தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 30 november 2014

தமது செய்தியின் நம்பகத்தன்மையில் உறுதி! மன்னிப்பு கோரப்போவதில்லை!- ராவய!

யாருக்கு வாக்களிப்பது என்று முஸ்லிம் மக்கள் தீர்மானித்து விட்டனர்: அசாத் சாலி
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 02:22.45 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முஸ்லிம் மக்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டதாக கொழும்பு மாநகர முன்னாள் உதவி மேயர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றிடம் இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
பொதுபலசேனா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கும் போது முஸ்லிம் மக்கள் அவருக்கு எவ்வாறு ஆதரவளிப்பது என்று தோரணையில் அவரின் கருத்து அமைந்திருந்தது.
சிறுபான்மையினர் மட்டுமன்றி பெரும்பான்மையினரும் மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிப்பதில் சங்கடங்களை எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் எப்போதும் நான்கு வகையிலான பிரசார பெயர்களை கொண்டு செயற்பட்டு வருகிறது.
டயஸ்போரா, என்ஜிஓ, வெளிச்சக்திகள், கொந்தராத்துக்காரர்கள் என்ற பெயர்களை சிங்கள மக்களிடம் கூறியே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது என்று சாலி கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlp7.html
மைத்திரிபால மீது 100 வீத நம்பிக்கை இல்லை: ஜேவிபி
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 02:11.19 AM GMT ]
மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பார் என்ற நூறுவீத நம்பிக்கை தமக்கு இல்லை என்று ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் வாதத்தை முன்வைத்த அவர், ஏற்கனவே இவ்வாறான உறுதிமொழிகள் வழங்கப்பட்டு அவை யாவும் பின்னர் மீறப்பட்டமையை ஹேரத் சுட்டிக்காட்டினார்.
எனவேதான் மைத்திரிபாலவை ஏற்றுக்கொள்வதில் இன்னும் ஜே.வி.பி விலகி நிற்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ள அவர்களிடம் பொறுப்புக் கூறமுடியாத நிலையிலேயே ஜேவிபி இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்தவில்லை என்று ஜே.வி.பியின் முன்னாள் பிரசார செயலரும் இந்தாள் அரசாங்க அமைச்சருமான விமல் வீரவன்ச கூட்டம் ஒன்றின்போது குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlp6.html
தமது செய்தியின் நம்பகத்தன்மையில் உறுதி! மன்னிப்பு கோரப்போவதில்லை!- ராவய
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 02:08.51 AM GMT ]
தமது செய்திக்காக மன்னிப்பு கோரப்போவதில்லை என்று இலங்கையின் முன்னணி சிங்கள விமர்சன செய்தித்தாளான ராயவ அறிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் ராவய வெளியிட்ட செய்தி தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக இலங்கையின் அரச புலனாய்வுப்பிரிவினர் எச்சரித்திருந்தனர்.
எனினும் தமது செய்;தியின் நம்பகத்தன்மை, துல்லியம் என்பவற்றில் தாம் உறுதியாக இருப்பதாக ராவய செய்தித்தாளின் ஆசிரியர் லசந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அரச புலனாய்வுப்பிரிவினர் வழக்கு தாக்கல் செய்வதை எதிர்ப்பார்த்திருப்பதாகவும் அவர் சவால் விடுத்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச 41 சதவீத வாக்குகளையே பெறுவார் என்றும், மைத்திரிபால சிறிசேன 59 சதவீத வாக்குகளை பெறுவார் என்று அரச புலனாய்வு பிரிவினர் ஜனாதிபதிக்கு அறிக்கை அளித்திருப்பதாக ராவய செய்தி வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து அரச புலனாய்வுப்பிரிவின் தலைவர் பொலிஸ் அதிகாரி சந்திரா வாகிஸ்ட பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும் ராவய செய்தி வெளியிட்டிருந்தது.
இதேவேளை அரச புலனாய்வுப்பிரிவின் தலைவர் வாகிஸ்டவும் தாம் இடமாற்றம் செய்யப்படவில்லை என்றும், தேர்தல் தொடர்பில் அறிக்கை ஒன்றை கையளிக்கவில்லை என்றும் மறுப்பை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlp5.html

Geen opmerkingen:

Een reactie posten