பொலன்னறுவையில் இன்று நடைபெறும் மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது பொதுக்கூட்டத்தை தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
முன்னதாக இந்தக் கூட்டத்தை நடத்துமிடத்தில் பிக்குமார்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூடாரத்தை நேற்று மாலை பாதுகாப்பு படையினரை பயன்படுத்தி அரசாங்கம் கழற்ற வைத்திருந்தது.
இன்று அதிகாலை முதல் பராக்கிரமபாகு குளத்தில் மேலதிக நீரை வெளியேற்றும் வான்கதவுகள் திறக்கப்படவுள்ளதாக பொலன்னறுவை பூராகவும் ஒரு வதந்தி பரப்பப்பட்டிருந்தது.
அவ்வாறு நீர் திறந்து விடப்பட்டால் மைத்திரிபாலவின் கூட்டத்துக்கு வருகை தரும் மக்கள் திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.
எனினும் இதையெல்லாம் மீறி பொதுமக்கள் பெருமளவில் பொதுக்கூட்டத்தில் திரண்டுள்ளதுடன், கரு ஜயசூரிய உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்க மற்றும் சந்திரிக்கா ஆகியோரும் இதில் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZls3.html
Geen opmerkingen:
Een reactie posten