[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 02:13.55 AM GMT ]
யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி இன்று அறிவிக்கப்படும் என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தோதலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இன்று பகிரங்கமாக அறிவிக்கப்படும் என அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கடந்த 12 நாட்களாக நாடு முழுவதிலும் உள்ள பௌத்த மக்கள், பௌத்த அமைப்புக்கள் மற்றும் ஜாதிக ஹெல உறுமயவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
மிகவும் தீர்மானமிக்க வகையிலான இந்தப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இன்று அமைப்பின் நிலைப்பாடு அறிவிக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அமைப்பின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட உள்ளது.
எதிர்வரும் நாட்களில் பாரியளவில் மாற்றங்களைச் செய்ய உள்ளதாக நேற்று ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnp3.html
தமிழக மீனவர்களின் படகுகள் விரைவில் விடுவிக்கப்படலாம்!- சுப்பிரமணியன் சுவாமி
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 02:22.28 AM GMT ]
குறித்த படகுகளின் உரிமையாளர்களை அடையாளம் கண்ட பின்னர் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே குறித்த படகு உரிமையாளர்களின் பெயர் பட்டியலை தாம் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் கையளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது கொழும்புக்கு வந்துள்ள அவர் படகு உரிமையாளர்களின் பெயர் மற்றும் விபரங்களை உறுதிப்படுத்திய பின்னர் இலங்கை அதிகாரிகள் அவற்றை விடுவிப்பர் என்று சுவாமி கூறியுள்ளார்.
தாம். இலங்கையின் பாதுகாப்பு செயலாளருடன் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்கும் முயற்சிகள் தொடர்பாகவும் கலந்துரையாடியதாக சுவாமி தெரிவித்துள்ளார்.
இதேவேளை சீன நீர்மூழ்கி கப்பல்கள் இலங்கைக்கு வந்தமை தொடர்பில் இந்தியா மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnp4.html
Geen opmerkingen:
Een reactie posten