தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 november 2014

இராணுவத்தினரின் அக்கிரமம்: தடை மீறி வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற பூஜை

ஓட்டமாவடியில் தேங்கி நிற்கும் மழைநீர் அகற்றும் பணிகள் பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பம்
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 05:30.12 AM GMT ]
கிழக்கு மாகானத்தில் ஒரு வார காலத்துக்கும் மேலாக பெய்து வருகின்ற அடைமழை காரணமாக ஓட்டமாவடி பிரதேசத்தில் சீரற்ற வடிகான்களை அண்டிய வீதிகளில் மழை நீர் அதிகம் தேங்கி நிற்பதனால் பொது மக்கள் பெருமளவில் அசெளகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
அதிக மழையினால் வீதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரில் உயிர்கொல்லி நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால் பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கினங்க பிரச்சனையை உடனடியாக கவனத்தில் எடுத்த ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் IT.அஸ்மி, மழை நீரினால் பாதிக்கப்பட்டுள்ள அனேகமான வீதிகளை பார்வையிட சென்றார்.
இதன் முதற்கட்டமாக நேற்று புதன் கிழமை அதிகமாக பாதிக்கப்படுள்ள ஓட்டமாவடி பிரதான பாடசாலைகளை அண்டியுள்ள வீதிகளிலும், வீடுகளிலும் தேங்கி நிற்கின்ற மழைநீரினை பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாதை ஓரத்தில் குழாய்கள் அமைக்கப்பட்டு பிரதான வடிகானுடன் நீரினை வடிந்தோட செய்யும் பணியினை அடைமழை என்றும் பாராமல் சபை ஊழியர்களுடன் உறுப்பினர் அஸ்மியும் ஈடுபட்டு வருகின்றார்.
இது சம்பந்தமாக இணைய நாளிதல்களுக்கு கருத்து தெரிவித்த உறுப்பினர் அஸ்மி,
பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழை காரணமாக இப்பணிகளை தொடர்ந்து செய்வதற்கு முடிவெடுத்துள்ளதாகவும், மழை நீர் தேக்ககத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் எந்நேரமும் 0772498135 எனும் கைத்தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மழை நீர் தேங்கி நிற்பது சமபந்தமாக உள்ள பிரச்சனைகளை தனக்கு தெரியப்படுத்துமாறும் பொதுமக்களை வேண்டுகின்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnq4.html

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மூன்று வருடம் பூர்த்தி: விபத்துக்களால் 16 பேர் பலி- பஸ் விபத்து: 45 பேர் உயிர் தப்பியுள்ளனர்
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 05:44.22 AM GMT ]
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டு இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகியுள்ளதுடன் இதுவரை 12 கோர விபத்துக்கள் அந்த வீதியில் நடந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்துக்கள் காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக தெற்கு நெடுஞ்சாலையில் ஆயிரத்து 227 விபத்துக்கள் நடந்துள்ளன. தலா ஒரு வருடத்திற்கு 409 விபத்துக்கள் என்ற கணக்கில் இந்த வீதியில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. உலகில் ஏனைய அதிவேக நெடுஞ்சாலைகளுடன் ஒப்பிடும் போது விபத்து எண்ணிக்கை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பஸ் விபத்து: 45 பேர் உயிர் தப்பியுள்ளனர்
டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம ஹட்டன் பிரதான வீதியில் டிக்கோயா போடைஸ் பகுதியில்
இன்று காலை 8 மணியளவில் வீதியை விட்டு விலகி ஒரு கல்லில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சுமார் 4 மணித்தியாலங்கள் போக்குவரத்த தடைப்பட்டிருந்தது.
எதிரே வந்த மோட்டர் சைக்களுக்கு இடமளிக்கும் போது இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பஸ்ஸில் 45 பேர் பயணித்துள்ளதாகவும் எவருக்கும் பாதிப்பு இல்லையெனவும் தெரிவிக்கும் ஹட்டன் பொலிஸார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனா்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnq5.html

இராணுவத்தினரின் அக்கிரமம்: தடை மீறி வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற பூஜை
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 06:07.41 AM GMT ]
யாழ். வல்வெட்டித்துறை, நெடியகாடு பிள்ளையார் ஆலயத்தில் படையினரின் அச்சுறுத்தலையும் மீறி சதுர்த்திப் பூசை நடைபெற்றது. பூசை ஏற்பாடாகியிருந்த சமயம் ஆலயத்துக்குவந்த இராணுவத்தினர் பூசை வழிபாடுகள் நடத்தக்கூடாது இது மேலிடத்து உத்தரவு என்று மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் ந.அனந்தராஜுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர் ஆலயத்தக்கு வந்து இராணுவத்தினருடன் கலந்துரையாடினார்.
எனினும் பூசை நடத்த அனுமதிக்காத இராணுவத்தினர், மீறி நடத்தினால் கைது செய்வோம் என்றும் எச்சரித்தனர். இதனால் வாக்குவாதம் எழுந்தது.
நீண்ட நேரத்தின் பின்னர் மணி ஒலி எழுப்பாது பூசை நடத்துமாறு இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும் இராணுவத்தினர் பார்த்திருக்க மணி ஒலிக்கவிடப்பட்டு சதுர்த்தி பூசை நேற்றய தினம் சிறப்பாக நடைபெற்றதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவீரரை பாராளுமன்றில் நினைவுகூர்ந்த எம். பி.சிறீதரன்
மாவீரர்கள் புனிதமானவர்கள், அவர்கள் இந்த மக்களால் நேசிக்கப்படுகிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தாயக மண்ணுக்காகவும் தனது மக்களுக்காகவும் விடுதலை என்ற உன்னத லட்சியத்துக்காகவும் உயிர் தியாகம் செய்த வீரர்களை தமிழர்கள் நினைவுகொள்ளும் புனித நாள் தான் மாவீரர் நாள்.
பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnq6.html

Geen opmerkingen:

Een reactie posten