தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 30 november 2014

பிரபாகரனின் 200 கோடி ரூபா சொத்துகள் ஏல விற்பனைக்கு! அரசு தீர்மானம்


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான சுமார் 200 கோடி ரூபா பெறுமதியான சொத்துகளை ஏலத்தில் விற்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

வெள்ளவத்தையிலுள்ள அடுக்கு மாடிக் கட்டடமொன்று, ஆடைத் தொழிற்சாலையொன்று, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு முன்னாலுள்ள விசாலமான காணியொன்று, கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலுமுள்ள இரண்டு அச்சகங்கள் மற்றும் பல ட்ரோலர் படகுக், சாதாரண படகுகள் உட்பட சுமார் 200 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் பிரபாகரனுக்குச் சொந்தமானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அரச தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் கொழும்பிலுள்ள பிரபல வெளிநாட்டு வங்கியொன்றில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரில் வைப்புச் செய்யப்பட்டிருந்த ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாவும், உள்நாட்டு வங்கியொன்றில் வைப்புச் செய்யப்பட்டிருந்த 3 கோடியே 50 இலட்சம் ரூபாவும் ஏற்கனவே அரசால் முடக்கப்பட்டு அந்தப் பணம் முழுவதும் திறைசேரிக்கு ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
30 Nov 2014

http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1417339204&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten