இலங்கையின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க, அமெரிக்காவும் ஏனைய சில நாடுகளும் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்தபோதும் அது பயன்தரவில்லை என்று குறிப்பிட்டார.
கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் அவர் இந்தக்கருத்தை வெளியிட்டார்.
போரை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள், நோர்வே மற்றும் பிரித்தானிய அரசாங்கங்களின் ஊடாகவும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனினும் அதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இடம்தரவில்லை.
இதனையடுத்தே அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவை பயன்படுத்தி இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை முன்னெடுத்துள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார.
இதன்கீழேயே இன்று ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை வடக்குகிழக்கு அமைதியாக இருக்கும் போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நாட்டை பிரிக்க முயற்சிக்கிறது என்றும் அமைச்சர் குற்றம் சுமத்தினார்.
அமைச்சர்கள் தொடர்பில் கோவைகளை கொண்டிருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் கருத்துரைத்த அவர், அமைச்சர்களின் கோவைகளை ஜனாதிபதி தம்வசம் வைத்திருப்பதாக வழமைக்கு மாறானது அல்ல என்று குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYex2.html
Geen opmerkingen:
Een reactie posten