தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 november 2014

மாவீரர் நாள்! தமிழக இலங்கை அகதி முகாமில் கோயில் கும்பாபிசேகத்திற்கு தடை: பொலிஸார் அடிதடியினால் பதற்றம்

மைத்திரிபால வாக்குறுதியை நிறைவேற்றுவார்! ஆனால் மகிந்தவுக்கே ஆதரவு: வாசுதேவ
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 08:39.58 AM GMT ]
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி 100 நாட்களுக்குள் ஒழிக்கப்படும் என மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதி மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் சிலவேளை அவர் வெற்றிபெற்று அந்த வாக்குறுதியை நிறைவேற்றினால் மிகவும் மகிழ்ச்சியடைய போவது தானே எனவும் அவர் கூறியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன ஜே.வி.பி போன்ற வேறு சிறிய கட்சிகளுடன் இணைந்து நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தால், தானும் அதற்கு ஆதரவு வழங்கியிருக்க முடியும் எனவும் எனினும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அவர் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதால், எந்த வகையிலும் தனது கட்சியின் ஆதரவு அவருக்கு கிடைக்காது என்றும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டுமாயின் மைத்திரிபால சிறிசேன கட்சிக்குள் இருந்து கொண்டு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருக்க வேண்டும்.
அதனை விடுத்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் அவர் கைகோர்த்து கொண்டதை எந்த விதத்திலும் என்னால் அங்கீகரிக்க முடியாது.
அத்துடன் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்க முயற்சிப்பதை மாத்திரமல்லது அந்த கட்சியின் அரசியல், பொருளாதார கொள்கைகளையும் நான் விரும்பவில்லை.
பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குமாறு எவர் கோரிக்கை விடுத்தாலும் எமது ஜனநாயக இடதுசாரி முன்னணி மகிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கும் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYev7.html
மைத்திரிக்கு புலிகள் ஆதரவு: ராஜபக்ஷவினர் தயார் செய்யும் அவதூறு சுவரொட்டி
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 08:24.08 AM GMT ]
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்து மகிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து அவரை போர் குற்ற நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கோரி விடுதலைப் புலிகளின் பெயரில் சுவரொட்டி உருவாக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் குழு இதனை தயாரித்து வருகிறது.
பாதுகாப்பு தரப்பினரை பயன்படுத்தி வடக்கு மாகாணத்தில் சில பிரதேசங்களில் இந்த சுவராட்டிகளை ஒட்டி, மைத்திரிபால சிறிசேனவுக்கு விடுதலைப் புலிகள் உதவி செய்கின்றனர் என்று சேறுபூசும் பிரசாரங்களை மேற்கொள்ளும் நோக்கில் மேற்படி திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
எனினும் விடுதலைப் புலிகளுடன் தற்போது கொடுக்கல் வாங்கல்களை ராஜபக்ஷவினரே மேற்கொண்டு வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
அத்துடன் தான் வெளியிட்டுள்ள இந்த தகவல் பொய்யானது என்றால் அதனை நிரூபிக்குமாறும் ரணில் சவால் விடுத்திருந்ததுடன் ராஜபக்ஷவின் இதுவரை அதற்கு பதிலளிக்கவில்லை.
அதேவேளை ராஜபக்ஷவினரின் செல்வாக்கு சரிந்துள்ள சூழ்நிலையில், பொய்யான புலிப் பீதியையும் பிரிவினைவாதத்தையும் கற்பனை செய்து காண்பித்து சிங்கள பௌத்த இனவாதத்தை தூண்டி வெற்றி பெறும் துரதிஷ்டமான முயற்சியில் ராஜபக்ஷவினர் ஈடுபட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYev6.html
கிளி.கிருஸ்ணபுரம் ,செல்வாநகர் கிராமங்களில் பசுமைத் தேசம் விதை தானியங்கள் வழங்கி வைப்பு
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 08:10.38 AM GMT ]
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் செல்வாநகர் கிராமங்களில் பசுமைத்தேசம் விதைதானியங்கள் வழங்கப்பட்டுள்ளது.
பா.உறுப்பினர் சி.சிறீதரனின் ஏற்பாட்டில் எமது கிராமிய பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு பசுமைத்தேசம் எனும் திட்டத்தை கிளிநொச்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு செயலகமான அறிவகம் கிளிநொச்சி மாவட்டம் தழுவிய ரீதியில் அறிமுகம் செய்து விதைதானியங்களை வழங்கிவருகின்றது.
இதுவரை கடந்த இருவாரங்களில் சாந்தபுரம் ஊற்றுப்புலம் இராமநாதபுரம் சம்புக்குளம் நாவல்நகர் பிரமந்தனாறு பெரியகுளம் ஆகிய கிராமங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் நூற்றுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு விதைதானியங்கள் வழங்கியுள்ளது.
நேற்று முன்தினம் கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் இந்த விதை தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கரைச்சி பிரதேசபை உறுப்பினர் பாலாசிங்க சேதுபதி தலைமையில் நடைபெற்றது.
இதில் கிராம முக்கியஸ்தர் அழகுசுந்தரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட மகிளிர் அணி செயலாளர் பிரபாமணி  கிருஸ்ணபுரம் கட்சி செயற்பாட்டாளர் சந்தோசம் கிருஸ்ணபுரம் கமக்காரகுழு தலைவர் செல்லத்துரை செல்வாநகர் கட்சி செயற்பாட்டாளர் ரஞ்சி செல்வாநகர் மற்றும் கிருஸ்ணபுரம் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கட்சியின் மாவட்ட  கிளையின் உபதலைவருமான பொன். காந்தன் செல்வாநகர் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதி யூலி உட்பட ஏராளமானோர் கலந்கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYev5.html

பொதுபலசேனா மத ரீதியான பதற்றத்தினை தூண்டுகிறது: ரீட்டா இசாக் குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 07:46.04 AM GMT ]
பொதுபல சேனா இலங்கையில் மத ரீதியிலான பதற்றத்தை தூண்டுகிறது என ஐ.நாவின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் ரீட்டா இசாக் குற்றம் சுமத்தியுள்ளார்.
சிறுபான்மை இன விவகாரங்களுக்கான மன்றத்தின் 7 ஆவது அமர்வு இன்று புதன்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகிறது.
இதற்கு அவர் சமர்ப்பித்த அறிக்கையிலேயே இவ்வாறு  குறிப்பிட்டிருக்கிறார். இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்கள்,
பொதுபல சேனாவால் கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் முஸ்லிம்களுக்கு எதிராக 350 தாக்குதல்களையும், கிறிஸ்தவர்களுக்கு எதிராக 120 தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.
அத்துடன் இந்த அமைப்பு ஏனைய சில அமைப்புகளுடன் இணைந்து தீவிரவாத கொள்கைகளை பரப்புகின்றது. சிங்களவர்களே இன ரீதீயாக உயர்ந்தவர்கள் எனவும் பிரசாரம் செய்கின்றது. மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகின்றது.
மேலும் பௌத்த சிலைகளை சிறுபான்மை இனத்தவர்கள் சேதமாக்குகின்றனர். மத மாற்றத்தில் ஈடுபடுகின்றனர் போன்ற தகவல்களும் பரப்பப்கடுகின்றன. கடந்த ஜூலை மாதம் ஐ.நாவின் வேறு நிபுணர்களுடன் இணைந்து முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகத்திற்கு எதிராக பௌத்த அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் மத மற்றும் இன ரீதீயிலான வன்முறைகளை தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYev4.html

மாவீரர் நாள்! தமிழக இலங்கை அகதி முகாமில் கோயில் கும்பாபிசேகத்திற்கு தடை: பொலிஸார் அடிதடியினால் பதற்றம்
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 07:26.21 AM GMT ]
புதுக்கோட்டை  திருவரங்குளம் தோப்புக்கொல்லையில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
முகாமில் உள்ளவர்கள் சேர்ந்து அங்கு சக்தி விநாயகர் கோவில் கட்டினர். அதற்கு நாளை 27ம் திகதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக வல்லத்திராகோட்டை போலீசில் அனுமதி கேட்டும மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று 26ம் திகதி விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் என்பதாலும், நாளை 27ம் திகதி புலிகளின் மாவீரர் தினம் என்பதாலும் அகதிகள் முகாமில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என போலீசார் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க மறுத்தனர்.
ஆனால் முகாமில் உள்ளவர்கள் கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்தனர். நேற்று யாகசாலை பூஜைகள் ஆரம்பித்தன. இதனை அறிந்த புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரெண்டு உமா தோப்புக்கொல்லை அகதிகள் முகாமிற்கு வந்தார். முகாமில் உள்ளவர்களுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தினார். கும்பாபிஷேகத்தை 27ம் திகதிக்கு பின்னர் எப்போது வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம் என அவர் கூறினார்.
மேலும் யாகசாலை பூஜைக்கு வந்த குருக்கள் மற்றும் முகாம் முக்கியஸ்தர்கள் சிலரிடம் கும்பாபிஷேகம் நடத்த மாட்டோம் என எழுதி வாங்கினர். ஆனால் முகாம் வாசிகள் இதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் இன்று காலை வரை முகாமிலேயே போலிஸ் சூப்பிரெண்டு உமா இருந்தார். காலை 6 மணிக்கு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதன் பிறகு முகாமில் இருந்தவர்கள் திடீரென புதுக்கோட்டை–ஆலங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மறியலை கைவிட்டு கலைந்து செல்லும்படி டி.எஸ்.பி. பாலகுரு எச்சரித்தார்.
ஆனால் அதை பொருட்படுத்தாமல் முகாம் வாசிகள் மறியலை தொடர்ந்தனர். இதனால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து முகாமிற்குள் ஓடினர். 42 பெண்கள் உள்பட 84 பேரை போலிசார் கைது செய்து வேனில் ஏற்றினர். அப்பகுதியில் மேலும் போலிசார் குவிக்கப்பட்டனர்.
இதன் பிறகு மீண்டும் போலிஸ் சூப்பிரெண்டு உமா முகாமிற்கு வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். போலிஸ் தடையை மீறி கும்பாபிஷேம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சாலை மறியலில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYev3.html

Geen opmerkingen:

Een reactie posten