தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 november 2014

நவம்பர் 27 தினம் தொடர்பாக பாராளுமன்றில் உரையாற்றிய அவுஸ்திரேலிய செனட்டர்



மாவீரரை பாராளுமன்றில் நினைவுகூர்ந்த கனடிய தமிழ்ப் பெண் எம். பி. ராதிகா
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 10:26.10 PM GMT ]
தமிழீழத்துக்காக தம்முயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து கனடிய பாராளுமன்றில் ராதிகா சிற்சபைஈசன் உரையாற்றியுள்ளார்.


கனடியத் தமிழர்களின் வரலாற்றில் அவர்கள் நவம்பர் மாதத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகளைக் கொண்டாடுவார்கள். 
ரிமம்பரன்ஸ் டே எனப்படும் இறந்த கனடியப் படைவீரர்களை நினைவுகொள்ளும் நாளும் தமிழ் மாவீரர்களின் நாளுமே அதுவாகும் என கனடியப் பராளுமன்றத்தில் இராதிகா சிற்சபைஈசன் அவர்கள் தெரிவித்தார்.
கனடிய பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபைஈசன் தொடர்ந்து பேசுகையில், தங்களது வாழ்க்கையை பிறருக்காக அர்ப்பணித்தவர்களைக் கொண்டாடுவதானால் நவம்பர் மாதம் வாழ்வியலின் அழகை வெளிக்கொணரும் ஒரு மாதமாக திகழ்கிறது.
யுத்தத்தில் இறந்தவர்களை மாத்திரமல்ல, யுத்தத்தில் அகப்பட்டு இறந்த சகல வயதுடைய பொதுமக்களையும் நினைவுகூரும் அதேவேளை நாங்கள் வாழ்வதற்காக தங்களை அர்ப்பணித்தவர்களையும் கொண்டாடுகிறோம்.
ஈழத்திருநாட்டிலே இடம்பெற்ற வன்முறைகளால் போரின் போதான ஒரு சிறுமியாகவே நான் பிறந்தேன். வன்முறைகளும் இனங்களுக்கிடையேயான பிரிவும், மத வேறுபாடுகளும் இன்னமும் அந்த நாட்டில் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன என இராதிகா மேலும் தனதுரையில் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKZno3.html
நவம்பர் 27 தினம் தொடர்பாக பாராளுமன்றில் உரையாற்றிய அவுஸ்திரேலிய செனட்டர்
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 08:26.48 PM GMT ]
நவம்பர் 27 ஈழத் தமிழர்கள் தங்களின் இறந்த உறவுகளை நினைவுகூரும் தினமென  தெற்கு அவுஸ்திரேலிய வேல்ஸ் அதிகார சபையின் செனட்டர்  லீ ரியானன் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.
தமிழர்களைப் பொறுத்தவரையில் நவம்பர் 27ம் திகதியானது ஆழந்த கவலையோடும், மீளாத்துயரோடும் கடந்த 26 வருட ஆயுதப் போரில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமது உறவுகளை நினைவுகூறும் ஒரு தினமென்றும்,
கடந்த காலங்களில் சிட்னியில் இடம்பெற்ற நவம்பர் 27 நிகழ்வுகளில் தான் கலந்து கொண்டதையும் நினைவுபடுத்திய செனட்டர் லீ ரியானன் 2009ம் ஆண்டு நடந்த பாரிய யுத்தம் ஒரு மறையாத வடுவை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் நான் பாராளுமன்றத்தில் பிரசன்னமாக இருப்பதால் தன்னால் இவ்வாண்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாதுள்ளது என தெரிவித்தார்.
இருப்பினும் தனது பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும் ஈழத்திலுள்ள தமிழர்களிற்காகவும். பல தேசங்களிற்குப் புலம்பெயர்ந்து அகதிநிலை கோரியுள்ள தமிழர்களிற்காவும் இருக்குமெனவும், தமிழர்கள்  நீதிக்காகவும், நியாயத்திற்காகவும் காத்திருக்கின்றார்கள். ஆதனை ஒரு நாள் உலகம் உணரும் எனவும் தெரிவித்தார்.


http://www.tamilwin.com/show-RUmszBRaKZno1.html

Geen opmerkingen:

Een reactie posten