரர் தினத்தில் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக நடமாட TCC அமைப்பு தடை விதித்துள்ளமை கண்டனத்துக்கு உரிய விடையம் ஆகும். பல ஊடகவியலாளர்களுடன் பேசிய பின்னரே இச்செய்தியை நாம் வெளியிட்டு உள்ளேம்.
எனவே இனி வரும் காலங்களில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு இதுபோன்ற பிரச்சனைகளை சுமூகமான முறையில் தீர்த்துவைப்பது நல்லது. குறிப்பாக மாவீரர் தினத்தில் நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஏதோ சிங்கள உளவாளிகளை பார்பதுபோல தமிழ் ஊடகவியலாளர்களை பார்த்துள்ளார்கள் என்பது வருந்த தக்க விடையம் ஆகும். நடைபெறும் மாவீரர் தினத்தை உலகிற்கு எடுத்துரைக்கவே தமிழ் ஊடகவியலாளர்கள் அங்கே கூடுகிறார்கள் என்பது, TCC தலைவர்களுக்கு தெரிந்திருக்கவேண்டும். தமிழ் ஊடகவியலாளர்களும், தமிழ் ஊடகங்களும் எமது போராட்டத்திற்கு எவ்வாறு உதவி வருகிறது என்பது TCC அமைப்பினருக்கு தெரியவில்லை என்றால், அவர்கள் அதனை திருத்திக்கொள்வது நல்லது.
http://www.athirvu.com/newsdetail/1533.html
Geen opmerkingen:
Een reactie posten