யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நம்பிக்கையான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து சுமார் ஒரு மணி நேர கால அவகாசத்தில் அவர் கொழும்பிற்கு விமானப்படை விமான மூலம் அழைக்கப்பட்டுள்ளார்.
இடமாற்றத்திற்கான காரணமேதும் தெரியாத போதும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது நம்பிக்கைக்கு உரியவவரான அவர் கிளிநொச்சியில் இருந்தே யாழ்ப்பாணத்திற்கான இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். முன்னாள் போராளிகளை கொண்ட சிவில் பாதுகாப்பு படையினை தோற்றுவித்தவர் என்ற வகையில் அவர் அனைத்து தரப்பிடையேயும் கவனம் பெற்றிருந்தார்.
இலங்கையின் இராணுவத் தளபதிகளுள் ஒருவரை கடமை நேரத்தில் யாழ்ப்பாணத்தில் புலனாய்வு கட்டமைப்பினையும் கையாள அனுமதித்ததன் மூலம் அவர் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கொண்டுள்ள நம்பிக்கையினை அப்போது அது வெளிப்படுத்தியிருந்தது.
இதனிடையே கொழும்பு மட்டத்தில் தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை கையாளவும் கொழும்பு புலனாய்வு கட்டமைப்பு மைத்திரி தொடர்பில் கோட்டை விட்டதனால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கடும்சீற்றங்கொண்டிருந்தார். இந்நிலையில் அத்தகைய கட்டமைப்பினை மாற்றியமைத்து மீள கட்டியெழுப்ப உதயபெரேரா இடமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என மற்றொரு தகவலும் தெரிவிக்கின்றது.
எனினும் மாவீரர் தின பதற்றங்களின் மத்தியில் இடமாற்றம் நிகழ்ந்தமை அனைத்து மட்டங்களிலும் சர்ச்சைகளினை தோற்றுவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.jvpnews.com/srilanka/88085.html
Geen opmerkingen:
Een reactie posten