தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 november 2014

இடையூறு வந்தால் நடுவீதியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்! மனோ கணேசன் எச்சரிக்கை!


மன்னாரில் கடல் நீரில் மூழ்கும் கிராமங்கள்: ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 10:22.32 AM GMT ]
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழையினால் இதுவரை 1, 428 குடும்பங்களைச் சேர்ந்த 5, 658 பேர் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி மன்னார் பிரதேச செயலக பிரிவில் 758 குடும்பங்களைச் சேர்ந்த 2, 903பேரும், நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேரும், மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் 658 குடும்பங்களைச் சேர்ந்த 2, 714 பேரும் இடம் பெயர்ந்த நிலையில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இவர்களுக்கு தேவையான உலர் உணவு மற்றும் அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் இன்று பல கிராமங்கள், கடல் நீர் உட்புகுந்ததால் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்தவுக்கு நெருக்கமான பாதாள உலக தலைவருக்கு சிறைத் தண்டனை
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 10:37.54 AM GMT ]
ஜே.வி.பியின் கூட்டம் ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து பெண் உட்பட மூன்று பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஜூலம்பிட்டியே அமரே என்பவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கட்டுவன ஓபொட பிரதேசத்தில் இரண்டு பேர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து காயம் ஏற்படுத்தியமை தொடர்பில் அமரே குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை – கட்டுவன பிரதேசத்தில் இந்த சுட்டுச் சம்பவம் இடம்பெற்றது.
ஜூலம்பிட்டியே அமரே என அழைக்கப்படும் கீகனன கமகே அமரசிறி என்ற இந்த பாதாள உலக தலைவருக்கு தங்காலை மேல் நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது.
ஜூலம்பிட்டியே அமரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நெருக்கமான பாதாள உலக தலைவர் எனக் கூறப்படுகிறது.
2002 ம் ஆண்டு தங்காலை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றமை, கொலைகள் உட்பட பல குற்றச்சாட்டுக்கள் அமரே மீது சுமத்தப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி ஜே.வி.பியின் கட்டுவன கூட்டத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இருவரை கொலை செய்ததாக, ஜே.வி.பியும் அமரே மீது குற்றம் சுமத்தியிருந்தது.
அமரே 2012 ஜூன் மாதம் 20 ஆம் திகதி தங்காலை மேல் நீதிமன்றத்தில் சரணடைந்ததை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmp4.html


மலையகத்தில் இரு வேறு இடங்களில் விபத்துக்கள்: மூவர் காயம்
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 11:25.10 AM GMT ]
ஹட்டனிலிருந்து வெலிஓயா பிரதேசத்தை நோக்கி சென்ற வான், கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற லொறி ஒன்றுடன்  மோதி விபத்துக்குள்ளானதில் வான் சாரதி சிறு காயத்திற்குள்ளாகியுள்ளார்.
இவ்விபத்து ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் பகுதியில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மலையகத்தில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்படுகின்றமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனா்.
இதேவேளை மஸ்கெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று இன்று காலை வேளையில் தியகல கடவளை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு அருகில் மரம் ஒன்றின் மீது மோதியதில் இருவா் காயமடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.
இதனால் வாகன சாரதிகளை வாகனங்களை மிகுந்த அவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனா்.

இடையூறு வந்தால் நடுவீதியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்! மனோ கணேசன் எச்சரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 11:32.52 AM GMT ]
பொது எதிரணி கட்சிகள் மற்றும் அமைப்புகள் மத்தியிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு விகாரமகாதேவி பூங்கா திறந்தவெளி அரங்கில் நடைபெறவுள்ளது.
வண. சோபித தேரர், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் உட்பட கையெழுத்திடும் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர்  மனோ கணேசன் தெரிவித்தார். 
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 
இந்நிகழ்வை நடத்த விடாமல் தடுக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்ற நிலைமையில், தற்போது விகாரமகாதேவி பூங்கா திறந்தவெளி அரங்கில் இந்நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
சோபித தேரர் தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தில் இணைந்துள்ள கட்சிகள், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகள் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்து இடுவார்கள்.
இந்நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் நோக்கில் நடைபெறும் எதிரணியின் இந்த நிகழ்வை தடுத்திட பல்வேறு சக்திகள் இடையூறு செய்து வருகின்றன. இந்த இடையூறுகள் எங்களை நிறுத்திவிட முடியாது என்பதுடன் அவசியமானால் நடு வீதியில் அமர்ந்தும் இந்நிகழ்வை நடத்திட, பொது எதிரணி  தயாராக இருக்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmp6.html
 

Geen opmerkingen:

Een reactie posten