தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 november 2014

ராவய பத்திரிகையை விலைக்கு வாங்கும் அரசாங்கம்!

பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் இடது நிலையம்!
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 08:57.30 AM GMT ]
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரி தலைவர்கள் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க தீர்மானித்துள்ள நிலையில், ஏனைய அனைவரும் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என தீர்மானித்துள்ளனர்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்களை கொண்ட இடது நிலையம் அமைப்பு கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளது.
இங்கு கருத்து வெளியிட்ட கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மூன்று இடதுசாரி தலைவர்கள் தமது அமைச்சு பதவிகளை தக்கவைத்து கொள்வதற்காக மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmpy.html


600 மில்லியன் ரூபாவுக்கு தன்னை வாங்க எதிர்க்கட்சி முயற்சிக்கிறது என்கிறார் விமல் வீரவன்ஸ
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 09:07.47 AM GMT ]
எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைந்தால், தனக்கு 600 மில்லியன் வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களை எதிர்க்கட்சியில் இணைக்கும் ஒப்பந்தம் ஒன்று செயற்படுத்தப்பட்டு வருகிறது.

பிரதியமைச்சர் வீரகுமார திஸாநாயக்கவை எதிர்க்கட்சியில் இணைக்க 25 மில்லியன் ரூபா பணமும் கொழும்பில் தொடர்மாடி வீடமைப்பு தொகுதியில் வீடொன்றும் வழங்கப்படும் என்ற பேரம் பேசப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வீரவன்ஸ கூறியுள்ளார்.

எனினும் விமல் வீரவன்ஸ போன்றவர்களை 5 சதத்தை கொடுத்தும் வாங்க எவரும் தயாரில்லை என பொது எதிர்க்கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதியை தோற்கடிக்க செய்யக்கூடிய அனைத்தையும் செய்யத்தயார்: லால்காந்த
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 09:27.59 AM GMT ]
ஜனாதிபதியை தோற்கடிக்க செய்யக்கூடிய அனைத்தையும் செய்யத் தயார் என ஜே.வி.பி.யின் மாகாணசபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க வேண்டியது மிகவும் அவசியமானது.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னரும் அதன் பின்னரும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய வேண்டியது மிகவும் அவசியமானது.
ஜே.வி.பி கட்சி கடந்த காலங்களிலும் இதற்காக பல்வேறு அர்ப்பணிப்புக்களை செய்துள்ளது.
அன்று சந்திரிக்கா பண்டாரநயாக்க நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்து ஆட்சி பீடம் ஏறினார்.
எனினும் அதனை செய்யவில்லை. தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஷவும் இவ்வாறான வாக்குறுதி அளித்து ஆட்சியை கைப்பற்றினார். எனினும் நிறைவேற்று அதிகாரம் ரத்து செய்யப்படவில்லை.
நபர்கள் தொடர்பில் நம்பிக்கை வைக்காது நாடாளுமன்ற முறைமையின் ஊடான அதிகாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே நாம் கற்றுக்கொண்ட பாடமாகும்.
எனவே ஜனாதிபதி தேர்தலை விடவும் எங்களுக்கு நாடாளுமன்ற தேர்தல் ஒன்றே அவசிப்படுகின்றது.
அரசியல் அமைப்பில் திருத்தங்களை செய்யும் அதிகாரம் மக்களுக்கே காணப்படுகின்றது.
இந்த ஜனாதிபதி தேர்தல் சட்ட விரோதமானது எனினும் தேர்தல் நடத்த முயற்சிக்கப்படுகின்றது.
இந்த ஜனாதிபதியை தோற்கடிக்க நாட்டின் சகல சக்திகளுடனும் ஒன்றிணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம் என கே.டி. லால்காந்த சிங்கள பத்திரிகையொன்றுக்கு நேர் காணல் வழங்கியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmp0.html


மைத்திரிக்கு எதிரான மகிந்தவின் கோப்பு நடவடிக்கை ஆரம்பம்
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 09:35.54 AM GMT ]
எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைந்துள்ள ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தொடர்பில் தன்னிடம் இருக்கும் கோப்புகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதில்லை என கூறி வரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அந்த பொறுப்பை தனக்கு நெருக்கமான சட்டத்தரணிகள் குழுவிடம் ஒப்படைத்துள்ளார்.
பிம்சர திஸாநாயக்க என்ற சட்டத்தரணி இந்த கோப்புகள் சம்பந்தமாக இன்று மாலை சினோர் ஹொட்டலில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
இதுகுறித்து ஊடகம் ஒன்று அவரிடம் வினவிய போது, 2010 ஆம் ஆண்டு முதல் ஒரு நபருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை குறித்து இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தன்னிடம் உள்ள பல கோப்புகளில் ஒன்றை மட்டுமே தான் இன்று வெளியிட உள்ளதாகவும் ஊடக சந்திப்புக்கு கிடைக்கும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் ஏனைய கோப்புகளை வெளியிடுவது பற்றி தீர்மானிக்கப்படும் எனவும் பிம்சர திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmp1.html


ராவய பத்திரிகையை விலைக்கு வாங்கும் அரசாங்கம்
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 09:53.59 AM GMT ]
ராவய சிங்கள பத்திரிகையின் இந்த வார வெளியிட்டை மொத்தமாக கொள்வனவு செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதாக தெரியவருகிறது.
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள பத்திரிகை விற்பனை முகவர் நிலையங்ளுக்கு இன்று காலை சென்ற புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறிக்கொண்ட சிலர், ராவய பத்திரிகை விநியோகிக்கும் ஏனைய முகவர்களின் விபரங்கள் மற்றும் பத்திரிகை தொகை பற்றி தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இன்று வெளியாகியுள்ள இந்த வார ராவய பத்திரிகை, புலனாய்வுப் பிரிவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு தனது பிரதான தலைப்புச் செய்தியை வெளியிட்டுள்ளது.
மைத்திரிக்கு 59 வீதம் மகிந்தவுக்கு 41 வீதம் எனக் கூறிய புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி நீக்கம் என்ற தலைப்பில் அந்த தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ஷவை விட மைத்திரிபால சிறிசேன அதிகமான வாக்குகளை பெறுவார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Geen opmerkingen:

Een reactie posten