தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 november 2014

அரசாங்கத்திலிருந்து வெளியேறும் மாலனி பொன்சேகா?

மகிந்த அணியில் மீதமுள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைவது அல்லது அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வது என தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
ராஜபக்ஷவினர் எந்த வகையிலும் எதிர்பார்க்காது சிலர் அதில் இருப்பதாக கூறப்படுகிறது.
தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட பிரபல சிங்கள திரைப்பட நடிகை மாலனி பொன்சேகாவும் அதில் அடங்குவதாக தகவல் கிடைத்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒரு முறை மாலனி பொன்சேகாவிடம் கேட்டிருந்தார்.
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்கவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கும் நோக்கில் அவர் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார். எனினும் மாலனி பதவி விலக மறுத்து விட்டார்.
பின்னர், அவர் பதவியை இராஜினாமா செய்த போதிலும் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க நாடாளுமன்றத்திற்கு வருவதை நிராகரித்தார்.
இதனையடுத்து பதவி விலகி 24 மணிநேரத்திற்குள் மாலனி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், அரசாங்கத்தின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக மாலனி அரசாங்கத்தில் இருந்து வெளியேற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்கவின் மகனான முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து அரசாங்கத்தில் இருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmw2.html

Geen opmerkingen:

Een reactie posten