தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 november 2014

இலங்கையே அணி திரண்டாலும் தமிழர்களின் உணர்வுகளை அழித்துவிட முடியாது! அனந்தி சசிதரன்!

அதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதி, மைத்திரியை செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டார்: எஸ்.பி.
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 12:44.46 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் அவருக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனவை செயலாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­ன­ரா­கவும் பொதுச் செய­லா­ள­ரா­கவும் நானே பதவி வகிக்­கின்றேன். கட்­சியின் உறுப்­பு­ரிமை மற்றும் பொதுச்செய­லாளர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டுள்ள ­போ­திலும் அவை சட்­ட­ரீ­தியில் நடை­பெ­ற­வில்லை என்று எதி­ர­ணியின் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்திருந்தார்.
ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் அவருக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனவை செயலாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் உயர்கல்வி அமைச்சர் நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவும் பொதுச் செயலாளராகவும் இருக்கின்றேன். என்னை கட்சி உறுப்புரிமை மற்றும் பொதுச் செயலாளர் பதவியலிருந்து நீக்கப்பட்டதாக கூறிய போதும் அவை சட்டரீதியில் நடைபெறவில்லை என தெரிவித்திருக்கும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு விளக்கம் ஒன்றை அளிக்க வேண்டும்.
அதாவது கட்சியின் அங்கத்தவர் ஒருவர் கட்சிக்கு எதிராகவோ அல்லது கட்சிக்கு களங்கம் ஏற்படும்படி செயற்பட்டாலோ அவரை கட்சித் தலைவர் அவருடைய அதிகாரங்களை வைத்து பதவி நீக்கம் செய்ய முடியும். இதனையே ஜனாதிபதியும் செய்துள்ளார்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக அனுரபிரியதர்சன யாப்பா நிமிக்கப்பட்டு, தேர்தல்கள் ஆணையாளருக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அவரும் ஏற்றுகொண்டார்.
இந்நிலையில் தான் தான் கட்சியின் பொதுச் செயலாளர் என கூறிகொண்டிருப்பது அநாகரிகமான விடயம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnpy.html
இலங்கையே அணி திரண்டாலும் தமிழர்களின் உணர்வுகளை அழித்துவிட முடியாது! அனந்தி சசிதரன்
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 12:35.09 AM GMT ]
உன்னத இலட்சியத்திற்காக தங்களுடைய உயிரை அர்ப்பணித்த உத்தமர்களின் நினைவுகளை தமிழ் மக்களது மனங்களில் இருந்து அழித்துவிட ஒட்டுமொத்த இலங்கையே அணி திரண்டு வந்தாலும் முடியாத காரியம் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். 
மேலும் தெரிவிக்கையில்,
எமது இன விடுதலைப் போராட்டத்திற்காக தங்களுடைய உயரிய உயிரையே அர்ப்பணித்த மாவீரர்களுடைய தினம் எப்போதும் மக்கள் மனங்களில் நீங்காத இடம்பிடித்துள்ளது. அவர்களது மன உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும் ஒருபோதும் முடியாது
அன்று தொட்டு இன்றும் உணர்வு பூர்வமாக அனைத்து தமிழ் மக்களும் கொள்கை வேறுபாடு இன்றி புனிதமான மாவீரர் தினத்தை கடைப்பிடித்து வருகின்றார்கள்.
இந்தநிலையில் ஒட்டுமொத்த இலங்கையும் அணி திரண்டு தமிழ் மக்களது மன உணர்வுகளை கட்டுப்படுத்த முயன்றாலும் அது முடியாத காரியம். ஏனெனில் உன்னத இலட்சியத்திற்காக தங்களுடைய உயிரை அர்ப்பணித்த உத்தமர்கள் இவர்கள்.
இவர்களுடைய தியாகம் போற்றப்பட வேண்டியது. அத்துடன் காலம் காலமாக தமிழர்களுடைய சரித்திரத்தில் மாவீரர் தியாகங்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படுவதுடன் எல்லாத்தமிழர் மனங்களிலும் அவர்கள் நீங்காத இடம்பிடித்திருப்பர்.
இந்த புனிதமான நாளை (இன்று) அனைத்து தமிழ் உறவுகளுடனும் சேர்ந்து நானும் அனுஷ்டிக்கின்றேன் என்றார்.
நாளைய தினம் (இன்று) கார்த்திகை 27 மாவீரர் நாள் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படுவது வழக்கம் . எனினும் இராணுவம் குடாநாட்டை 1996 ஆம் ஆண்டில் முற்றுகையிட்டதில் இருந்து சமாதான காலம் வரை யாழ்ப்பாணத்தில் மாவீரர் தினம் பகிரங்கமாக அனுஷ்டிக்கப்படவில்லை.
துயிலும் இல்லங்கள் இடித்தழிக்கப்பட்டு பற்றைக்காடாக காட்சியளித்தன. சமாதான காலத்தில் இருந்து மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கப்படும் வரை யாழ்ப்பாணத்தில் மீண்டும் இராணுவம், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் பாத்திருக்க ஈகைச்சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
எனினும் இறுதிக்கட்ட யுத்தம் 2009ம் ஆண்டு முடிவுக்கு வரும் வரை வன்னிப்பெருநிலப்பரப்பில் பெருமெடுப்பில் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. இன்று இறந்தவர்களை நினைவு கூருவதற்கு கூட பொதுவான நினைவாலயம் என ஒன்றில்லை.
பொது இடங்களில் சுடர் ஏற்ற தடை. மீறி செய்பவர்கள் கைது செய்யப்படுவர். இராணுவக் குவிப்பு, புலனாய்வாளர்களது நடமாட்டம் மற்றும் எச்சரிக்கைப் பிரசுரங்கள் என்பனவற்றை அரசு திட்டமிட்டு செய்து வருகின்றது.
இந்த நிலையிலும் ஏதோ ஒரு வழியில் ஒவ்வொருவரும் மாவீரர் நாளை அனுஷ்டிப்பர் என்பது தான் உண்மை.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZno7.html

Geen opmerkingen:

Een reactie posten