தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 november 2014

அரசாங்கத்தின் போலிப் பிரச்சாரங்களுக்கு மக்கள் ஏமாறக் கூடாது: சஜித் பிரேமதாச!

பாக்.ஜனாதிபதி- இலங்கை விமானப்படைத் தளபதி சந்திப்பு!
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 03:26.56 AM GMT ]
பாகிஸ்தானிய ஜனாதிபதி மன்மூன் ஹுசைன் அட் அய்வான் இ சதார் நேற்று இலங்கையின் விமானப்படை தளபதி எயார் மார்சல் கோலித அரவிந்த குணதிலக்கவை சந்தித்துள்ளார்.
இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் அதியுயர் முக்கியத்துவம் வாய்ந்த ஒத்துழைப்பு குறித்து அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானின் டெய்லி டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு இரண்டு நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் அமையவேண்டும் பயங்கரவாத ஒழிப்பில் இலங்கையின் அனுபவத்தை பாகிஸ்தான் வரவேற்பதாகவும் பாக்கிஸ்தானிய ஜனாதிபதி இலங்கை விமானப்படை தளபதியிடம் குறிப்பிட்டுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmszBRcKZnxz.html


அரசியல் கட்சிகளையும் இல்லாமல் செய்யும் நோக்கிலேயே மஹிந்த செயற்படுகின்றார்: மைத்திரி
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 03:34.43 AM GMT ]
நாட்டின் சகல அரசியல் கட்சிகளையும் இல்லாமல் செய்யும் நோக்கிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செயற்பட்டு வருவதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநயாகத்தை முற்றுமுழுதாக அழித்து விடவே ஜனாதிபதி மஹிந்த மூன்றாம் தவணைக்காக போட்டியிடுகின்றார்.
ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நான் ஜனாதிபதியாவது நிச்சயம்.
சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் கடுமையான நெருக்கடிகளை எதிர்நோக்கியிருந்தேன்.
எனக்கு மட்டுமல்ல இந்த அனுபவம் என்னுடன் வெளியேறிய அமைச்சர் ராஜித சேனாரட்ன உள்ளிட்டவர்கள் மற்றும்அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களுக்கும் இதே நிலைமையே காணப்படுகின்றது.
நாட்டில் இலவச சுகாதார சேவை, இலவசக் கல்வி என்பன முடக்கப்பட்டுள்ளன.
நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பு சுயாதீனமாக இயங்குகின்றதா? பொலிஸார் சுயாதீனமாக இயங்குகின்றார்களா? ஊடக சுதந்திரம் காணப்படுகின்றதா?
நீண்ட காலமாக அரசியலில் ஈடுபட்டு வருகின்ற காரணத்தினால் அரசியல் சேறு பூசல்களுக்கு பழகி விட்டோம்.
நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZnx0.html


அரசாங்கத்தின் போலிப் பிரச்சாரங்களுக்கு மக்கள் ஏமாறக் கூடாது: சஜித் பிரேமதாச
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 04:09.35 AM GMT ]
அரசாங்கத்தின் போலிப் பிரச்சாரங்களுக்கு மக்கள் ஏமாந்து விடக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச விரக்தியில் இருப்பதாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது.
தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பீதி காரணமாக அரசாங்கம் இவ்வாறு பிரச்சாரம் செய்கின்றது.
நான் ரணசிங்க பிரேமதாச என்ற சிறந்த மனிதரின் மகன் என்பதனை மக்கள் மறந்து விடக் கூடாது. கொள்கைகளிலிருந்து மாறக்கூடியவர்கள் அல்ல.
ஆளும் கட்சியின் பலர் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசாங்கத்தின் சார்பில் குரல் கொடுப்பவர்களை பாருங்கள்.
அவர்களின் முகங்களில் தோல்வியின் அச்சம் புரயோடியுள்ளது. அவர்களின் அகத்தில் உள்ள அச்சம் முகத்தில் வெளிப்பட்டுள்ளது.
சிங்கங்களைப் போன்று இருந்தவர்கள் இன்று திக்கு திசை அறியாது நிலை குலைந்துள்ளனர்.
எனது தனிப்பட்ட கருத்து எதுவென்றாலும், ஐக்கிய தேசியக் கட்சி கூட்டாக இணைந்து எடுத்த தீர்மானத்திற்கு நான் ஆதரவு வழங்குவேன்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கி, நிறைவேற்று அதிகார பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை பதவியில் அமர்த்துவோம் என சஜித் பிரேமதாச சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZnx1.html



Geen opmerkingen:

Een reactie posten