தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 november 2014

மஹிந்தவுக்கு ஆதரவில்லை! மைத்திரியிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்!- ஜாதிக ஹெல உறுமய

மழை கொண்ட காலநிலை நாட்டின் பல இடங்களில் தொடரும்! கடல் கொந்தளிப்பாக இருக்கும்
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 04:19.53 PM GMT ]
தற்போது காணப்படும் மழை கொண்ட காலநிலை நாட்டின் பல இடங்களில் தொடரும். மழை அல்லது இடியுடன் கூடிய மழை நாட்டின் அனேகமான பகுதிகளில் காணப்படும் என வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களத்தின் மட்டக்களப்பு நிலைய பொறுப்பாளர் க.சூரியகுமாரன் தெரிவித்தார். 
சில பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டிலும் சூழவள்ள கடல் பிராந்தியங்களிலும் காற்றின் வேகம் (மணிக்கு 70 கிலோமீற்றர்) அதிகரித்து வீசலாம்.
கடல் பிராந்தியங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இலங்கைத் தீவை சுற்றியுள்ள கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை காணப்படும்.
கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது சில சந்தர்ப்பங்களில் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசுவதன் காரணத்தினால் இந்தக் கடல் பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnv0.html
யாழ். மாவட்டக் கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் நியமனம்!
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 04:26.06 PM GMT ]
யாழ். மாவட்டக் கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்தள்ளது.
இந்த நியமனம் நாளை வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றது என்றும், அல்விஸ் டிசெம்பர் 10 திகதி முதல் புலனாய்வு படைப்பிரிவின் பொறுப்பையும் ஏற்கவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாகப் பணியாற்றிய உதய பெரேரா கொழும்பு, இராணுவ படைத் தலைமையகத்தின் செயலாளர் நாயகமாக எதிர்வரும் முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnv1.html
மஹிந்தவுக்கு ஆதரவில்லை! மைத்திரியிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்!- ஜாதிக ஹெல உறுமய
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 04:35.17 PM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது.
கட்சியின் செயலாhளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார்.
தமது 35 யோசனைகளையும் மஹிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் தமது யோசனைக்கு பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து சாதகமான பதிலை எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தமது யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் குழுவுடன் இணைந்துசெயற்பட தாம் தயாராக இருப்பதாக இன்று மாலை புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் இன்று வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.
வெள்ளை உடையணிந்த குற்றவாளிகளால் இந்தநிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் கடனை பெற்று அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏன் என்று ரணவக்க கேள்வி எழுப்பினார்.
இன்று நாட்டில் பெற்றோல் ஒரு லீற்றரில் இருந்து 48 ரூபா களவாடப்படுகிறது.
போர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நாட்டு தலைவர் பதவியில் இருந்தாலோ இல்லாவிட்டாலோ சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்வதை யாரும் அனுமதிக்கமுடியாது.
எனினும் 2009ம் ஆண்டு போருக்காக உதவிசெய்த நாடுகள் ஏன் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளில் வாக்களித்தன.
இதற்கு சிலரின் சொந்த வியாபாரங்களுக்காக வெளிநாட்டுக்கொள்கையை மாற்றியது காரணமா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை கூட்டத்தில் உரையாற்றிய அத்துரலியே ரத்தன தேரர், ஜனாதிபதி தேர்தல் போதைவஸ்து வியாபாரிகளுக்கு எதிரான தேர்தலாகும். எனவே அதில் வெற்றிபெறுவோம் என்று குறிப்பிட்டார்.
ஜாதிக ஹெல உறுமய பணத்துக்கு அடிபணியாமல் வெற்றி கிடைக்கும் வரை தமது பிரசாரங்களை மேற்கொள்ளும் என்று ரத்தன தேரர் தெரிவித்தார்.
இன்று மஹிந்த ராஜபக்சவின் சுவரொட்டிகள் மின்கம்பத்தில் தொங்கவிடப்பட்டுள்ளன.
மஹிந்த ராஜபக்ச மக்கள் மனங்களில் இல்லாமை காரணமாகவே மின்கம்பத்தில் அவரின் புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டுள்ளதாக ரத்தன தேரர் சுட்டிக்காட்டினார்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnv2.html

Geen opmerkingen:

Een reactie posten