[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 11:52.56 PM GMT ]
இந்த நிலையில் வடக்கு மாகாணத்தில் உள்ள சுமார் ஏழு இலட்சம் வாக்காளர்களைக் கவரும் பணியில் அரச தரப்பு வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவும், பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் மும்முரமாக ஈடுபடுவார்கள் என அரசியல் அவதானிகள் ஊகம் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் அவர்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக வடக்கு மாகாணம் விளங்குமெனக் கூறப்படுகின்றது.
2005ஆம் ஆண்டில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது விடுதலைப் புலிகள் இயக்கம் மக்கள் வாக்களிப்பதற்குத் தடை விதித்தது.
அந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச 48 லட்சத்து 87ஆயிரத்து 152 வாக்குகளையும், ரணில் விக்கிரமசிங்க 47 லட்சத்து 6 ஆயிரத்து 366 வாக்குகளையும் பெற்றனர்.
அதன் பிரகாரம் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 786 வாக்குகள் வித்தியாசத்திலேயே மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றார்.
இம்முறை வடக்கு மாகாணத்தில் 2013ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 477 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 லட்சத்து 26 ஆயிரத்து 813 பேரும்,
கிளிநொச்சி மாவட்டத்தில் 68 ஆயிரத்து 600 பேரும்,
மன்னார் மாவட்டத்தில் 75 ஆயிரத்து 737 பேரும்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 53 ஆயிரத்து 683 பேரும்,
வவுனியா மாவட்டத்தில் 94 ஆயிரத்து 644 பேரும்
கிளிநொச்சி மாவட்டத்தில் 68 ஆயிரத்து 600 பேரும்,
மன்னார் மாவட்டத்தில் 75 ஆயிரத்து 737 பேரும்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 53 ஆயிரத்து 683 பேரும்,
வவுனியா மாவட்டத்தில் 94 ஆயிரத்து 644 பேரும்
வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZlo7.html
ஜனாதிபதி 66 தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளார்
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 12:01.57 AM GMT ]
எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதிலும் சுமார் 66 இடங்களில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளார்.
ஜனாதிபதி இம்முறை அனுராதபுரத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
இறுதிக் கூட்டம் கெஸ்பேவ பிரதேசத்தில் நடைபெறவுள்ளது.
சகல மாவடங்களையும் உள்ளடக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlpy.html
ஆளும் கட்சி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்க்கட்சியில் இணைக்க தூதரகங்கள் முயற்சி
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 12:09.34 AM GMT ]
இந்த சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேற்குலக நாடுகளைச் சேர்ந்த இரண்டு தூதரகங்கள் ஆளும் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெருந்தொகை பணம் வழங்கி, அவர்களை அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்ல வைக்க முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆளும் கட்சி உறுப்பினர்களை எதிர்க்கட்சியில் இணைக்கும் பணிகளுக்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிற்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பணம் மொத்தப் பணம் அல்ல எனவும் ஒரு பகுதி பணமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆளும் கட்சியை விட்டு விலகி எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள எவ்வளவு பணம் தேவை என்ற பேரம் பேசுதல் அடிப்படையில் ஆளும் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு வெளிநாடுகளின் பிரபலமான உளவுப் பிரிவினரும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக முதல் கட்டமாக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlpz.html
எதிர்க்கட்சிக்கு செல்வோரை தடுக்க அரசாங்கம் ஒருவருக்கு 450 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு!
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 01:07.23 AM GMT ]
அரசாங்க கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு செல்வதை தடுக்கும் முகமாகவே இந்த திட்டம் அவசரமாக முன்னெடுக்கப்பட்;டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி 150 விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிப்புரையின் கீழ் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 450 மில்லியன் ரூபாய்கள் நிதியொதுக்கீடு செய்யப்படவுள்ளது.
2015ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் சுமார் 80 வீதமான வேலைத்திட்டங்களுக்கான நிதிகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன.
2014ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின்படி 112 அபிவிருத்தி யோசனைகள் முன்வைக்கப்பட்டன. எனினும் அதில் 32 மாத்திரமே முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 80 திட்டங்கள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதில் 77 திட்டங்களே புதிய திட்டங்களாக 2015ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlp0.html
சரத் என் சில்வா, மஹிந்தவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யமாட்டார்!
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 01:13.54 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மூன்றாம் முறையாக போட்டியிடுவது குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் தாம் அதற்கு எதிராக மீண்டும் வழக்கு தாக்கல் செய்தால் குறித்த நீதிமன்றமே அதனை விசாரித்து தீர்ப்பு வழங்கும். எனவே அதில் தமக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று நம்பவில்லை என்று தற்போது சரத் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் மாதுலுவேவ சோபித தேரர் மற்றும் அத்துரலியே ரத்தன தேரர் ஆகியோரின் வழிகாட்டலில் நியாயமான தேர்தல் நடத்தப்படும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமது உறவினர் ஒருவருடன் தாம் காங்கேசன்துறையில் உள்ள கடற்படை விடுதியில் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தங்கியிருந்ததாக வெளியான செய்தியை அவர் முற்றாக மறுத்துள்ளார்.
இது இவ்வாறிருக்க சில நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதியி;டம் 2015 ஏப்ரல் வரையில் நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டாம் என்று கோரியுள்ளனர்.
அவ்வாறு நடத்தினால் தமது ஓய்வூதிய கொடுப்பனவுகளை இழக்கநேரிடம் என்பதே அவர்களின் ஆதங்கமாகும்.
அதேநேரம் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுவேட்பாளர் மைத்திரிபாலவிடமும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
2016ம் ஆண்டு வரை பொதுத்தேர்தலை நடத்தாவிட்டால் தாம் அவருக்கு ஆதரவு தருவதாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlp1.html
பிரித்தானிய பிரபுக்கள் சபை மீண்டும் இலங்கை தொடர்பில் விவாதிக்கவுள்ளது!
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 01:53.44 AM GMT ]
இது ஒரு மாத காலத்துக்குள் அந்த உயர்சபையில் இலங்கை தொடர்பில் இடம்பெறும் இரண்டாவது விவாதமாக அமையவுள்ளது.
இதன்படி எதிர்வரும் டிசம்பர் 11ம் திகதி இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புக்கள் தொடர்பான விவாதத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் இடம்பெற்ற விவாதத்தின் போது விடுதலைப் புலிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தடையை நீக்கியமை, இலங்கையின் ஜனாதிபதி தேர்தல், பொதுவேட்பாளர் மைத்திரிபாலவின் முதலாவது தொலைக்காட்சி நிகழ்ச்சி அரசாங்கத்தினால் குழப்பப்பட்டமை உட்பட்ட விடயங்கள் விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlp2.html
Geen opmerkingen:
Een reactie posten