தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 november 2014

பெண் பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழக்க வைத்தியசாலை டாக்டர்களும் தாதிகளுமே காரணம்!- கணவர்,பிள்ளைகள் !



ஹற்றன் பொலிஸ் நிலையத்தில் பலவருட காலமாக பொலிஸ் சார்ஜன்டாக கடமையாற்றிய W.A. புஸ்பாரஞ்சனி (5226)  என்பவர் திடீரென உயிரிழந்ததுக்கான காரணம் டிக்கோயா வைத்தியசாலை டாக்டர்களினதும் தாதிமார்களினதும் கவனயீனமே காரணம் என உயிரிழந்தவரின் கணவரும், பிள்ளைகளும் குற்றம் சுமத்துகின்றனர். 
கடந்த 18ம் திகதி திடீரென நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கடந்த 22ம் திகதி கண்டி மாவட்ட வைத்தியசாலையில் மாற்றப்பட்ட பின் அங்கு 2 மணித்தியாலயங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் வேளையில் உயிரிழந்துள்ளார்.
1958.01.29 திகதி பிறந்த இவர் பொலிஸ் சேவையில் கடமைபுரிந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் 3 வருடங்கள் உள்ளது.
இவரின் கணவரும் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றி தற்போது ஒய்வு பெற்றுள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தாயான இவரின் இரண்டாவது மகளும் அவரின் கணவரும் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியராக கடமையாற்றி வருகின்றார்கள்.
தாய் உயிரிழந்ததுக்கான காரணம் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் தனது தாய்க்கு தகுந்த முறையில் சிகிச்சை வழங்காததே காரணம் என இவரின் இரண்டாவது மகளும் அவரின் கணவரும் குற்றம்சுமத்துகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண் பொலிஸ் சார்ஜென்டின் கணவராகிய டீ.ஆர்.கே. டபிள்யு.எம் குலசிங்க கருத்து தெரிவிக்கையில்,
வைத்தியசாலையின் வைத்தியர்களும் தாதிமார்களும் தகுந்த முறையில் சிகிச்சை வழங்கவில்லை என சுட்டிக்காட்டிகின்றார்.
அத்தோடு இதற்கு உரிய விசாரணைகள் நடாத்தி வைத்தியர்களுக்கும் தாதிமார்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண் பொலிஸ் சார்ஜென்டின் மகன் சத்துர பண்டார கருத்து தெரிவிக்கையில்,
எனது தாயை வைத்தியசாலையில் அனுமதித்த பின் அடிக்கடி வைத்தியசாலைக்கு சென்று தாயின் நிலைமையை அறிந்ததாகவும் தாயின் நிலைமை மிக மோசமாக இருந்ததனால் எனது தாயின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றது என வைத்தியர்களிடம் சென்று கூறியபோதும் வைத்தியர்கள் எவரும் வந்து எனது தாயை கவனிக்கவில்லை என மகன் தெரிவிக்கின்றார்.
எனது தாயை கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர்களிடம் கேட்ட போதும் அதற்கும் வைத்தியர்கள் இது சம்மந்தமாக கவனம் செலுத்தவில்லை எனவும் 22ம் திகதி கண்டி வைத்தியசாலைக்கு அனுமதித்த பின் உயிரிழந்ததாக மகன் தெரிவிக்கின்றார்.
ஹற்றன் பொலிஸ் மரியாதையோடு 26.11.2014 அன்று ஹற்றன் குடாகம பகுதியில் உள்ள பொது மயானத்தில் உயிரிழந்தவரின் இறுதி சடங்குகள் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த விடயம் சம்மந்தமாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர். அன்வர் ஹம்தீனிடம் கேட்டபோது,
இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளாத இவர் தனது வைத்தியர்களும் தாதிமார்களும் தகுந்த முறையில் சிகிச்சை வழங்கியதாகவும் உயிரிழந்த பெண்ணின் காலில் இருந்த காயத்தில் ஏற்பட்ட பக்டீரியா அவரின் உடம்புக்கு பாதித்ததனால் உயிரிழந்துள்ளதாக கண்டி மாவட்ட வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி எம்.சிவசுப்பிரமணியம் தெரிவித்ததாகவும் இதை பற்றி விசாரணை நடத்துவதாக இருந்தால் தான் அதற்கும் தயார் எனவும், இந்த டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு தகுந்த முறையில் வைத்தியர்களும், தாதிமார்களும், ஊழியர்களும் கவனிப்பதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnr6.html

Geen opmerkingen:

Een reactie posten