தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 november 2014

தென் கிழக்காசிய நாடுகளின் பாதுகாப்பு மாநாடு கொழும்பில்!!

மிஹிந்தலை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் ஆளும் கட்சிக்கு தோல்வி
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 08:25.29 AM GMT ]
மிஹிந்தலை பிரதேச சபை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் ஆளும் கட்சி தோல்வியை தழுவியுள்ளது.
மிஹிந்தலை பிரதேச சபையின் 2015ம் ஆண்டுக்கான வரவு செலவு  திட்ட வாக்கெடுப்பு இன்று நடத்தப்பட்டுள்ளது.
ஒரு மேலதிக வாக்கினால் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபையில் ஒன்பது உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். இதில் ஆறு பேர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை  சேர்ந்தவர்களாகும்.
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் மூன்று உறுப்பினர்களே சபையில் உள்ளனர். உப தலைவர் லக்ஸ்மன் செனவிரட்ன உள்ளிட்ட மூன்று பேர் வாக்கெடுப்பின் போது பிரசன்னமாகியிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஆளும் கட்சியின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnsz.html
ஜனாதிபதித் தேர்தலில் பயங்கரவாதத்திற்கு இடமளிக்க வேண்டாம்!– பொதுபல சேனா
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 08:26.00 AM GMT ]
2009ம் ஆண்டு அடக்கப்பட்ட பிரிவினைவாத பயங்கரவாதம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் தலைதூக்கும் ஆபத்து இருப்பதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பொதுபல சேனா அமைப்பின் இறுதி முடிவை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனை கூறியுள்ளார்.
நிறைவேறாத தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள புலிகளும் முஸ்லிம் பயங்கரவாதிகளும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இந்த இணங்க எந்த வேட்பாளரும் இடமளிக்கக் கூடாது. கடந்த 12 நாட்களாக நாடு முழுவதும் உள்ள பௌத்த மக்கள், பௌத்த அமைப்புகள் மற்றும் ஜாதிக ஹெல உறுமய கட்சி ஆகியவற்றுடன் நடத்தப்பட்ட முக்கியமான பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எமது அமைப்பின் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் காலங்களில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த எண்ணியுள்ளதாகவும் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZns0.html
அச்சத்தில் விமல் வீரவன்ஸ
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 08:40.05 AM GMT ]
மேல் மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை மகிந்த ராஜபக்ஷ அணியிடம் இருந்து எதிர்க்கட்சி கைப்பற்றி அதன் முதலமைச்சராக உதய கம்மன்பில நியமிக்கப்படலாம் என்ற அச்சத்தில் விமல் வீரவன்ஸ இருப்பதாக தெரியவருகிறது.
ஜாதிக ஹெல உறுமய ஏற்கனவே அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ளது. அந்த கட்சியை சேர்ந்த உதய கம்மன்பில மற்றும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க ஆகியோர் ஆளும் கட்சியின் சார்பில் மேல் மாகாண சபையில் அங்கம் வகித்தனர்.
மேல் மாகாண சபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 56 ஆசனங்களை கொண்டிருப்பதுடன் எதிர்க்கட்சிகள் 48 ஆசனங்களை கொண்டுள்ளன.
ஜாதிக ஹெல உறுமயவின் இரண்டு ஆசனங்கள் மேலும் மூன்று ஆசனங்களை எதிர்க்கட்சிகள் பெற்றால், மேல் மாகாண சபையின் பெரும்பான்மை பலம் எதிர்க்கட்சிக்கு கிடைக்கும்.
தென் மாகாண சபையின் உறுப்பினர் கீதா குமாரசிங்க, மேல் மாகாண சபையின் உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர ஆகியோர் அரசாங்கத்தின் மீது மறைமுகமாக அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண சபையின் பெரும்பான்மை பலத்தை அரசாங்கம் ஏற்கனவே இழந்து விட்டது.
இதனை தவிர வடமத்திய மற்றும் ஊவா மாகாண சபைகளையும் மகிந்த ராஜபக்ஷ அணி இழக்கக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZns1.html
தென் கிழக்காசிய நாடுகளின் பாதுகாப்பு மாநாடு கொழும்பில்
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 08:41.23 AM GMT ]
தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளின் பாதுகாப்பு படை தலைமை அதிகாரிகளின் விசேட மாநாடு கொழும்பில் இன்று நடைபெறுகிறது.
18 நாடுகளின் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
இரு பிராந்திய நாடுகளுக் இடையிலான இணக்கப்பாடுகள், தொடர்புகள் மற்றும் புரிந்துணர்வை மேலும் அதிகரித்து கொள்வதே இந்த மாநாட்டின் நோக்கம் என இராணுவ  பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
மாநாட்டில் பிரதம அதிதியாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கலந்து கொள்வதுடன் பிரதான சிறப்புரையையும் நிகழ்த்த உள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட உள்ளது.
அத்துடன் பிராந்திய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் , அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்  இந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZns2.html

Geen opmerkingen:

Een reactie posten