தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 november 2014

ஜனாதிபதியின் கோப்பு பற்றிய தீர்மானத்தை மக்கள் சரியாக எடுப்பார்கள்: எஸ்.பி.திஸாநாயக்க!

வடக்கில் இந்திய வம்சாவளி மக்களின் நலனை தேடும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 06:45.49 AM GMT ]
வடக்கில் வாழும் இந்திய வம்சாவளி மக்களை சந்தித்து அவர்களின் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தேடிப்பார்க்கும் நோக்கில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளரான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழுவினர் அண்மையில் வவுனியா உட்பட மேலும் சில பிரதேசங்களுக்கு விஜயம் செய்தனர்.
அந்த பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி, பல்வேறு திட்டங்களின் ஊடாக கிடைக்கும் பலாபலன்கள் சரியான முறையில் இந்த மக்களுக்கு கிடைத்துள்ளதா என்பதையும் அமைச்சர் தலைமையிலான குழுவினர் ஆராய்ந்துள்ளனர்.
முன்னாள் அமைச்சரான காலஞ்சென்ற சௌமியமூர்த்தி தொண்டமான், இலங்கையில் பல பிரதேசங்களில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் குறைகள் மற்றும் பிரச்சினைகளை கண்டறிந்து, தனக்கு அறிய தருவதற்காக பிரதிநிதிகளை நியமித்திருந்ததுடன் வடக்கில் வவுனியா, மன்னார், கிளிநொந்நி மாவட்டங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அலுவலகங்களையும் திறந்திருந்தார்.
இந்திய வம்சாவளி மக்கள் இலங்கையில் பல்வேறு இடங்களில் அங்காங்கே வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உரிய நேரத்தில் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நோக்கம் என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சுமார் இருபது வருடங்களுக்கு மேல் அமைச்சராக இருந்து வருகிறார்.
இரண்டு தசாப்த காலங்களுக்கு மேல் வடக்கில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் மீது ஏற்படாத அக்கறை தற்போது ஏற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என்றாலும் இதில் அரசியல் நோக்கங்கள் இருக்கலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnr1.html
மகிந்தவின் வெற்றிக்காக கோத்தபாயவின் நகர அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் களத்தில்
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 07:18.27 AM GMT ]
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் நிர்வாக அதிகாரத்தின் கீழ் உள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபை, ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக பல மில்லியன் ரூபா செலவில் பிரசாரங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
“உங்களது நாளை உங்களது குரல்” போன்ற தலைப்புகளில் 7 வகையான 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரசார கையேடுகள் அச்சிடப்பட்டுள்ளன.
அச்சிடுவதற்கான முழு செலவுகளும் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதிகார சபையின் பணிப்பாளர்கள் முதல் எழுதுவிளைஞர்கள் வரை சகலரும் இந்த பணிகளில் சம்பந்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஊழியர்களுக்கான உணவு, போக்குவரத்து உட்பட சகல வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
கொழும்பு நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இந்த பிரசாரங்களை நாளைய தினம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உள்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnr3.html
ஜனாதிபதியின் கோப்பு பற்றிய தீர்மானத்தை மக்கள் சரியாக எடுப்பார்கள்: எஸ்.பி.திஸாநாயக்க
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 07:25.58 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோப்புகள் பற்றி நன்கு அறிந்துள்ள மக்கள் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி சரியான தீர்மானத்தை எடுப்பார்கள் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல்கள், விவகாரங்கள் மற்றும் கோப்புகள் பற்றி தற்போது அடிக்கடி பேசப்பட்டு வருகிறது என்பதால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோப்பு பற்றி தகவல்கள் எப்படியிருக்கும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் எம் அனைவரது கோப்புகளும் உள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சியின் அங்கத்துவத்தை பெற்ற கோப்பும் இங்கு இருக்கும். எம் அனைவருக்கும் நல்லவைகளும் தவறுகளும் இருக்கும்.
ஆனால் ஜனாதிபதி மீது மக்களுக்கு ஆச்சரியமான அன்பும் பக்தியும் உள்ளது. அப்படியான கௌரவம் அனைவருக்கும் கிடைக்காது எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnr4.html

Geen opmerkingen:

Een reactie posten