[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 01:51.08 AM GMT ]
இதன் அடிப்படையில் ஊவா மாகாணசபையின் அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
குளிர்நிறைந்த காலநிலையால் அந்த மாகாணசபை அமர்வுகளை ஒத்திவைத்துள்ளதாக அரசாங்கம் காரணம் கூறுவதாக ஜனாதிபதி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.
மாகாணசபைகளின் பெரும்பாலான ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்கு சென்று விடுவர் என்ற காரணத்தினாலேயே இந்த நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளதாக மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmt3.html
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க தம்மால் மாத்திரமே முடியும்!- மஹிந்த
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 02:04.02 AM GMT ]
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிப்பதால் அதனை தம்மால் மேற்கொள்ளமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு எதிரான பிரசாரங்களுக்கு நிறைவேற்று அதிகார ஒழிப்பு மாத்திரமே காரணமாக இருந்தால் அதனை தம்மால் மாத்திரமே செய்யமுடியும் என்று எதிர்த்தரப்பினர் கருதுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயங்களை ஆராய்வதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டது எனினும் அதில் எதிர்க்கட்சி பங்கேற்கவில்லை என்பதையும் ஜனாதிபதி குறைகூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmt4.html
இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை சரியான பாதையிலேயே செல்கிறது: பீரிஸ்
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 02:07.11 AM GMT ]
இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை உரிய பாதையே சென்று கொண்டிருப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் கூறுவதைப்போன்று வெளிநாட்டுக் கொள்கை தொடர்பிலான கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிய முடியாது என்ற அடிப்படையிலேயே ஐக்கிய நாடுகளின் விசாரணையை இலங்கை நிராகரித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் சில சர்வதேச தலைவர்களின் கூற்றுக்களுடன் இணங்கி செல்லமுடியும்.
இந்தநிலையில் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில் உள்ள இறுக்கமான பிடியின் காரணமாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு பல நாடுகள் ஆதரவளித்தாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmt5.html
கல்குடா தொகுதி மக்களின் தீர்மானமே எனது இறுதி தீர்மானம்: அமீர் அலி- அம்பாறை மேலதிக அரச அதிபராக அமீர் நியமனம்
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 03:52.15 AM GMT ]
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ள நிலையில் அது முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கு வழங்கப்படவுள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் அரசியலில் பிரவேசித்ததில் இருந்து கல்குடா தொகுதியில் உள்ள ஆதரவாளர்கள் எனது வெற்றி, தோல்விகளில் பங்கெடுத்தார்கள்.
இதனால் ஜனாதிபதித் தேர்தலை எதிர்நோக்கி இருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் நான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெறுவதா? இல்லையா? என்ற தீர்மானத்தை எனது கல்குடா தொகுதி ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்த பின்பே முடிவு எடுப்பேன்.
எனது கல்குடா தொகுதி மக்களின் விருப்புக்கு எதிராக நான் செயற்பட மாட்டேன் என்று தெரிவித்தார்.
கிழக்கு முஸ்லிம் வாக்குகளுக்கு குறி: மேலதிக அரச அதிபராக அமீர் நியமனம்
அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபராக எம்.ஐ. அமீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மாவட்டத்தின் மூன்றாவது சிறுபான்மையினமாக தமிழ் மக்கள் வாழுகின்றனர். எனினும் இங்கு இதுவரை காலமும் சிங்களவர் ஒருவரே அரச அதிபராக நியமிக்கப்பட்டு வந்துள்ளார்.
இதன் மூலம் நிர்வாக செயற்பாடுகள் மூலம் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இதன் காரணமாகவே முஸ்லிம்கள் தரப்பில் இருந்து கல்முனை கரையோர மாவட்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வந்திருக்கும் தருணத்தில் கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை குறிவைத்து அரசாங்கம் முஸ்லிம் ஒருவரை மாவட்டத்தின் மேலதிக அரச அதிபராக நியமனம் செய்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையைச் சேர்ந்த எம்.ஐ அமீர் அம்பாறை மாவட்ட மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
டிசம்பர் 1 ம் திகதி இவர் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
இதற்கு முன்னர் எம்.ஐ. அமீர் 1994-2006 சாம்மந்துறை பிரதேச செயலாளராகவும் முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களப் பணிப்பாளர்,புத்தாசன மற்றும் சமய விவகார அமைச்சின் உதவிச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
ஏற்கனவே அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபராக அட்டாளைச்சேனையை சேர்ந்த அசீஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
தேர்தலொன்றை முன்னிட்டு வழங்கப்பட்ட அப்பதவி சிறிது காலத்துக்குள் ரத்து செய்யப்பட்டிருந்தது.
தற்போது அதே பதவி மீண்டும் அமீருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmuy.html
நவீன் திஸாநாயக்க திங்களன்று பொதுவேட்பாளருக்கான ஆதரவை வெளியிடுவார்
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 05:11.38 AM GMT ]
இதற்காக அவர் சிறப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்தக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நவீன் திஸாநாயக்க பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கும் முகமாக எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டதாக செய்திகள் வெளியாகின.
எனினும் தாம் இன்று எதிர்க்கட்சியில் இணையவில்லை என்று நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmuz.html
Geen opmerkingen:
Een reactie posten