தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 november 2014

சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும்: மீண்டும் வலியுறுத்தும் ஐ.நா. மனிதவுரிமை ஆணையாளர்!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சிறிதுங்க ஜயசூரிய
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 10:04.07 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஐக்கிய சோசலிச கட்சியின் பொது செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இடதுசாரி கட்சிகள் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை தேர்தலில் நிறுத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. முன்னிலை சோசலிசக் கட்சி, நவசமசமாஜ கட்சி உட்பட பல்வேறு இடதுசாரி கட்சிகளுடன இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தைகளில் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முடியாத காரணத்தினால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததாகவும் சிறிதுங்க ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.
சிறிதுங்க ஜயசூரிய, 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYew1.html

சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும்: மீண்டும் வலியுறுத்தும் ஐ.நா. மனிதவுரிமை ஆணையாளர்
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 09:41.39 AM GMT ]
இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மேற்கொண்டுள்ள சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று மனிதவுரிமை ஆணையாளர் சையத் அல் ஹுசைன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்திலேயே ஹுசைன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகள் தொடர்பாக குறிப்பிடத்தக்க விடயங்கள் குறித்து பேசுவதற்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். விசாரணைகளுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கும் திகதி முடிவடைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், அந்த ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் மூடப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் நடத்தும் விசாரணைகளின் போது பக்கச்சார்பின்மை, நேர்மை, சுதந்திரம் போன்றவை பின்பற்றப்படுகின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYew0.html

Geen opmerkingen:

Een reactie posten