தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 november 2014

எல்லாருக்கும் 10 கோடி ரூபா கொடுக்கும் மகிந்தர்: என்னோடு தான் இருக்கவேண்டும் என்று எழுதி வாங்குகிறார் !

மகிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் உள்ள பல முக்கிய புள்ளிகள், தற்போது கட்சிதாவி எதிரணியில் இணைவது ஒரு பேஷனாக மாறிவிட்டது. யார் யார் எப்போது கட்சி தாவுவார்கள் என்று தேரியாமல் மகிந்தர் முழித்துக்கொண்டு இருக்கிறார். இன் நிலையில் மகிந்தரின் ஆட்கள் தமது கட்சியில் உள்ள முக்கிய புள்ளிகளை அழைத்து ஒவ்வொரு நாழும் பேசிவருவதோடு தலா 10 கோடி ரூபா தருவதாக வாக்களித்தும் வருகிறார்கள் என்று அறியப்படுகிறது. சில அமைச்சர்களுக்கு இந்த தொகை ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது என்றும் கூறப்படுகிறது. தனித்தனியாக முக்கிய புள்ளிகளை அழைத்து 10 கோடி தருவதாக கூறி அல்லது பணத்தை கொடுத்து பின்னர் கடிதம் ஒன்றில் கையெழுத்தையும் வாங்குகிறார்களாம்.
அதாவது நான் எதிரணிக்கு தாவமாட்டேன் என்று எழுதி வாங்குகிறார்கள் என்று கொழும்பில் இருந்து கிடைக்கப்பெறும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. நாளுக்கு நாள் எதிரணியின் பலம் கூடிக்கொண்டு வருகிறது. மகிந்தருக்கு சுமார் 41 சதவீத வோட்டுகளே கிடைக்கும் என்றும் எதிரணிக்கு சுமார் 59 சதவீத வோட்டுக்கள் கிடைக்கும் என்று கூட தற்போதே எதிர்வு கூறப்படுகிறது. இதனால் சிங்கள மக்கள் மத்தியில் மகிந்தர் தோற்றுவிடுவார் என்ற மன நிலை தோன்றியுள்ளது. இதனால் யாருக்கு வாக்களிப்பது என்று தெரியாமல் நிற்பவர்கள் கூட, இனி எதிரணிக்கே வாக்குகளைப் போடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதுவரை காலமும் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வாந்த ராஜபக்ஷ குடும்பம், தற்போது தாம் சேர்த்துவைத்துள்ள பணத்தை எடுத்து முக்கிய புள்ளிகளுக்கு கொடுக்கவேண்டிய நிலைக்கு முதன் முறையாக தள்ளப்பட்டுள்ளார்கள். இதில் சில முக்கிய புள்ளிகள் கில்லாடிகள் போல இருக்கு. ஏன் என்றால் தம்மை பற்றி தாமே புரளிகளை கிளப்பிவிடுகிறார்களாம். இதனை அறியும் மேலிடம் உடனே அவரை அழைத்துப் பேசி இந்த காசை அவர்களைப் போன்றவர்களுக்கு முதலில் கொடுக்கிறதாம். இப்படி எல்லாம் ஏமாற்றுவேலைகளும் நடக்கிறது. மொத்தத்தில் மகிந்தரின் கால நிலை சரியில்லை என்பது தெரிகிறது. தேர்தலில் தோற்பது என்பது வேறு. ஆனால் சேர்த்துவைத்த பணத்தின் பெரும்பகுதியையும் இழந்து, தேர்தலில் தோற்பது என்பது கொடுமையடா சாமி !
http://www.athirvu.com/newsdetail/1548.html

Geen opmerkingen:

Een reactie posten