[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 11:59.58 AM GMT ]
கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஐக்கிய மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
புகையிலை மற்றும் புகைத்தல் சம்பந்தமாக நான் கொண்டு வந்த வர்த்தமானி அறிவித்தலை பலர் எதிர்த்தனர்.
நான் கொண்டு வந்த இந்த யோசனையால் நாட்டுக்கு வெள்ளையர்கள் வர மாட்டார்கள் என அரசாங்கத்தில் உள்ள சிலர் கூறினர்.
சிகரட் பைக்கட்டுகளில் 80 வீதமான எச்சரிக்கைப்படம் பொறிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் 60 வீதமான குறைய காரணம் என்ன?. எதிர்காலத்தில் சிகரட் பைக்கட்டுகளில் 90 வீதம் எச்சரிக்கை படத்தை பொறிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சேறுபூசும் பிரசாரங்களுக்கு நான் பயப்பட போவதில்லை. பல வருட அரசியல் வாழ்க்கையில் அது எனக்கு பழக்கமானது.
புதிய அரசியல் கலாசாரத்தை நாட்டிற்குள் ஏற்படுத்துவதற்காக பொது வேட்பாளராக தன்னை நிறுத்துவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு நன்றிகனை தெரிவித்து கொள்கிறேன் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மூன்று முக்கிய விடயங்கள்
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் விஞ்ஞானபத்தில் பிரதானமாக மூன்று விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மக்களின் சுதந்திரத்தை பாதுகாப்பது, ஊழல், மோசடிகளை ஒழிப்பது, வெளிப்படையான நல்லாட்சியை ஏற்படுத்துவது ஆகிய மூன்று விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
தேர்தல் விஞ்ஞாபனத்தின் முன்னறிப்பாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிப்பது, தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவது என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnt5.html
கட்சித்தாவல் சதுரங்க போட்டியில் வெல்லப் போவது யார்? இந்த கட்சி தாவலில் டக்ளஸ் விதிவிலக்கா?
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 12:13.27 PM GMT ]
ஆளும்கட்சியிலிருந்த அமைச்சர், பிரதி அமைச்சர்களாக உள்ளவர்கள் கட்சி தாவ காத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ள நிலையில் எதிர் கட்சியிலிருந்தும் தமது கட்சி தாவ சிலர் உடன்பட்டு இருப்பதாக அரச ஆதரவு தரப்பிலிருந்தும் தகவல்கள் கசிகின்றன.
ஆளும் கட்சியில் இருந்து குறைந்தது மொத்தமாக 60 உறுப்பினர்கள் வெளியேறவுள்ளனர்.
ஒரு பக்கம் குடும்ப அரசியலை ஒளிக்க முற்படும் கூட்டம். மறுபக்கம் ஆளும் கட்சி பண பைகளை வைத்து பல பாராளுமன்ற உறுப்பினர்களை வாங்க தயாராக உள்ளனர்.
மஹிந்த ராஜபக்ச ஓர் இரும்புசங்கிலி வலையமைப்பு கொண்ட அரசை இதுவரைகாலமும் நடத்தினார். அதாவது தனது சொந்தம் பந்தம் என 300க்கு மேற்பட்ட அரச அதிகாரிகளை முக்கிய அமைச்சில் அமர்த்தியிருந்தார்.
தற்போதைய நிலையில் பணத்தை அள்ளிவீசி தன் உறுப்பினர்களை மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை தன்வசப்படுத்தலாம் என்றே மஹிந்த ராஜபக்சவுக்கு எண்ணத்தோன்றும்.
இதில் டக்ளஸ் விதிவிலக்கல்ல. காலம் தான் பதில் சொல்லும்.
எதிர் கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து உடனடியாக மறுப்பு தெரிவித்திருப்பதும் ஆளுங்கட்சியில் சந்தேகத்திற்கு உரியவர்களை 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் கசிகின்றன.
முஸ்லிம் காங்கிரசை ஆளும்கட்சி தன்வசம் ஈர்க்குமா?
முஸ்லிம் மக்கள் இதுவரை பட்ட பின்னடைவுகளை நம்பிக்கை துரோகத்தனை மறப்பார்களா அல்லது தாங்கள் பட்டவைக்காக வட்டியும் முதலுமாக ஆளும் கட்சியிற்கு தலைமுழுக்கு போடுவார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.
பாலன் அழகரத்தினம்
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnt6.html
Geen opmerkingen:
Een reactie posten