தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 november 2014

பிரபாகரன் இன்னும் வீடு திரும்பவில்லை!- பழ.நெடுமாறன் பேச்சு!

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவேன்!- மைத்திரிபால
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 04:32.08 PM GMT ]
தாம் ஆட்சிக்கு வந்தால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப் போவதாக ஜனாதிபதி தேர்தல் பொதுவேட்பாளர்; மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த அவர், இலங்கையின் பொறுப்புக்கூறும் தன்மையின் அடிப்படையில் இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், தாம் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முடிவை எடுத்தால் அவருடன் தனித்த உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டார்.
இது ஏனைய கட்சிகள் அவருடன் ஏற்படுத்திக் கொள்ளும் உடன்பாட்டுக்கு அப்பால் சென்று மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில் அரசாங்க கட்சியின் பல உறுப்பினர்கள் வாராந்த அடிப்படையில் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வார்கள் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதன்போது தெரிவித்தார்.
உள்ளுர் செய்தியாளர்கள், மஹிந்த ராஜபக்ச பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியும் எதனையும் எழுதக்கூடாது என்ற அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmr6.html
சுன்னாகம் குடிநீரில் கழிவு எண்ணெய் வடக்கு முதல்வர் தலைமையில் கலந்துரையாடல்
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 04:22.47 PM GMT ]
சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ள விவகாரம் தொடர்பாக வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று  வலிதெற்குப் பிரதேசசபை மண்டபத்தில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்கள் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், வலிதெற்குப் பிரதேசசபைத் தவிசாளர் தி.பிரகாஷ், மத்திய சுற்றாடல் அதிகாரசபைப் பிரதிப் பணிப்பாளர் விஜிதா சத்தியகுமார், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி அ.ஜெயகுமரன், தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி ப.நந்தகுமார் மற்றும் வலிதெற்குப் பிரதேசசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
இக்கலந்துரையாடலில், சுன்னாகம் பகுதிக் கிணறுகளில் கழிவு எண்ணெய் கலப்பதால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்குத் தற்காலிக மற்றும் நிரந்தரத் தீர்வு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிரதேசசபையும் வடமாகாண விவசாய அமைச்சும் குடிநீரை விநியோகித்து வருகின்ற போதும் அவற்றின் போதாமைகள் குறித்துப் பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மேலதிகமாக நீர்த்தாங்கிகளை வழங்குவதற்கும் நீர்த்தாங்கி வாகனங்களின் சேவையை அதிகரிப்பதற்கும் தனது அமைச்சினூடாக உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார்.
எனினும் தண்ணீர்த் தாங்கி வாகனங்களின் மூலம் குடிநீரை விநியோகிப்பது தற்காலிகத் தீர்வாகவே அமையும் என்பதால், நிரந்தரமான குடிநீர் விநியோகத் திட்டம் ஒன்றை மேற்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
சுன்னாகத்தில் இயங்கிவரும் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறி குடிநீரில் கலந்துள்ள எண்ணெய் மாசுகளை அகற்றும் செயற்பாடுகளுக்கு ஜப்பானிய அரசு உதவ முன்வந்திருப்பதாக முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இதன்போது தெரிவித்தார்.
வடமாகாணசபை தோற்றம் பெற்றதன் பின்னர் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத தொழில் நிறுவனங்களுக்கு மாத்திரமே தங்களால் அனுமதி வழங்கப்படுவதாகத் தெரிவித்த சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சுன்னாகத்தில் இயங்கும் நொதேண் பவர் தனியார் மின் உற்பத்தி நிலையம் எத்தகைய சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதென்ற அறிக்கையைத் தன்னிடம் கையளிக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இக்கலந்துரையாடலின் முடிவில் மேலதிக தொடர் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவும், கண்காணிப்பதற்காகவும் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு வாரத்துக்கு ஒரு தடவை கூடி இப்பிரச்சினை தொடர்பாக ஆராயும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் செய்தித்தடை நடவடிக்கைக்கு சீன அரசாங்கம் உபகரணங்களை வழங்கியுள்ளது!- ஐ.தே.க
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 03:52.16 PM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பொதுநலவாய நாடுகளின் நடப்பு தலைவர் என்ற அடிப்படையில் இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை உதாரண தேர்தல் அடிப்படையில் நடத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது.
ஸ்ரீகோத்தாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
இந்த தேர்தலை பொதுநலவாய நாடுகள் அமைப்பு உன்னிப்பாக கவனிக்கிறது.
எனவே அந்த அமைப்பின் நடப்பு தலைவர் என்ற அரசாங்கத்துக்கு களங்கள் வரும் வகையில் நடந்து கொள்ளாது பொதுநலவாய கொள்கையின் அடிப்படையில் தேர்தலை நடத்தவேண்டும் என்று மங்கள சமரவீர கேட்டுள்ளார்.
1948 ல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் நடைபெறும் முக்கியமான தேர்தலாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் கருதப்படுகிறது.
ஜனாதிபதியை பொறுத்தவரை 2009 போர் வெற்றியை அவர் குடும்ப நலனுக்காக பயன்படுத்துவதாக மங்கள சமரவீர குற்றம் சுமத்தினார்.
இலங்கையின் தற்போதைய நிலைமையை பார்க்கும் போது 1930ஆம் ஆண்டில் ஜெர்மனியின் நாசி தலைவர் அடொல்ப் ஹிட்லர் அடக்குமுறையை மேற்கொண்டு அவரின் திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.
அதேபோன்று மஹிந்த ராஜபக்சவும் 18வது அரசியல் அமைப்பு திருத்தத்தை கொண்டு வந்ததுடன், முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணையை கொண்டு வந்தார் என்று மங்கல குறிப்பிட்டார்.
இதேவேளை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தடைசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசாங்கம், ஜனவரி 8ம் திகதியை ஒட்டிய ஒரு வாரத்துக்கு எஸ்எம்எஸ் என்று குறுஞ்செய்தி சேவையையும் நிறுத்தி வைக்க அரசாங்கம் திட்டமிடுவதாக குற்றம் சுமத்தினார்.
இதற்கு சீன அரசாங்கம் உபகரணங்களை வழங்கி உதவுவதாகவும் மங்கள குறிப்பி;ட்டார்.
இதற்கிடையில் சட்டம் ஒழங்குத்துறை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் அதிபர் மஹிந்த பாலசூரிய,  தேர்தலின் போது பலப்பிரயோகத்தை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு கட்டளைகளை வழங்கியுள்ளார்.
எனினும் அதனை அவரால் உரிய முறையில் நடைமுறைப்படுத்த இடம்தரப் போவதில்லை என்று மங்கள சமரவீர கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmr3.html


பிரபாகரன் இன்னும் வீடு திரும்பவில்லை!- பழ.நெடுமாறன் பேச்சு
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 02:53.24 PM GMT ]
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் 16 வயதில் வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என்று உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
தஞ்சை விளார்சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத்தமிழர் பேரமைப்பு சார்பில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 60வது பிறந்த நாள் விழா கூட்டம் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்டு பழ. நெடுமாறன் பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் தெரிவித்ததாவது,
பிரபாகரனின் பிறந்த நாளை உலகம் முழுவதும் தமிழர்கள் கொண்டாடி உள்ளனர். தமிழ் இனம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் 16 வயதில் வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
நான் அவரை 24 வயதில் சந்தித்தேன். அன்று முதல் இன்று வரை, இனியும் அவருடன் உள்ள தொடர்பு மிகச் சிறப்பாக தொடரும்.
உலகில் உள்ள அத்தனை நாடுகளிலும் விடுதலைப் போராட்டம் நடந்துள்ளது. எந்த நாட்டிலும் விடுதலைப் போராட்டத்துக்கு அந்த அரசு உதவி செய்துள்ளது.
ஆனால் எத்தனை இடர்பாடு வந்தாலும் அதை எதிர்த்து போராடியவர் பிரபாகரன்.
புலிகளை வீழ்த்த அனைத்து வழிகளிலும் இந்தியா உதவி செய்தது. மன்மோகன் சிங் செய்த தவறையே இன்றைய பிரதமர் மோடியும் செய்கிறார்.
இன்று இலங்கையில் சீனா கால் பதித்துள்ளது என்றால் ஆபத்து இந்தியாவை சூழ்ந்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தற்போது விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவு தான் ஏற்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக பிரபாகரன் தலைமையில் வலிமையான போராட்டம் தொடரும்.
எனவே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் வலிமை பெற, இங்குள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmr0.html


முதலாவது பிரச்சாரக் கூட்டத்தை சின்னமின்றி ஆரம்பிக்கிறார் மைத்திரி
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 03:58.14 PM GMT ]
ஜனாதிபதித் தேர்தல் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் சின்னம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று காலை வெளிநாட்டுக்கு சென்று டிசம்பர் முதலாம் திகதியன்றே நாடு திரும்பவுள்ளமையால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பே ஜாதிக பெரமுண (எங்கள் தேசிய முன்னணி) என்ற கட்சியில் மைத்திரிபால தேர்தலில் போட்டியிடுகிறார்.
இந்தக்கட்சியின் சின்னம் தொலைபேசியாகும்.
எனினும் அந்தக்கட்சி தேர்தல்கள் ஆணையாளரிடம், புறாவை அல்லது தாமரையை சின்னமாக கோரியுள்ளது.
எனினும் இதற்கான முடிவு தேர்தல்கள் ஆணையாளர் நாடு திரும்பிய பின்னரே மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணையாளரின் வெளிநாட்டுப் பயணம் தவிர்க்க முடியாத ஒன்று என்ற அடிப்படையிலேயே அவர் இன்று காலை புறப்பட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, 30ஆம் திகதியன்று தமது சொந்த இடமான பொலநறுவையில் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்.
எனினும் இதன்போது அவருக்கு சின்னம் ஒன்றை அறிமுகப்படுத்த முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.


http://www.tamilwin.com/show-RUmszBRcKZmr4.html



Geen opmerkingen:

Een reactie posten