[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 04:55.56 AM GMT ]
இந்திய அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை முதல், 43 நாடுகளின் குடிமக்களுக்கு இணையத்தள வீசா முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
62 டொலர் கட்டணத்தைச் செலுத்தி, 30 நாட்களுக்கான இந்த வீசா இணையத்தளம் மூலம் பெறமுடியும்.
இந்தியாவின் சென்னை உள்ளிட்ட 9 விமான நிலையங்களின் ஊடாக இந்த வீசாவுடன் இந்தியாவுக்குள் நுழைய முடியும்.
இதில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், இஸ்ரேல், ஜேர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட 43 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எனினும், இலங்கை, ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈராக், பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகளின் குடிமக்களுக்கு இந்த வீசா வழங்கும் திட்டம் பரிசீலிக்கப்படாது என்று இந்தியா ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்தநிலையில், இலங்கையை இந்த இணையத்தள வீசா திட்டத்தில் உள்ளடக்கப்படாதது குறித்த இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவிலுள்ள இந்த வீசா வழங்கப்பட்டால் பௌத்த ஆலயங்களுக்குச் செல்லும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்.
இந்தியா இந்த திட்டத்தில் இலங்கையைப் புறக்கணித்திருந்தாலும், இந்தியர்களுக்கு இலங்கை தொடர்ந்தும், வருகை வீசா வழங்கும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlq2.html
குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்! இல்லையேல் வீட்டை முற்றுகையிடுவோம்!- தமிழர் படை எச்சரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 05:31.16 AM GMT ]
இதுதொடர்பாக அந்த அமைப்பின் பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ் இனத்தின் விடுதலை போரட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும் ஒட்டு மொத்த தமிழர்களை அவமானப்படுத்தும் வகைளும் தமிழுக்கும் தமிழர்க்கும் தமிழ் மண்ணுக்கும் எந்த வித உழைப்பும் தியாகமும் செயயாமல் பிழைக்க வந்த வெளிமாநில பெண்ணான சினிமா கவர்ச்சி நடிகை குஷ்பு, தமிழ் தமிழர் வரலாறு கடுகளவும் தெரிந்து கொள்ளாமல் ஈழ விடுதலை போராளிகளை தீவிரவாத இயக்கம் என்று கூறியிருக்கிறார்.
இது கடும் கண்டனத்திற்கு உரியது. உலக தமிழர்களை மிகுந்த மனவேதனை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஐரோப்பிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பு அல்ல என்று கூறி அவற்றின் மீதான தடையை அண்மையில் நீக்கியுள்ளது.
இந்தியாவிலும் வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்த வேளையில் சினிமா கவர்ச்சி நடிகை குஷ்பு ஈழ விடுதலை போராளிகளை தீவிரவாதிகள் என்று அரசியல் ஆதாயத்திற்காக கூறுகிறார்.
இதுபோன்ற கருத்துக்களை வெளியிட்டதற்கு பகிரங்க மனிப்பு கோரவேண்டும்.
மேலும் சென்னை ஐ ஐ டி யில் மாணவர்கள் முத்தப் போராட்டம் என்ற பெயரில் நமது தமிழ் பண்பாட்டை சீரழிக்கிறார்கள். இதற்கு ஆதரவாக அவர் அறிக்கையும் விடுகிறார்.
தமிழர் பண்பாடு, நாகரீகம், வாழ்வியல் நெறி, அவற்றின் தொன்மை ஆகியவற்றை சிதைக்கும் வகையில் பேசி வருகிறார். இதை வன்மையாக தமிழர் முன்னேற்ற படை கண்டிக்கிறது.
குஷ்பு மன்னிப்பு கோராவிடில் குஷ்பு வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
மாற்று மாநிலத்திலிருந்து பிழைக்க வந்த குஷ்புக்கு என்ன தெரியும்? வேல்முருகன் ஆவேசம்!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே என நடிகை குஷ்பு தெரிவித்ததற்கு, மாற்று மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு பிழைப்புக்காக வந்த குஸ்புவுக்கு என்ன தெரியும் என வேல்முருகன் கேள்வியெழுப்பியுள்ளார்.
விடுதலைப் புலிகள் ஒரு தீவிரவாத இயக்கமே: குஷ்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே என நடிகையும், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாடு முழுவதும் தெருத்தெருவாக சென்று காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்வேன். பொதுவாக ஆசைக்காக அரசியலுக்கு வரக் கூடாது. கட்சிக்கும் நாட்டுக்கும் உழைப்பதற்காக அரசியலுக்கு வர வேண்டும்.
திமுகவில் இருந்து ஏன் வெளியேறினேன் என்று அப்போதும் சொல்லவில்லை. இன்றும் சொல்லமாட்டேன். நாளை கேட்டாலும் சொல்லமாட்டேன். நான் பதவிக்காக காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை.
காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஈழத் தமிழருக்கு எதிரானதாக இருந்தது இல்லை. காங்கிரஸைப் பொறுத்தவரை அது தீவிரவாதிகளுக்கு எதிரான ஒரு கட்சி. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நிச்சயமாக ஒரு தீவிரவாத இயக்கம்தான்.
தீவிரவாதத்தை கடைசி மூச்சு உள்ளவரை எதிர்ப்போம். காங்கிரஸை ஈழத் தமிழருக்கு எதிரான கட்சியாக சிலர் சித்தரித்துள்ளனர். இவ்வாறு நடிகை குஷ்பு தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlq5.html
வைகோ மீது பாஜகவுக்கு திடீர் ஆத்திரம் ஏன்? பின்னணியில் பரபரப்பு தகவல்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 05:50.32 AM GMT ]
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மதிமுக இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது. தேர்தலில் மதிமுக அனைத்து இடங்களிலும் படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் பாஜகவை வைகோ விமர்சனம் செய்ய தொடங்கினார். ராஜபக்சவை பிரதமர் தனது பதவியேற்பு விழாவுக்கு அழைத்ததை கண்டித்தார்.
இதன்பிறகு இலங்கை மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் செல்லும் போதெல்லாம் மத்திய அரசை வைகோ வறுத்தெடுக்க தவறுவதில்லை.
ஆனால், மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐவரை மீட்க ராஜபக்சவுடன் தொலைபேசியில் மோடி பேசியதையும், அதன்பிறகு அவர்கள் மன்னிப்பு அளிக்கப்பட்டு தாயகம் திரும்பியதையும் கூட வைகோ விமர்சனம் செய்தார்.
மீனவர்களை காப்பாற்றினால் கூட திட்டுகிறாரே என்ற கோபம் பாஜக வில் உள்ளோருக்கு ஏற்பட்டது.
மீனவர்களை சுட்டுக் கொன்ற போது நடவடிக்கை எடுக்காத காங்கிரசையும் திட்டுகிறார், மீனவர்களை காப்பாற்றிய பாஜக வையும் திட்டுகிறார். இவர் மீனவர்கள், இலங்கை தமிழர் விவகாரத்தை வைத்து வேறு ஏதோ காய் நகர்த்துகிறார் என்ற சந்தேகம் பாஜக வினருக்கு வந்துள்ளது.
இலங்கைக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவுக்கு வரலாறு மகுடம் சூட்டும் என்று புகழும் வைகோ, மீனவர்களை காப்பாற்றியதற்காக பாஜகவுக்கு நன்றி கூட சொல்லவில்லை என்ற ஆதங்கம் தமிழக பாஜக தலைவர்களிடம் உள்ளது.
பாஜகவை தமிழக மக்களிடம் நல்ல பெயர் வாங்க விட்டுவிடக்கூடாது என்று வைகோ கங்கணம் கட்டிக்கொண்டு அவதூறுகளை பரப்பி வருவதாக சந்தேகிக்கும் பாஜகவினர், அதன் பின்னணியில் வைகோவின் புதிய கூட்டணி திட்டம் இருப்பதையும் கவனிக்க தவறவில்லை.
அதாவது, அடுத்த சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழகத்தில் பாஜகவை வளர்த்துவிடக் கூடாது என்பதற்காக, விஜயகாந்த், கம்யூனிஸ்டுகள், ஆம் ஆத்மி, வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வைகோ திட்டமிட்டுள்ளதாக பாஜகவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக அல்லாத தனி கூட்டணியை உருவாக்க வைகோ முயன்றுவருகிறார் என்ற தகவல் ஊடகங்களில் கசிந்தன. வைகோவின் இந்த திட்டத்தால் அதிர்ச்சியடைந்துள்ள பாஜக தலைவர்கள் கூட இருந்தே நம்மை குறை சொல்லும் வைகோ, கடைசி நேரத்தில் நம்மை கை கழுவ தயாராகிவிட்டார்.
எனவே நாமே அவரை வெளியேற்றலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இந்த கோபம்தான் சமீபத்தில் எச்.ராஜா மூலமாக வெளிப்பட்டது.
வைகோ நாவை அடக்கி பேசாவிட்டால் பாஜக தொண்டர்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் என்று எச்.ராஜா எச்சரித்திருப்பது இந்த பின்னணியில்தான் என்று கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlq6.html
Geen opmerkingen:
Een reactie posten