தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 november 2014

மரணித்தவர்கள் நினைவாக நடப்படும் மரங்கள் ஒவ்வொன்றும் ஓர் உயிருள்ள நினைவாலயமே!: .ஐங்கரநேசன்

கோத்தபாயவின் இரகசிய நடவடிக்கைகள் கசிந்தன!
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 07:18.24 AM GMT ]
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பி.கியூ,6182 என்ற இலக்க லொறி மூலம் எடுத்து வரப்பட்டு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான சேறுபூசும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த லொறி ஹெவன் காட் என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமானது எனக்கூறப்படுகிறது.
பிட்டகோட்டேயில் உள்ள இந்த பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மகிந்த ராஜபக்ஷவின் இரகசியமான தேர்தல் பிரசார பிரிவாக செயற்பட்டு வருவதாக தெரியவருகிறது.
அத்துடன் இந்த பாதுகாப்பு நிறுவனம் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பொறுப்பின் கீழ் இயங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகத்தில் விசேட தேர்தல் நடவடிக்கைகளில் சிலர் பிரத்தியேகமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு மாதாந்தம் தலா ஒரு லட்சம் ரூபா சம்பளம் வழங்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmo0.html

மரணித்தவர்கள் நினைவாக நடப்படும் மரங்கள் ஒவ்வொன்றும் ஓர் உயிருள்ள நினைவாலயமே!: .ஐங்கரநேசன்
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 05:49.27 PM GMT ]
எமக்காகப் போராடியவர்களின் நினைவு இடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு, அவ்விடங்களில் இன்று படையினர் நிலைகொண்டிருக்கின்றனர். அங்கு சென்று அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் அவர்களின் நினைவாக இன்று மரங்களை நாட்டுகின்றோம். மரணித்தவர்களின் நினைவாக நடப்படும் மரங்கள் ஒவ்வொன்றும் ஓர் உயிருள்ள நினைவாலயமே என வட மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வரணியில் நேற்று நடைபெற்ற மரநடுகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
விடுதலைப் புலிகளோ அல்லது வேறு போராளிகளோ இலங்கை அரசாங்கத்தின் பார்வையில் பயங்கரவாதிகளாகத் தெரியலாம்.
ஆனால், அவர்கள் எங்களின் இரத்த உறவுகள். எங்களுக்காகத் தங்கள் உயிர்களைக் கொடுத்த தியாக சீலர்களுக்கு யாரும் அஞ்சலி செலுத்தக்கூடாது என்பதில் இராணுவம் மிகக்கவனமாக இருக்கிறது.
நினைவு நடுகற்களை அழிப்பதன் மூலமோ, நினைவுதின நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிப்பதன் மூலமோ மக்கள் மனங்களில் இருக்கும் நினைவுகளை ஒருபோதும் அழித்துவிட முடியாது என்பதை அரசாங்கமோ, இராணுவமோ புரிந்துகொள்வதாகத் தெரியவில்லை.
நாங்கள் நடுகின்ற மரங்கள் வெறும் மரங்கள் அல்ல. மரங்களைத் தெய்வமாக வழிபட்ட மரபைக் கொண்டவர்கள் நாங்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்து ஆலயங்களில் தல விருட்சங்கள் காணப்படுகின்றன.
அதுமட்டும் அல்லாது, சங்க இலக்கியங்களில் தமிழர்கள் மரங்களை உறவினர்களாகப் போற்றியதாகப் பதிவுகள் உள்ளன.
எனவே மரம் என்பது தமிழர்களின் வாழ்வியலில் உணர்வுபூர்வமாகக் கலந்துவிட்ட ஒன்று. எனவே அந்த மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலம் எமது உணர்வுகளுக்கு வடிகால் தேடுவதோடு, சுற்றுச்சூழலையும் பாதுகாத்துக்கொள்ளமுடிகிறது என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனோடு, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், வே.சிவயோகன், ச.சுகிர்தன், சாவகச்சேரி பிரதேச சபைத் தலைவர் சி.துரைராசா, வலிவடக்கு பிரதேச  சபைத் தலைவர் ச.சஜீவன் ஆகியோருடன் பொதுமக்களும் கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைத்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZms2.html

Geen opmerkingen:

Een reactie posten