தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 30 november 2014

குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்! இல்லையேல் வீட்டை முற்றுகையிடுவோம்!- தமிழர் படை எச்சரிக்கை

விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கமே: நடிகை குஷ்பு (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 07:51.36 AM GMT +05:30 ]
விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம் தான் என காங்கிரஸில் இணைந்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து விலகிய குஷ்பு டெல்லியில் சோனியாவை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். நேற்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இதையடுத்து சென்னை திரும்பிய குஷ்பு இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றுள்ளார்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவை காப்பாற்ற காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும் என்பதால் இந்த கட்சியில் இணைந்தேன்.
என்னைப் பொறுத்தவரையில் திசைமாறிப் போய் தாய் வீடு திரும்பியதைப் போல காங்கிரசில் இணைந்ததை உணர்கிறேன்.
சாதி, மதபேதமின்றி நாட்டுக்கு சேவை செய்ய காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். நாடு முழுவதும் தெருத்தெருவாக சென்று காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரம் செய்வேன்.
திமுகவில் இருந்து ஏன் வெளியேறினேன் என்று அப்போதும் சொல்லவில்லை. இன்றும் சொல்லமாட்டேன். நாளை கேட்டாலும் சொல்லமாட்டேன்.
நான் பதவிக்காக காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. எனக்கு என்ன பதவி கொடுப்பது என்பதை காங்கிரஸ் கட்சியின் மேலிடம் முடிவு செய்யும்.
கோடிக்கணக்கான காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களில் ஒருத்தியாக இருப்பேன்.
காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஈழத் தமிழருக்கு எதிரானதாக இருந்தது இல்லை. காங்கிரஸைப் பொறுத்தவரை அது தீவிரவாதிகளுக்கு எதிரான ஒரு கட்சி.
மேலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நிச்சயமாக ஒரு தீவிரவாத இயக்கம்தான் என்றும் காங்கிரஸை ஈழத் தமிழருக்கு எதிரான கட்சியாக சிலர் சித்தரித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
http://www.newindianews.com/view.php?23DA2cKMS42M4303lA3deOT22S02e2A62bAmN3

குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்! இல்லையேல் வீட்டை முற்றுகையிடுவோம்!- தமிழர் படை எச்சரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 05:31.16 AM GMT ]
தமிழர் பண்பாடு, நாகரீகம் வாழ்வியல் நெறி, அவற்றின் தொன்மை ஆகியவற்றை சிதைக்கும் வகையில் பேசி வரும் நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கி.வீரலட்சுமி என்பவர் தலைமையிலான தமிழர் முன்னேற்ற படை அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ் இனத்தின் விடுதலை போரட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும் ஒட்டு மொத்த தமிழர்களை அவமானப்படுத்தும் வகைளும் தமிழுக்கும் தமிழர்க்கும் தமிழ் மண்ணுக்கும் எந்த வித உழைப்பும் தியாகமும் செயயாமல் பிழைக்க வந்த வெளிமாநில பெண்ணான சினிமா கவர்ச்சி நடிகை குஷ்பு, தமிழ் தமிழர் வரலாறு கடுகளவும் தெரிந்து கொள்ளாமல் ஈழ விடுதலை போராளிகளை தீவிரவாத இயக்கம் என்று கூறியிருக்கிறார்.
இது கடும் கண்டனத்திற்கு உரியது. உலக தமிழர்களை மிகுந்த மனவேதனை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஐரோப்பிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பு அல்ல என்று கூறி அவற்றின் மீதான தடையை அண்மையில் நீக்கியுள்ளது.
இந்தியாவிலும் வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்த வேளையில் சினிமா கவர்ச்சி நடிகை குஷ்பு ஈழ விடுதலை போராளிகளை தீவிரவாதிகள் என்று அரசியல் ஆதாயத்திற்காக கூறுகிறார்.
இதுபோன்ற கருத்துக்களை வெளியிட்டதற்கு பகிரங்க மனிப்பு கோரவேண்டும்.
மேலும் சென்னை ஐ ஐ டி யில் மாணவர்கள் முத்தப் போராட்டம் என்ற பெயரில் நமது தமிழ் பண்பாட்டை சீரழிக்கிறார்கள். இதற்கு ஆதரவாக அவர் அறிக்கையும் விடுகிறார்.
தமிழர் பண்பாடு, நாகரீகம், வாழ்வியல் நெறி, அவற்றின் தொன்மை ஆகியவற்றை சிதைக்கும் வகையில் பேசி வருகிறார். இதை வன்மையாக தமிழர் முன்னேற்ற படை கண்டிக்கிறது.
குஷ்பு மன்னிப்பு கோராவிடில் குஷ்பு வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
மாற்று மாநிலத்திலிருந்து பிழைக்க வந்த குஷ்புக்கு என்ன தெரியும்? வேல்முருகன் ஆவேசம்!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே என நடிகை குஷ்பு தெரிவித்ததற்கு, மாற்று மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு பிழைப்புக்காக வந்த குஸ்புவுக்கு என்ன தெரியும் என வேல்முருகன் கேள்வியெழுப்பியுள்ளார்.

விடுதலைப் புலிகள் ஒரு தீவிரவாத இயக்கமே: குஷ்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே என நடிகையும், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாடு முழுவதும் தெருத்தெருவாக சென்று காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்வேன். பொதுவாக ஆசைக்காக அரசியலுக்கு வரக் கூடாது. கட்சிக்கும் நாட்டுக்கும் உழைப்பதற்காக அரசியலுக்கு வர வேண்டும்.
திமுகவில் இருந்து ஏன் வெளியேறினேன் என்று அப்போதும் சொல்லவில்லை. இன்றும் சொல்லமாட்டேன். நாளை கேட்டாலும் சொல்லமாட்டேன். நான் பதவிக்காக காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை.
காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஈழத் தமிழருக்கு எதிரானதாக இருந்தது இல்லை. காங்கிரஸைப் பொறுத்தவரை அது தீவிரவாதிகளுக்கு எதிரான ஒரு கட்சி. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நிச்சயமாக ஒரு தீவிரவாத இயக்கம்தான்.
தீவிரவாதத்தை கடைசி மூச்சு உள்ளவரை எதிர்ப்போம். காங்கிரஸை ஈழத் தமிழருக்கு எதிரான கட்சியாக சிலர் சித்தரித்துள்ளனர். இவ்வாறு நடிகை குஷ்பு தெரிவித்தார்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmszBQUKZlq5.html#sthash.ymRL87aA.dpuf

Geen opmerkingen:

Een reactie posten