தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 november 2014

நான் ஜனாதிபதியாக வந்துவிட்டால் கூட மகிந்தரையும் அவர் குடும்பத்தையும் பதுகாப்பேன் !

ராதிகா சிற்சபேசன் மன்னிப்பு கேட்க்கவேண்டும்: போர்கொடி தூக்கும் கனடா அமைச்சர் ஸ்டீபன் பான்லி !

[ Nov 29, 2014 08:16:04 AM | வாசித்தோர் : 6155 ]
கடந்த 25ம் திகதி கனேடிய பாராழுமன்றில் ராதிகா சிற்சபேசன் MP உரையாற்றி இருந்தார். அவர் தனது உரையில் மாவீரர்களை கெளரவித்துப் பேசியிருந்தார் என்ற செய்தி ஏற்கனவே வெளியாகி இருந்தது. இன் நிலையில், அன் நாட்டின் மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் பான்லி ராதிக்கா அப்படி பேசியிருக்க கூடாது என்று தெரிவித்துள்ளார். அவர் விடுதலைப் புலிகளையும், மேலும் போராடி இறந்துபோன புலிகளைப் பற்றியே அவ்வாறு பேசியுள்ளார் என்று ஸ்டீபன் குறிப்பிட்டுள்ளார். ராதிகா சிற்சபேசன் பகிரங்கமாக எல்லோரிடமும் மன்னிப்புக் கோரவேண்டும் என்று அவர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
கனடாவில் உள்ள பல ஊடகங்கள் இந்த சர்சையை முன் நிலைப்படுத்தி செய்திகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். ஒரு பெண் தனது நாடு குறித்துப் பேசக் கூட அவருக்கு அறுகதை இல்லையா ? மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதி நிதி ஒருவர், தனது சொந்தக் கருத்துக்களை முன்வைத்தால் அதற்கு ஏன் அவர் மன்னிப்புக்கோரவேண்டும் ? அத்தோடு புலிகள் தொடர்பாக அவசரமான முடிவை ஐரோப்பிய ஒன்றியம் எட்டிவிட்டது என்று நீதிமன்ற தீர்ப்பில் கூட கூறப்பட்டுள்ளது. இன் நிலையில் புலிகள் இயக்கத்தை கனடா எவ்வாறு தடைசெய்தது ? அதன்ற்கான பின் புலம் என்ன என்பதும் கேள்விக்குரிய விடையம் அல்லவா ?
இன் நிலயில் அன் நாட்டு அமைச்சர் ஸ்டீபன் பான்லி கூறியுள்ள கருத்துக்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை ஆகும். இதற்கு கனேடியத் தமிழர்கள் நிச்சயம் தகுந்த பதிலடியை வழங்குவார்கள்.
http://www.athirvu.com/newsdetail/1546.html

நான் ஜனாதிபதியாக வந்துவிட்டால் கூட மகிந்தரையும் அவர் குடும்பத்தையும் பதுகாப்பேன் !

[ Nov 29, 2014 07:50:00 AM | வாசித்தோர் : 2985 ]
எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்துகள் சில, வேடிக்கையாக உள்ளது. தான் ஜனாதிபதியாக வந்தால் மகிந்தரையும் அவர் குடும்பத்தையும் பாதுகாப்பேன் என்று அவர் கூறியுள்ளார். மகிந்தரை பிடித்து புலம்பெயர் தமிழர்கள் கைகளில் கொடுத்துவிடமாட்டேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதாவது மைத்திரி ஜனாதிபதியாக தெரிவானால், மகிந்தரை அவர் போர் குற்ற விசாரணைக்குள் தள்ளிவிடுவார் என்றும். மகிந்தரை சர்வதேச நீதிமன்றில் ஒப்படைத்துவிடுவார்கள் என்றும் மகிந்தரின் ஆதரவாளர்கள் சிங்கள மக்கள் மத்தியில் போலியான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனை முறியடிக்க வேறுவழியின்றி மைத்திரி இவ்வாறு எல்லாம் கூறவேண்டிய நிலையில் உள்ளார். மேலும் மகிந்தர் ஒருவ்வொரு முறையும் லண்டன் புறப்படும்வேளையும் தமிழர்கள் திரண்டு அவருக்கு கடும் எதிர்ப்பை காட்டுவது வழக்கம். பல இடங்களில் அவர் மூக்கு உடைபட்டு திரும்பியுள்ளார். ஆனால் மகிந்தரின் மீடியா ஆட்கள் அதனை சிங்கள ஊடகங்களுக்கு கொடுத்து வேறுமாதிரியான கதைகளைப் பரப்புவது வழக்கம். அது என்னவென்றால் மகிந்தர் சென்றார்... ஆனால் தமிழர்கள் திரண்டு அவரை எதிர்த்தார்கள். எனவே சிங்களவர்கள் மகிந்தருக்கு ஆதரவு கொடுக்கவேண்டும். ஏன் என்றால் மகிந்தரே தமிழர்களுக்கு சிம்மசொப்பனம். அவரே புலிகளை அழித்தார் என்று கதையளப்பார்கள்.
ஒருவகையில் தமிழர்கள் காட்டும் எதிர்பைக் கூட அரசியலாக்கி, அதனை சிங்களவர்களுக்கு காட்டி வாக்குகளை சம்பாதிக்கவே அவர்கள் முன்னர் முயன்று வந்துள்ளார்கள். மேலும் இலங்கையில் ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. ஆனால் அதற்கு முன்னர் அவர் தமிழர்கள் செறிந்துவாழும் ஒரு நாட்டிற்குச் செல்லலாம் என்று எதிர்பார்கப்படுகிறது. அப்படி என்றால் அங்கே தமிழர்கள் திரண்டு பாரிய எதிர்ப்பை வெளிப்படுத்த, அதனை தனக்கு சாதகமாக அவர் பயன்படுத்த பார்பார் என்றும் எதிர்வு கூறப்படுகிறது. ஆனால் தமிழர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்லவே. எந்த இடத்தில் அடக்கிவாசிக்கவேண்டும் என்று அவர்களுக்கு தெரியாதா என்ன ?
http://www.athirvu.com/newsdetail/1545.html

Geen opmerkingen:

Een reactie posten