தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 november 2014

அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருக்க முடியாத இக்கட்டான நிலையில் முஸ்லிம் காங்கிரஸ்

மகிந்தவுக்கே ஆதரவு: பொதுபல சேனா சூசகம்
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 09:03.09 AM GMT ]
யுத்தத்தில் வெற்றி பெற்றதால், ஆட்சியாளர்களுக்கு நாட்டை அழிக்க மக்கள் அதிகாரத்தை வழங்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இதனால், மகிழ்ச்சி ஆடம்பரத்தை கைவிட்டு நாட்டை ஆட்சி செய்யுமாறு தமது அமைப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறியுளளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
முதலில் நாடு, இரண்டாவது இனம், மூன்றாவது மதம் இவற்றை கவனத்தில் கொண்டு நாடு மற்றும் இனத்தின் பாதுகாப்பு குறித்து எண்ணியே பொதுபல சேனா தீர்மானத்தை எடுத்துள்ளது.
எமது அமைப்பின் கருத்து அரசியல் அல்ல. எனினும் சகலருக்கும் செவிக்கொடுக்கப்படும். எதிர்க்கட்சிகளின் அணியில் இருப்பவர்கள் பொய்யர்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் திரும்பி பார்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம். பொது எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் பற்றிய பெரிய சாட்சியங்கள் உள்ளன. எதிர்வரும் காலத்தில் அவை வெளியிடப்படும்.
மைத்திரிபாலவின் இருப்புறங்களில் முதல் சீடர்கள் இருவர் இருக்கின்றனர். தேசிய பாதுகாப்பை தொடர்ந்தும் உறுதிப்படுத்தும் வேட்பாளருக்கு எமது ஆதரவு வழங்கப்படும்.
வெளிநாட்டு சக்திகளுக்கு அடிப்பணிந்த மற்றும் லிபரல் வாதத்தினால் தலைவீங்கி போன அணிக்கு ஆதரவு வழங்கப்படாது எனவும் ஞானசார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன இவர்களில் யாருக்கு ஆதரவு வழங்கப்படும் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தமது நிலைப்பாட்டை புரிந்து கொள்ளுமாறு கூறிய தேரர், நேரடியாக பதில் வழங்கவில்லை.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZns3.html

அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருக்க முடியாத இக்கட்டான நிலையில் முஸ்லிம் காங்கிரஸ்
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 09:23.38 AM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருக்க முடியாத நிலைமை உருவாகியுள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான நிலைமையை முஸ்லிம் காங்கிரஸிக்குள் உருவாக்கும் முயற்சிகளில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஈடுபட்டிருந்தார்.
இவ்வாறான சூழ்நிலையில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக பொதுபல சேனா அமைப்பு மறைமுகமாக அறிவித்துள்ளது.
பொதுபல சேனாவின் இந்த அறிவிப்பால், ரவூப் ஹக்கீம் கட்சிக்குள் கட்டியெழுப்பி வந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான சூழ்நிலை மாறியுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை காப்பாற்றுவதற்காக பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் நிலைமை அதன் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுபல சேனாவின் இனவாத மற்றும் மதவாத செயற்பாடுகள் காரணமாக அந்த அமைப்பின் மீது எதிர்ப்பை கொண்டுள்ள முஸ்லிம்,தமிழ், கிறிஸ்தவ மக்களும் எதிர்க்கட்சியின் பொது வேட்பாளருக்கே ஆதரவளிப்பார்கள் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZns4.html

Geen opmerkingen:

Een reactie posten