தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 november 2014

விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள்! குஸ்பு! மாற்று மாநிலத்திலிருந்து பிழைக்க வந்த குஷ்புக்கு என்ன தெரியும்? வேல்முருகன் ஆவேசம்!

அஸ்வர் எம்.பிக்கு ஆளுநர் பதவி?
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 11:28.43 PM GMT ]
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த ஏ.எச்.எம் அஸ்வருக்கு ஆளுநர் பதவி வழங்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேல் மாகாண ஆளுநராக அவர், நியமிக்கப்படலாம் என்று உட்தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன..
இதேவேளை, கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் ஒரு உண்மையான உறுப்பினர் தலைமைக்கு எவ்வளவு தூரம் விசுவாசமாகவும், நம்பிக்கையாகவும் இருக்க வேண்டுமென்பதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் ஒரு உதாரண புருஷராக விளங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தமிழ் விவகார இணைப்பாளர் கந்தசாமி கருணாகரன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அஸ்வர் அவர்கள் எமது கட்சித் தலைவரான ஜனாதிபதியுடன் தனக்கிருந்த உண்மையான தூய நட்புக்கும் உறுதுணையாக இருந்த அரசியலில் நட்பு என்பதற்கும் ஒரு இலக்கணமாக விளங்கியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
காரணம் அதுவுமின்றி பதவி ஆசைக்காக தான் முக்கிய பதவி வகித்த கட்சியைக் காட்டிக் கொடுத்தது மட்டுமல்லாது தனது தலைவரை வசை பாடிவரும் மைத்திரிபால சிறிசேனவுடன் ஒப்பிடுகையில் அஸ்வர் அவர்கள் உயரிய இடத்தில் இருப்பதாகவும் கருணாகரன் தெரிவித்தார்.
கட்சியின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் கட்சியினதும் தலைமையினதும் வேண்டுகோளைத் தட்டிக் கழிக்காது செயற்படுபவரே உண்மையான கட்சி விசுவாசி, உண்மையான தொண்டன் எனவும் கருணாகரன் பாராட்டியுள்ளார்.
உண்மையில் அஸ்வர் அவர்கள் சுதந்திரக் கட்சியில் உயரிய இடத்தைப் பிடித்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZlo6.html
ஜீவன் குமாரதுங்க பின்வாங்கினார்!
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 11:22.54 PM GMT ]
அமைச்சர் ஜீவன் குமாரதுங்க, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதில் இருந்து பின்வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்முடன் இணைந்து கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும், பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் ஜீவனுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
ஏற்கனவே ஜீவன் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க இணங்கியிருந்தார்.
எனினும் அவரது மகளான மல்ஸா குமாரதுங்கவின் செல்வாக்கு காரணமாகவே இந்த முடிவை ஜீவன் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மல்ஸா, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின், இளைஞர் முன்னணியில் முக்கிய உறுப்பினராக உள்ளார்.
இதேவேளை பிந்திய முடிவு குறித்து ஜீவன் குமாரதுங்க இன்னும் பகிரங்கமான அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZlo5.html

விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள்! குஸ்பு! மாற்று மாநிலத்திலிருந்து பிழைக்க வந்த குஷ்புக்கு என்ன தெரியும்? வேல்முருகன் ஆவேசம்!
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 07:29.25 PM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே என நடிகை குஷ்பு தெரிவித்ததற்கு, மாற்று மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு பிழைப்புக்காக வந்த குஸ்புவுக்கு என்ன தெரியும் என வேல்முருகன் கேள்வியெழுப்பியுள்ளார்.


விடுதலைப் புலிகள் ஒரு தீவிரவாத இயக்கமே: குஷ்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே என நடிகையும், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாடு முழுவதும் தெருத்தெருவாக சென்று காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்வேன். பொதுவாக ஆசைக்காக அரசியலுக்கு வரக் கூடாது. கட்சிக்கும் நாட்டுக்கும் உழைப்பதற்காக அரசியலுக்கு வர வேண்டும்.
திமுகவில் இருந்து ஏன் வெளியேறினேன் என்று அப்போதும் சொல்லவில்லை. இன்றும் சொல்லமாட்டேன். நாளை கேட்டாலும் சொல்லமாட்டேன். நான் பதவிக்காக காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை.
காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஈழத் தமிழருக்கு எதிரானதாக இருந்தது இல்லை. காங்கிரஸைப் பொறுத்தவரை அது தீவிரவாதிகளுக்கு எதிரான ஒரு கட்சி. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நிச்சயமாக ஒரு தீவிரவாத இயக்கம்தான்.
தீவிரவாதத்தை கடைசி மூச்சு உள்ளவரை எதிர்ப்போம். காங்கிரஸை ஈழத் தமிழருக்கு எதிரான கட்சியாக சிலர் சித்தரித்துள்ளனர். இவ்வாறு நடிகை குஷ்பு தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZlo4.html

Geen opmerkingen:

Een reactie posten