தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 november 2014

நான் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தி உண்மையில்லை! அனந்தி!



யாழில் குவிக்கப்படும் படையினரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 11:39.43 AM GMT ]
யாழ்.பல்கலைக்கழகத்தின் சுற்றாடலில் நிலை கொண்டிருக்கும் படையினர் வெளியேற்றப்பட்டு மாணவர்களுடைய இயல்பான கற்றல் செயற்பாடுகளுக்கு உதவியளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது  தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்த நிலையிலும், நேற்றயதினம் படையினரின் நடமாட்டம் மற்றும் சோதனை, பதிவு நடவடிக்கைகள் அதிகளவில் காணப்பட்டது.
தமிழீழ மாவீரர் நாள் இன்றைய தினம் என்பதனாலும், நேற்றய தினம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடைய பிறந்த நாள் என்பதனாலும் கடந்த 24ம் திகதி தொடக்கம் யாழ்.மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் படையினர் மற்றும் புலனாய்வாளர்களின் நெருக்குதல்கள் அதிகரித்திருந்திருந்ததாக மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டிவந்தனர்.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் யாழ்.பல்கலைக்கழகத்தில் நினைவு கூறப்படுவதனால் கடந்த நேற்று முன்தினம் 25ம் திகதி தொடக்கம் பல்கலைக்கழக சுற்றாடலில் படையினரின் நடமாட்டம் அதிகரித்திருந்ததுடன், புலனாய்வாளர்களின் நடமாட்டமும் அதிகரித்திருந்தது. இதனையடுத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், நேற்று முன்தினம் மாலை விடுத்திருந்த ஊடக அறிக்கையில் பல்கலைக்கழக சுற்றாடலில் படையினரின் அதிகரித்த நடமாட்டத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும், இலங்கையின் மற்றைய பல்கலைக்கழகங்களில் இல்லாத இந்நடவடிக்கை யாழ்.பல்கலைகழகத்தில் மட்டும் எதற்காக  மேற்கொள்ளப்படுகின்றது என கேள்வி எழுப்பியது.
குறித்த படையினரின் நடமாட்டத்தை குறைத்து மாணவர்களின் இயல்பான கற்றல் செயற்பாடுகளுக்கு உதவ வேண்டும். எனவும் கோரிக்கை விடுத்திருந்தது. மேலும் அன்றைய தினமே கலைப்பீடம் மற்றும் விஞ்ஞான பீடம் ஆகியவற்றுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையிலும் தொடர்ச்சியாக அதிகளவு படையினர் மற்றும், புலனாய்வாளர்கள் பல்கலைக்கழக சுற்றாடலில் நிலைகொண்டிருந்ததுடன், சோதனை மற்றும் பதிவு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தமையினைக்
காணமுடிந்தது. குறிப்பாக பல்கலைக்கழகத்திற்குள் சென்றுவரும் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், ஊழியர்களையே அதிகளவில் பதிவு செய்தமையினைக் காணமுடிந்தது.
மேலும் குறித்த படையினரின் நடமாட்டத்துடன் புலனாய்வாளர்களின் நடமாட்டமும் அதிகளவில் காணப்பட்டதுடன், கடந்த காலத்தை விடவும் இவ்வருடம் குறித்த படையினரின் நடமாட்டம் அதிகளவு காணப்பட்டமை இங்கே குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று நேற்றய தினம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும், அதிகளவில் வீதிகளிலும், பொது இடங்களிலும் கூடிய படையினர் வீதி சோதனைகளையும், திடீர் சோதனை நடவடிக்கைகளையும் மேற்கொள்டிருந்தமையினைக் காண முடிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.  
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnt3.html
இடதுசாரிகளின் பொது வேட்பாளர் துமிந்த நாகமுவ
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 11:48.30 AM GMT ]
இடதுசாரி கட்சியின் பொது வேட்பாளராக முன்னிலை சோசலிசக் கட்சியின் துமிந்த நாகமுவ போட்டியிட உள்ளதாக அந்த கட்சியி்ன பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
இடதுசாரி கட்சிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவில் துமிந்த நாகமுவை வேட்பாளராக நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
நீண்டகால பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் மாற்று வேட்பாளரை நிறுத்துவது என இடதுசாரி கட்சிகள் தீர்மானித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவும் போட்டியிட உள்ளனர்.
ஆரம்பத்தில் கொள்கை ரீதியான காரணங்களின் அடிப்படையிலேய ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விவாதம் இருந்தது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்பான பேச்சுவார்த்தையில் நாங்களும் பங்கேற்றோம். ஆனால் பின்னர் அது வேட்பாளர் தொடர்பான விவாதமாக மாறியது.
இதனடிப்படையில், மகிந்தவுக்கு மூன்று முறை முடியாது, பொது வேட்பாளர் யார், ரணிலா?. இடதுசாரிகளின் பொதுவேட்பாளர் தோழர் குமார் குணரட்னமா? போன்ற கேள்விகள் தான் முன்வைக்கப்பட்டன.
தற்போது அரசாங்கம் ஏகாதிபத்திய எதிர்ப்பு பற்றி பேசுகிறது. ஆனால், அரசாங்கம் ஏகாதிபத்தியவாதிகளின் தேவைக்காக கொழும்பு நகரில் வாழ்ந்த ஆயிரக்கணக்காக நகர தொழிலாளர்களை விரட்டியது. இலங்கையை சர்வதேச ஏகாதிபத்தியவாதிகளின் பொறியாக மாற்றியது.
2006 ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தின் பயிற்சிக்காக துறைமுகங்களை வழங்க இணக்கத்திற்கு வந்து ஏகாதிபத்திய வேலைத்திட்டத்தை நாட்டுக்குள் செயற்படுத்திக்கொண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பை உருவகித்து காட்டுகின்றனர்.
எதிர்க்கட்சி ஜனநாயகம், நல்லாட்சி போன்ற விடயங்கள் பற்றி பேசுகிறது. 80 ஆம் ஆண்டுகளின் இறுதியில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளை கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்நோக்கி ரணில் விக்ரமசிங்க இதனை பேசுகிறார்.
1994 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிய ஒழிப்பதாக எழுத்து மூலம் உறுதி வழங்கிய சந்திரிக்கா ஜனநாயகம் பற்றி பேசுகிறார் எனவும் புபுது ஜாகொட மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnt4.html
நான் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தி உண்மையில்லை! அனந்தி
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 11:33.46 AM GMT ]
தான் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை எனவும்  அச்செய்தி திட்டமிட்டு வெளியிடப்பட்ட வதந்தியென்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் பிற்பகல் அனந்தி சசிதரன் யாழ்.மாவட்டத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை யாழ்.குடாநாட்டில் உருவாக்கியிருந்தது.
இத னையடுத்து சிலர் அவருடைய தொலைபேசிக்கு அழைப்பை மேற்கொண்டபோதும் அழைப்பு கிடைக்காத நிலையில் கைது செய்யப்பட்டது உறுதி என பலர் நம்பியினர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தை அறிந்து பிற்பகல் யாழ்.நகர் பகுதியில் ஊடகவியலாளர்களை நேரில் சந்தித்த அனந்தி சசிதரன், தன்னை கைது செய்ததாக வெளியான செய்தி உண்மையில்லை என மறுத்துள்ளதுடன், நேற்று முன்தினம் தொடக்கம் தன்னுடைய வீடு மற்றும் அலுவலகம் தொடர்ச்சியான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் தன்னுடைய நடமாட்டம் கண்காணிக்கப்படுவதாகவும் கூறினார்.
மேலும் தன்னை கைது செய்வதற்கு எவ்விதமான காரணங்களும் அரசாங்கத்திடம் இருக்க முடியாது என அவர் கூறியதுடன், என்னை கைது செய்ததாக கட்டுக்கதை பரப்பியவர்களும் அரச புலனாய்வாளர்களாகவே இருக்க முடியும் எனத் தெரிவித்தார்.
அத்துடன், பலர் என் தொலைபேசிக்கு அழைப்பு எடுத்துள்ளார்கள். நான் வெளி இடம் ஒன்றுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தமையினால் அந்த அழைப்பை என்னால் எடுக்க முடியவில்லை.
எனினும் பின்னர் அழைப்பு எடுத்தவர்களுக்கு மீண்டும் அழைப்பை எடுத்து விடய த்தை கூறியிருப்பதாகவும் அனந்தி கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnt2.html

Geen opmerkingen:

Een reactie posten