தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 november 2014

மகனுக்கு பிணை பெற்று தரும் வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றினார்: மேர்வின் சில்வா பெருமிதம்
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 11:37.24 AM GMT ]
வெள்ளிக்கிழமை மகனுக்கு பிணையில் விடுதலை பெற்று தருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்ததாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
சிங்கள இணையத்தள ஊடகம் ஒன்றிடம் அவர் இன்று இதனை கூறியுள்ளார்.
பிரித்தானிய பிரஜை மற்றும் அவரது காதலியை இரவு நேர களியாட்டு விடுதியொன்றில் வைத்து தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த மேர்வின் சில்வாவின் மகன், மாலக்க சில்வா விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததுடன் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இது குறித்து மேர்வின் சில்வா மேலும் தெரிவிக்கையில்,
கடந்த செவ்வாய் கிழமை மகனுக்கு பிணை வழங்கவில்லை என்பதால், நான் மிகவும் மனவேதனையுடன் ஜனாதிபதிக்கு எனது வேதனையை தெரிவித்தேன்.
எப்போது மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது என்று ஜனாதிபதி கேட்டார். வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது என்று நான் சொன்னேன்.
சரி மேர்வின் நீ வெள்ளிக்கிழமை நீதிமன்றத்திற்கு போ.. நான் பிணை வழங்க ஏற்பாடு செய்கிறேன் என்று ஜனாதிபதி கூறினார். ஜனாதிபதி கூறியது போல் மகனுக்கு பிணை கிடைத்து விட்டது.
இவற்றை நீங்கள் இணையத்தளங்களில் எழுத வேண்டாம். ஜனாதிபதி சரியோ தவறோ சொல்வதை செய்யும் தலைவர்.
ரணில், மங்கள போன்றவர்கள் இப்படி மக்களுக்கு உதவி செய்துள்ளனரா?. ரணில், மங்களவிடம் இப்படியான உதவியை கேட்டால், நாங்கள் நீதிமன்ற சுதந்திரத்தை மதிக்கின்றோம். சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கின்றோம் என்று கூறுவார்கள்.
அவர்கள் அடிக்கும் பைலா போன்று சட்டத்தின் ஆட்சி இருந்தால், எனது மகனுக்கு எந்த நாளும் சிறையில்தான் இருக்க நேரிடும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் இருக்கும் பெறுமதியை இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்களா? என மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
மகனுக்கு தற்போது பிணை கிடைத்து விட்டது, இனி நீங்கள் எதிரணிக்கு போவீர்களா என இணையத்தள ஊடகவியலாளர் அமைச்சர் மேர்வினிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த மேர்வின், ஆளும் கட்சியில் இருந்து கொண்டு எதிர்க்கட்சிக்கு சிறந்த சேவையை ஆற்ற முடியும். இதனால், எதிரணிக்கு போகும் திட்டத்தை கைவிட்டு விட்டேன். அரசாங்கம் மாறினால், புதிய அரசாங்கத்துடன் எனக்கு இணக்கத்தை ஏற்படுத்தி கொடுங்கள் என கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmp7.html


பெற்றோரை நேசிப்பது போல் நாட்டையும் நேசியுங்கள்! மாணவர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 12:21.19 PM GMT ]
வாழ்க்கையை எதிர்மறையாக நினைக்காது நமக்கு முன் நமது நாடு என்று எண்ண வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாடசாலை மாணவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள அந்த கல்லூரியின் ஸ்தாபக அதிபர் ஆர்.ஐ.ரி. அலஸ்சின் உருவச்சிலையை ஜனாதிபதி இன்று திறந்து வைத்தார்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் உட்பட அலஸ் குடும்பத்தினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

உங்கள் பாடசாலை மற்றும் பெற்றோரை நேசிப்பது போல் நாட்டையும் நேசியுங்கள்.

1967 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியில் அலஸ் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தினார்.

கல்லூரியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட போது இருளான தருணங்களை அலஸ் எதிர்நோக்கினார், எட்டு வருடங்களுக்கு பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவரை மீண்டும் இந்த கல்லூரிக்கு கொண்டு வந்தார்.

பிரேமதாசவின் தயவுடன் மீண்டும் பாடசாலை அதிபரான அலஸ் என பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டன.

அவர் உடைந்து போய்விடவில்லை. நாம் நமது வாழ்க்கையில் இப்படியான விடயங்களை எதிர்கொள்ள நேரிடும். சில நேரங்களில் நாம் வெற்றி பெறுவோம் சில நேரங்களில் நாம் தோல்வியடைவோம்.

மக்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் தடைகள் இருக்காது. அவர்கள் முன்னோக்கி சென்றால் எதனையும் இழக்க வேண்டிய தேவை இருக்காது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அவர் மன குழப்பம் அடையவில்லை. அதனை அவர் எதிர்நோக்கினார். இது சிலவற்றை கற்றுக்கொள்வதற்கான காலம்.


கொஸ்லாந்த மீரியபெத்த துயரத்தின் வயது ஒரு மாதம்…….?
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 12:42.45 PM GMT ]
கடந்த மாதம் 29.10.2014 அன்று மலையக வரலாற்றில் கண்ணீராலும் மனத்துயரங்களாலும் செதுக்கப்பட்ட அத்தியாயங்கள் உருப்பெற்றன.
தேயிலை செடிக்கடியில் தமது வாழ்வை தினந்தோறும் தேடி தேடி துயரப்படும் எம் மலையக சமூக உறவுகளில் ஒரு பகுதியினர் வாழும் பதுளை மாவட்டத்திற்கு உட்பட்ட கொஸ்லந்தை மீறியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டதோடு, 300 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, இருக்க இடமின்றி அநாதரவாக தமது உறவுகளை பிரிந்து கதறிய சோகம் இன்னும் அந்த மலைமுடுக்குகளில் ஓங்கி ஒழிக்கத்தான் செய்கின்றன.
இச்சோகம் இலங்கை வாழ் மக்களை மட்டுமல்ல முழு உலக மக்களினதும் அனுதாபத்தினையும், ஆதரவினையும் பெற்றுக் கொண்டது. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை புனரமைக்க இந்தியா, அமெரிக்கா உட்பட பல மேற்கு தேச அரசுகள் இம் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டின. அவ்வாறு உதவிக்கரம் நீட்டிய போதும் இழந்த எம் உறவுகள் திரும்பி வரப்போவதில்லை. ஆனால் அம் மக்களின் நினைவுகளோடு மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த எம் உடன்பிறப்புகளுக்கு (29.11.2014) நாளை எமது துயரத்துடன் கூடிய அஞ்சலியை செலுத்துகின்றோம்.
மனிதர்கள் இறந்த பின்னரே மண்ணில் புதைக்கப்படுகின்றனர் ஆனால் எம் உறவுகள் அன்று உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்டு விட்டனர். இவ்வனர்த்தத்தில் 75 ற்கும் மேற்பட்ட குழந்தைகள் தமது பெற்றோரை இழந்து அநாதைகளாக மாற்றப்பட்டடுள்ளனர். அவர்களின் வாழ்க்கைக்கு இலங்கை அரசாங்கம் பெறுப்பேற்க வேண்டும். இந்நாளில் நாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும், மலையகத்தின் ஏனைய அனர்த்த  பிரதேசங்களில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் குடியேற்றப்பட வேண்டும், மலையகத் தலைவர்களின் கையாலாகாதத்தனம் நீங்கி மக்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும், எம் சமூகத்திற்கு சிறந்த கல்வி சிறப்பான சுகாதாரம், நியாயமான சம்பளம், காப்புறுதி போன்ற இன்னோரன்ன தேவைகளை வென்றெடுப்பதே எமது நோக்கமாக அமைய வேண்டும்.
அந்தவகையில் வரலாற்றில் நாம் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம், ஏமாற்றப்படுகின்றோம். இவற்றை உணராமையாலேயே இன்று எம் மலையக சமூகத்தின் ஒரு பகுதி சுவடுகள் இன்றி அழிக்கப்பட்டுள்ளது. இயற்கை இவர்களை அழிக்கவில்லை. திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளனர். எமது வளர்ச்சியை கண்டு மனம் பொறுக்காத தேசிய தலைவர்களால் வரலாறுகளில் நாம் அழிக்கப்பட்டோம். ஆனால் நாம் இன்று புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டுள்ளோம்.
இவ்வனர்த்தம் இடம்பெற்று நாளைய தினத்துடன் ஒரு மாதம் நிறைவுறும் நேரத்தில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் உரிய வாழ்வாதார வசதிகள் செய்துக்கொடுக்கப்படவில்லை. அதேவேளை இவ்வனர்த்தத்தினால் உயிரிழந்த மக்களுக்கு குறித்த இடத்திலேயே நினைவுத்தூபிகள் அமைக்கப்படும் என்று அரசாங்கத் தரப்பிலிருந்தும் மலையக தலைவர்களிடமிருந்தும் வாக்குறுதிகள் வந்து குவிந்த போதும் இதுவரையில் இறந்தவர்களுக்காக ஒரு செங்கல்கூட நடப்படவில்லை. இது எமது மக்களின் மீதுள்ள அலட்சிய போக்கா? அல்லது காலத்தின் சாபமா? தெரியவில்லை.
இப்பேரனர்த்தத்தில் உயிரிழந்த உறவுகள் ஒரு பக்கம், அதேவேளை உயிருடன் பாதிக்கப்பட்ட மக்கள் மறுபுறமிருக்க. அவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக உயிர்நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு பணயக் கைதிகள் போல் மாற்றப்பட்டடுள்ளனர். அவர்களுக்கும் உரியதொரு விடிவு தினமாக இந்த அஞ்சலி தினம் அமைய வேண்டும்.
அனர்த்தம் ஏற்பட்டபோது குறித்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் இதுவரையில் அவ்வாறே வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் அனர்த்தம் ஏற்பட்டதை அறிந்து எம் தொப்புள்கொடி உறவுகளுக்காக முழு மலையக சமூகமும் வீதியில் திரண்டது மலையக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் இனிவரும் காலங்களில் பதியப்படும்.
அத்தோடு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களுக்காக இம்மாத ஆரம்ப பகுதிகளில் பல தொழிளாலர்கள் தமது உறவுகளின் அவலத்தை ஆர்ப்பாட்ட பேரணிகள் மூலமாக உலகறியச் செய்தனர். இவ்வனர்த்தம் ஏற்பட்ட தினத்தினை மலையக வரலாற்றில் துக்க தினமாக ஒவ்வொரு வருடமும் அனுஸ்டிக்க வேண்டும். அன்றைய தினம் மலையக தியாகிகளின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்க வேண்டும்.
உறவுகளே நீங்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டுள்ளீர்கள். அது வளர்ந்து விருட்சகமாகும் என்பது திண்ணம்.
நாளைய தினம் மலையகம் முழுவதும் மீரியபெத்த அவலத்தை நினைவு கூறும் நிகழ்வுகளில் மக்கள் ஈடுபடுவது எம்மை வாழவைத்த மலையக அன்னைக்கு செய்யும் எமது நன்றிக்கடனாக அமையும். இத்தினத்தில் ஆலயங்கள், வீடுகள், பொது இடங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றில் கூட்டுப்பிரார்த்தனைகளில் மக்கள் ஈடுபட வேண்டும்.
அத்தோடு வீடுகளுக்கு முன்னால் விளக்குகளை ஏற்றி இறந்த எம் உடன்பிறப்புகளுக்கு எண்ணங்களால் உயிர்கொடுப்போம்.
இத்தினத்தில் எமது அடிமை வாழ்வகன்றிட, எம் கைகள் உயர்ந்திட, எஞ்சியிருக்கும் எம் சமூகம் மீட்சி பெற, இறந்து அமரத்துவம் பெற்ற உறவுகள் எம்மை ஆசிர்வதிக்கட்டும். மலையக சமூகத்திற்கு விடிவு வெகு தொலைவில் இல்லை. அடுத்த வருடம் இந்நாளில் (29.10.2015) எமக்குரிய உரிமைகளை வென்றெடுப்பதே இழந்த எம் உறவுகளுக்க செலுத்தும் காணிக்கையாகும்.
நன்றி.
துயரில் வாடும்
மலையக பேரிடர் கண்காணிப்பு குழு


போலி வைத்திய நிலையங்கள்! அதிகாரிகள் மீது பொலிஸார் குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 01:35.30 PM GMT ]
யாழ்.குடாநாட்டில் வேலி கட்டும் கட்டுக்கம்பியினால் மக்களுக்கு பல் கட்டும் தனியார் நிறுவனங்க ளைக் கட்டுப்படுத்த பொலிஸார் தங்கள் ஒத்துழைப்பினை வழங்குவதற்கு தயார். ஆனால் பொதுச் சுகாதார வைத்திய துறையிலிருக்கும் அதிகாரிகள் அதில் அக்களையற்றியிருக்கின்றார்கள். எ ன யாழ்.பொலிஸார் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
யாழ்.போதனா வைத்தியசாலை சுற்றாடலில் மிக பொருத்தமற்ற வைத்திய நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அண்மையில் ஊடகங்களுக்கு மனம் திறந்த போதனா வைத்திய சாலையின் வைத்திய நிபுணர்கள் குறித்த தனியார் வைத்திய சாலைகளில் மிதப்பு பல்லுக்கு சிகிச்சைக்கு சென்றவருக்கு வேலி கட்டும் கட்டுக்கம்பியினால் பல் கட்டியதாகவும்,
இங்கே கடமையாற்றுவோர் தங்களை வைத்தியர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டாலும் அவர்கள் உன்மையில் ஒரு வைத்தியர்கள் கிடையாது. வைத்தியர்களுக்கான சிகிச்சை எதனையும் பெறாதவர்கள் எனவும் சுட்டிக்காட்டியதுடன், குறித்த விடயம் தொடர்பாக தாம் பொலிஸாருக்கு கடிதம் எழுதியும் பதில் காணப்படவில்லை என குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற பொலிஸாரின் பத்திரிகையாளர் சந்திப்பில் குறித்த விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது குறித்த விடயம் தொடர்பாக உன்மையில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதனையடுத்து நாங்கள் உடனடியாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு பொலிஸாரி தெரியப்படுத்தினர்.
ஆனால் அது குறித்து பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனை அதிகம் அக்கறை காட்டியிருக்க வில்லை. அதனாலேயே விடயம் குறித்து எம்மால் அதிகம் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. துறைசார்ந்த உயர் அதிகாரிகள் உள்ளபோது அவர்களுடைய நடவடிக்கையினை மீறி எம்மால் எந்த நடவடிக்கையினையும் எடுக்க முடியாது.
எனவே இந்த விடயத்தில் பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையே அதிகம் அக்கறையற்றுள்ளது என பொலிஸார் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.


http://www.tamilwin.com/show-RUmszBRcKZmq0.html

Geen opmerkingen:

Een reactie posten