[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 08:08.11 AM GMT ]
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் நோக்கில் அமைச்சர் நவீன் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
நவீன் திஸாநாயக்கவின் தந்தை காமினி திஸாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நவீன் திஸாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சு பதவியை ராஜினாமா செய்வது மற்றும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறெனினும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க கட்சியை விட்டு விலகுவது குறித்து உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை.
இரண்டாம் இணைப்பு
அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய தீர்மானித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதற்காக அவர் இந்த தீர்மானித்தை எடுத்துள்ளார்.
தனது தந்தையான காமினி திஸாநாயக்கவின் சிலை ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் ஸ்தாபிக்குமாறும் அவர் ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நவீன், அந்த கட்சியின் மாவட்ட அமைப்பாளருமாவார்.
நவீன் திஸாநாயக்கவின் தந்தையான காமினி திஸாநாயக்க 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கி இருந்ததுடன் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அவர் சில காலம் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகியிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைய உள்ள நவீன் திஸாநாயக்க, போர் நடைபெற்ற காலத்தில் கட்சியில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட 17 பேரில் ஒருவராவார்.
இதுவரை அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்து வரும் அவர், கடந்த காலங்களில் அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் சம்பந்தமாக அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmo5.html
வெளிநாட்டுப் பிரஜைகளை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மாலக்க சில்வா நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மாலக்க சில்வா பிணையில் விடுதலை: களியாட்ட விடுதிகளுக்குச் செல்ல தடை
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 08:22.01 AM GMT ]
பம்பலப்பிட்டி இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றில், பிரித்தானிய ஜோடியுடனான மோதலை அடுத்தே மாலக்க சில்வா கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஆறு பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
நான்கு தடவைகள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட மாலக்க சில்வாவிற்கு பிணை வழங்க மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்றைய தினம் கொழும்பு மேலதிக நீதவான் இவருக்கு பிணை வழங்கியுள்ளார்.
எனினும் இந்த வழக்கு முடியும் வரை இரவு நேர களியாட்ட விடுதிகளுக்குச் செல்ல மாலக்க சில்வாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmo6.html
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல இடமளிக்க போவதில்லை என எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஆறு பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
நான்கு தடவைகள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட மாலக்க சில்வாவிற்கு பிணை வழங்க மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்றைய தினம் கொழும்பு மேலதிக நீதவான் இவருக்கு பிணை வழங்கியுள்ளார்.
எனினும் இந்த வழக்கு முடியும் வரை இரவு நேர களியாட்ட விடுதிகளுக்குச் செல்ல மாலக்க சில்வாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmo6.html
மஹிந்தவை போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல இடமளிக்க மாட்டேன்: மைத்திரிபால
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 08:45.02 AM GMT ]
சர்வதேச ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்த சவாலாக இருந்தாலும் தான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரும் அவருக்காக குரல் கொடுக்க போவதாகவும் சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தால், அவரை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல போவதாக வெளிநாட்டில் உள்ள விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்ட புலம்பெயர் அமைப்பு தெரிவித்துள்ளது.
நான் வெற்றி பெற்ற பிறகு, மஹிந்த ராஜபக்ஷ, அவரது குடும்பம், பாதுகாப்புச் செயலாளர், அல்லது பயங்கரவாத பிடியில் இருந்து நாட்டை மீட்ட முப்படையினர் உட்பட அனைவரையுடம் புலிகளுடன் சம்பந்தப்பட்ட புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பாதுகாப்பேன் என்பதை தெளிவாக கூறி உறுதியளிக்கின்றேன் எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmo7.html

Geen opmerkingen:
Een reactie posten