தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 30 november 2014

போரை வென்றெடுத்த நாட்டை சூறையாட இடமளிக்க முடியாது: எம்.கே.டி.எஸ். குணவர்தன!

ரணிலை பிரதமராக்க மைத்திரியால் எவ்வாறு முடியும்?: ரணவக்க கேள்வி
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 02:26.28 AM GMT ]
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானால் எவ்வாறு ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பார் என்று ஜாதிக ஹெல உறுமய கேள்வி எழுப்பியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கும் போது இது சாத்தியமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஹெல உறுமயவின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மைத்திரிபாலவின் வெற்றியில் நிச்சயமாக பங்கேற்பர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு விடயத்தில் ஜாதிக ஹெல உறுமயவினால் பொதுக்கொள்கையை ஏற்படுத்த முடிந்திருக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlqy.html
அமைச்சர் நவீன் திசாநாயக்க பதவி விலகினார்! பொதுவேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 03:06.46 AM GMT ]
அரச முகாமைத்துவ அமைச்சர் நவீன் திசாநாயக்க, தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆளும் கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வார் என பேசப்பட்ட முக்கிய அமைச்சர்களில் நவீன் திசாநாயக்க முக்கியமானவர்.
அந்த வகையில் இன்று தாம் அமைச்சுப் பதவியை துறப்பதாக அறிவித்துள்ளார்.
மேலும் இதுவரை காலமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட தொகுதி அமைப்பாளராக கடமையாற்றி வந்த நவீன் அந்தப் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
ஆளும் கட்சியில் வகித்து வந்த சகல பதவிகளையும் நவீன் ராஜினாமா செய்துள்ளார்.
நாளை உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சியில் நவீன் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக நவீன் அறிவிப்பு!
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக நவீன் திசாநாயக்க அறிவித்துள்ளார்.
நேற்றிரவு பதவியை ராஜினாமா செய்த நவீன், மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlq0.html

போரை வென்றெடுத்த நாட்டை சூறையாட இடமளிக்க முடியாது: எம்.கே.டி.எஸ். குணவர்தன
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 02:54.51 AM GMT ]
போர் வென்றெடுக்கப்பட்ட நாட்டை சூறையாட இடமளிக்க முடியாது என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகி, எதிர்க்கட்சியில் இணைந்து கொண்ட முன்னாள் பிரதியமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.டி.எஸ். குணவர்தன தெரிவித்துள்ளார். 
ஆளும் கட்சியிலிருந்து வெளியேறினாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகவில்லை.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மீது நம்பிக்கை உண்டு. மைத்திரிபால சிறிசேன வறிய விவசாய குடும்பமொன்றைச் சேர்ந்தவர் என்பதனால் அவருக்கு வறுமை நன்றாகத் தெரியும்.
100 நாட்களுக்குள் நிச்சயமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறமையை ரத்து செய்வோம். நாட்டு மக்களுக்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
போரின் மூலம் விடுவிக்கப்பட்ட நாட்டை ஒரோயொரு குடும்பம் சூறையாட விட முடியாது.
சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பாரியளவில் அநீதிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்ல முயற்சிப்போரை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
பணம் கொடுத்தும் மிரட்டியும் அரசாங்கத்துடன் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர் என முன்னாள் பிரதி அமைச்சர் குணவர்தன சிங்களப் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlqz.html

Geen opmerkingen:

Een reactie posten