றிஸாட்டின் முக்கிய சகா ரணிலிடம்….
இலங்கை மக்கள் காங்கிஸின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஹுனைஸ் பாருக் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஊழல் அம்பலம்… துணையாக கருணா, பிள்ளையான்
கல்விப் பணிப்பாளராக இருக்கின்ற திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களின் அடாவடித்தனங்களும், அட்டகாசங்களும் தொடர்ந்த வண்ணமுள்ளன. பல்வேறுவிதமான ஊழல்கள் அங்கு இடம்பெறுவதாகவும், பழையன பல புதுப்பிக்கப்பட்டு பெரும் நிதி மோசடி நடைபெறுவதாகவும் அறியப்படுகின்றது.
இவற்றையெல்லாம் மறைப்பதற்காக அரசியல் பிரமுகர்களையும், அமைச்சர்களையும் அழைத்து விழாக்களுக்கூடாக மகிழ்விப்பதாகவும் அப்பிரதேசத்தில் உள்ள கல்வியாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த விழாக்களுக்கான பணம் எங்கிருந்து பெறப்படுகின்றது என்ற உண்மையும் தற்போது வெளியாகியுள்ளது.
கல்விச் சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஓய்வுநிலை பேராசிரியர் ஒருவர் எழுப்பும் கேள்வியைப் பாருங்கள், கல்வி நிர்வாக சேவைக் காலத்தில் ஒன்றரை வருடங்கள் மட்டும் திருக்கோவில் கல்வி வலயத்தில் கடமையாற்றி மீண்டும் பட்டிருப்பிற்கே வந்து விட்டார். வேடிக்கை என்னவெனில் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு ஐந்து வருடத்திற்கு ஒரு முறை இடமாற்றம் வழங்கப்படவேண்டும். இது சுற்றறிக்கை அதே வேளை ஆசிரியர்கள் ஏழு வருடங்கள் முடிவடைந்ததும் இடமாற்றம் செய்யப்படவேண்டும். இதுவும் சுற்றறிக்கைதான். ஆசிரியர்களுக்கான சுற்றறிக்கையில் சொல்லப்பட்டதனையும், அதற்கு மேலாக பழிவாங்கல்கள் மூலம் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் இவருக்கு எந்தச் சுற்றறிக்கைகளும் பொருந்தாதா?
சரியான கேள்விதானே இது.
தன்னைப் புகழ்பவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும், கடமையே கண்ணாக மாணவர்களுக்கு போதிக்கும் ஆசிரியர்கள் மேல் வன்மம் கொண்டு தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து இடமாற்றுவதும் எந்த வகையில் நியாயம்?
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஓய்வுபெற்ற கல்வியாளர், அரசியல்வாதிகள் பணிப்பாளரின் மாயையில் விழுந்துள்ளதாகவும் அதனால் ஏற்படப்போகும் பின் விளைவுகளை அவர்கள் சிந்திக்காவிட்டால் அவை பல தாக்கங்களை ஏற்படுத்தப் போவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவர்களுக்கு நடாத்தப்படுகின்ற பரீட்சைகள், செய்யப்படுகின்ற செலவீனங்கள் அனைத்திலும் முறைகேடுகள் நடப்பதனை கணக்காய்வுத் திணைக்களமும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே இவர் ஒன்றரை ஆண்டுகள் கடமையாற்றிய திருக்கோவில் கல்வி வலயத்தின் பழைய பெயப்பலகை புதிதாக்கப்பட்ட செலவீனத்திலும் சர்ச்சைகள் ஏற்பட்டமை இங்கு குறிப்பிடக்கூடியது.
நிலமை தொடராமல் இருக்க வலயக் கல்விப்பணிப்பாளரை அங்கிருந்து உடனடியாக இடமாற்றம் செய்து அவர் இல்லாத வேளையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாலேயே பல உண்மைகள் வெளிப்படும் என பலரும் கருதுகின்றனர். ஏனெனில் இவருக்கு எதிரான உண்மைத் தகவல்களை வெளிப்படுத்திய பலர் மீது இவர் அபாண்டப் பழிகள் சுமத்தி அவர்களின் வாய்களை அடைத்தமை தொடர்பாகவும் இப்போது செய்திகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
இவரது இத்தகைய நடவடிக்கைகளுக்கு துணைபோகின்ற அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் தொடர்பான விடயங்களை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கும், இத்தகைய நடவடிக்கைகளால் அரசாங்கத்துக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்களையும் தெளிவுபடுத்தி அறிவிக்கவுள்ளதாகவும் அங்குள்ள கல்வியாளர்களும், சமூக நலன் கொண்டோரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூத்த கல்வியலாளர் ஒருவர் இது தொடர்பில் விளக்குகையில், பட்டிருப்பு கல்வி வலயத்தில், வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந. புள்ளநயகம் அவர்களும் அவருடன் இணைந்து போரதீவுக் கோட்டக்கல்வி அதிகாரி திருவாளர். பூ.பாலச்சந்திரனும் ஆடுகின்ற ஆட்டம் பட்டிருப்பு கல்விப்புலத்தினையே கவலை கொள்ள வைத்துள்ளது. நீண்ட காலமாக இவ்வலயத்தில் பணிப்பாளராக கடமையாற்றி வரும் அம்மணி, தன்னை எவரும் எதுவும் செய்யமுடியாது என்கின்ற மமதையில் செயலாற்றிக் கொண்டிருக்கின்றார்.
இவருக்கு துணையாக போரதீவுப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி பாலச்சந்திரன் அவர்கள் அவருக்கு ஒத்துப் பேசுவதிலும், போகுமிடமெங்கும் அவர் புகழ் பாடுவதிலும் தனது முழுக்கவனத்தையும் செலுத்தி வருகின்றார்.கல்விப்புலத்தில் இவர் தொடர்பான பல விடயங்களை சமுகத்துக்கு முன்னிறுத்த வேண்டியுள்ளது. இவரது கடந்த காலம் குடியும் கூத்துமாக இருந்து கல்விப்புலத்தினை சீரழித்தவர். இவர் அதிபராக பல பாடசாலைகளில் கடமையாற்றியிருக்கின்றார். அவ்வாறு கடமை புரிந்த பாடசாலைகளில் இவரது வேலை திருப்தியற்று காணப்பட்டதால், அச்சமூகம் இவரை ஓடோடத் துரத்தியது.
இவர் கடமையாற்றிய பாடசாலைகளின் கல்வி சீரழிந்ததுடன், மாணவர்களது ஒழுக்கமும் கெட்டுப் போனது. இது தவிர இவருக்கு வழங்கப்பட்ட பொதுப் பரீட்சை கடமைகளின் போது கடமைக்குச் சமுகமளிக்காது பரீட்சைக் கடமைநேரம் குடிபோதையில் கடமையை துஷ்ப்பிரயோகம் செய்ததன் காரணமாக ஆயுளுக்கு பரீட்சை கடமை செய்ய முடியாதவாறு பரீட்சை திணைக்களத்தினால் பரீட்சைக் கடமையில் இருந்து தடைவிதிக்கப்பட்டவர்.
அவ்வாறு கல்விப்புலத்தில் தவறான செயற்பாட்டை கொண்ட இவரை வேலைநீக்கம் செய்வதற்கும் கல்வித்திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும் மனிதாபிமான அடிப்படையில் மன்னித்து விட்டிருந்தது. கல்வி செயற்பாட்டிற்கே பொருத்தமில்லாத இவரை கோட்டகல்விப் பணிப்பாளராக்கி தனக்கு விருப்பமானபடி செயற்படுத்திக் கொண்டிருகின்றார் திருமதி புள்ளநாயகம்.
அரசியல்வாதிகளினதும்,புள்ளநாயகத்தினதும் சிபார்சில் மண்முனை தென் எருவில்பற்றுக் கோட்டத்துக்கு தெரிவான இவர் தன்னால் கடமையை செய்ய முடியாத நிலையில் இவரைக் கொண்டு போரதீவுக் கோட்டத்துக்கு மாற்றம் பெற்றார். இவரது முழுக்கடமையும் அம்மணியுடன் காரியாலயத்தில் கழித்தல், அவர் போகுமிடமெங்கும் அவரது வாகனத்தில் சுற்றித்திரிவது.
தனக்கு விருப்பம் இல்லாத எவரையும் அவரிடம் போட்டுக்கொடுத்து பழிவாங்குவது. அவருக்கு விசுவாசமானவன் போல் காட்டி தனது கோட்டிலே அவரைப் பயணிக்க செய்து தனது விருப்பங்களை கச்சிதமாக நிறைவேற்றிக் கொள்வது. இதனால் பல அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட மனம் உடைந்து போயுள்ளனர். அதிபர், ஆசிரியர்கள் வாய் மூடி மௌனிகளாகவே வேலை செய்கின்றனர். இவருக்குப் பயந்தே கருமமாற்ற வேண்டியுள்ளது. இதனால் இவ்வலயத்தின் கல்வி நிலை படுபாதாளத்தை நோக்கியே சென்று கொண்டிருகின்றது. இதனை நிவர்த்திக்க அதிபர், ஆசிரியர்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
மேலும் இவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் கையில் போட்டுக் கொண்டே கருமமாற்றுகின்றனர்.
ஊழல்கள் இன்று எல்லா இடங்களிலும் விரவிக் காணப்படுகின்றது. ஆனால், கல்வியில் இப்படியான ஊழல் செயற்பாடுகள் இடம்பெறும் போது அதனை உடனே ஓட்ட நறுக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும். இப்படியான ஊழல் பேர்வழிகளின் கைகளில் சிக்கி நாளைய மாணவ சந்ததி பாழ்பட்டுப் போய் விடக் கூடாதல்லவா.
பட்டிருப்பு கல்வி வலயத்தில் 18 வருடங்களுக்கு மேலாக வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்து சர்வதிகாரப் போக்கைக் கடைப்பிடிக்கும் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களின் காலத்தில் நடந்த ஊழல்கள், கொள்ளைகள் தொடர்பில் அரசும், கல்வியமைச்சும் முழுமையான விசாரணை நடாத்தி கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்.
http://www.jvpnews.com/srilanka/88065.html
Geen opmerkingen:
Een reactie posten