தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 30 november 2014

சம்பந்தன் MP படுகுழியில் விழமாட்டார்! மன்னார் ஆயர் நம்பிக்கை

மைத்திரியின் கொழும்புக் கூட்டத்தில் கூட்டமைப்பு??

கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரனினது தனிப்பட்ட செயற்பாடு இதுவென அத்தரப்புக்கள் விமர்சனங்களை முன்வைத்துமுள்ளன.
இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவினை ஆதரித்தமை தொடர்பில் இன்று வரை கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையினில் கூட்டமைப்பு இம்முறை தேர்தலில் எத்தரப்புக்கு ஆதரவளிப்பாதாயினும் அதற்கு சில நிபந்தனைகளை முன்வைக்க தீர்மானித்திருந்தது.
அதனால் உடனடியாக தேர்தல் தொடர்பினில் எந்தவொரு அறிவிப்பினையும் விடுப்பதில்லையெனவும் தன்னை தவிர வேறு எவரும் ஊடககங்களிற்கு கருத்து தெரிவிக்கக்கூடாதெனவும் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அறிவுறுத்தியுமிருந்தார்.
இந்நிலையில் எதிரணி கூட்டமைப்பின் முதலாவது பிரச்சாரக்கூட்டத்தினில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பினில் ஏ.சுமந்திரன் கலந்து கொள்ளவுள்ளதாக கொழும்பினில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பினில் கட்சி தலைவர் இரா.சம்பந்தனது கவனத்திற்கு பங்காளிக்கட்சிகள் கொண்டு சென்றிருந்ததாகவும் எனினும் அவர் திருப்திகரமான பதிலேதனையும் தந்திருக்கவில்லையெனவும் அவை சீற்றங்கொண்டுள்ளன. இதனிடையே எதிரணி தரப்பிலிருந்து நூறு கோடி வரையினில் கூட்டமைப்பின் தலைகள் பேரம் பேசி பெற்றுக்கொண்டிருப்பதாக அரச தரப்பு புரளிகளை கிளப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/88436.html

மகிந்தவே உங்களை நான் எதிர்க்கவில்லை! மேடையில் மைத்திரிபால…

அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள சகல கட்சிகளை இல்லாமல் செய்து விடுவார் எனவும் அவர் கூறியுள்ளார். பொலன்நறுவையில் இன்று தனது முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களே நான் உங்களை தனிப்பட்ட ரீதியில் எதிர்க்கவில்லை. உங்கள் குடும்பத்தை தனிப்பட்ட ரீதியில் எதிர்க்கவில்லை. நாட்டில் அதிகரித்துள்ள இலஞ்சம், ஊழல், வீண்விரயம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் குடும்ப ஆட்சி என்பவற்றையே நான் எதிர்க்கின்றேன்.
மகிந்த ராஜபக்ஷ நாட்டில் உள்ள சகல அரசியல் கட்சிகளையும் அழிக்க தயாராகி வருகிறார். அவர் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள சகல அரசியல் கட்சிகளையும் தரைமட்டமாக்கி விடுவார். நான் அனைத்தையும் அறிந்திருக்கின்றேன். எனக்கு தெரிந்த விடயங்களை நான் எதிர்காலத்தில் கூறுகிறேன் என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.MR-MeetingMR-Meeting-01MR-Meeting-02MR-Meeting-03MR-Meeting-04MR-Meeting-05

 http://www.jvpnews.com/srilanka/88439.html

மகிந்தவுடன் பிரியும் அடுத்த முக்கிய அமைச்சர்….

அவருக்கு எதிர்கட்சியினால் 100 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இன்றையதினம் அமைச்சர் நவீன் திஸாநாயக்க அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்கட்சிகளுடன் இணைந்துக் கொண்டார். இந்த நிலையில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த வாரம் எதிர்கட்சிகளுடன் இணைந்துக் கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/88456.html

கிழக்கில் மகிந்தவுக்கு திண்டாட்டம்! கூட்டமைப்பிற்கு கொண்டாட்டம்…

இதன் காரணமாக ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 11க குறைவடைந்தது. இந்த நிலையில் அவர்கள் கட்சியில் இருந்து விலகுவதை தடுப்பதற்காக, அகில இலங்கை மக்கள் காங்கிரிஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலியை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்தது.
இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வரையும் பதவி விலக செய்தது.எனினும் அமீர் அலி இந்த வாய்ப்பை நிராகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் குறித்த மூன்று பேரும் அரசாங்கத்தில் இருந்து விலகி நிற்க தீர்மானித்துள்ளனர். அதேநேரம், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதில் இருந்து விலகிக் கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது 11 மாகாண சபை உறுப்பினர்களை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பில், ஐக்கிய தேசிய கட்சியின் நான்கு உறுப்பினர்களும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பவற்றின் 10 உறுப்பினர்களும் இணைவார்களாயின் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கிழக்கில் ஆட்சி அமைக்கமுடியும்.
http://www.jvpnews.com/srilanka/88461.html

சம்பந்தன் MP படுகுழியில் விழமாட்டார்! மன்னார் ஆயர் நம்பிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மிகவும் நிதானமான அரசியல்வாதி. அவருடைய ஆற்றல் தீர்க்கமான பேச்சு ஆகியவை எமக்கும் மகிழ்ச்சி தருகிறது. அந்தரப்பட்டு அவசரப்பட்டு கிடங்கில் விழமாட்டார் என் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் மன்னார் ஆயர் ராஜப்பு ஜோசப். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் நாம் மௌனமாக இருந்து காரியங்களைச் சாதிக்க வேண்டும்.
சகல தரப்பினருடனும் கலந்து ஆலோசித்து தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மிகவும் நிதானமான அரசியல்வாதி. அவருடைய ஆற்றல் தீர்க்கமான பேச்சு ஆகியவை எமக்கும் மகிழ்ச்சி தருகிறது. அந்தரப்பட்டு அவசரப்பட்டு கிடங்கில் விழமாட்டார். நிதானமாக நடக்கும் அவர் தலைமைத்துவத்தைப் பின்பற்றி நம்முடைய அரசியல் தலைவர்கள் புத்தி ஜீவிகள் பேச்சாளர்கள் கருத்தாளர்கள் தமது கருத்தை வெளியிட வேண்டும் நடக்க வேண்டும்.
இன்றைய அரசியல் சூழ்நிலையை தமிழ் மக்கள் மிகவும் கவனத்துடனும் தூரப்பார்-வையுடனும் பயன்படுத்த வேண்டிய காலத்தில் உள்ளோம். பேரினவாதிகள் அர-சியல் அதிகாரத்தைப் பெறுவதற்காக தமிழர் பிரச்சினையை ஒரு துரும்பாக எப்பொழுதும் பயன்படுத்தி வந்துள்ளார்கள். இப்பொழுது புலிகளுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும் இணைந்து தமிழீழத்தை அமைக்க முயற்சிக்கிறார்கள் எதிரணியினர் எனப் பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டு எதிரணி வேட்பாளரை ஒழித்-துக் கட்டுவதற்கு தமிழ் மக்களின் பிரச்சினையை தமக்குரிய ஆயுதமாக கையில் எடுத்துள்ளனர்.
நாம் தமிழ் ஈழத்தையோ பிரிவினையையோ கோரவில்லை. நாம் கேட்பதெல்லாம் நியாயமான அரசியல்தீர்வு. எங்களுக்கு சலுகை அரசியல் வேண்டாம். உரிமை அர-சியலைத் தாருங்கள் என்றே கேட்கிறோம். வடகிழக்கில் நாம் சுதந்திரமாகவும் சுய நிர்ணய உரிமையுடனும் வாழ வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். தென்-னிலங்கையிலுள்ள அரசியல்வாதிகள் தமிழ் மக்களுடைய பிரச்சினையை தீர்க்க விருப்பமில்லாதவர்களாகவே காணப்படுகிறார்கள். அதற்காக தமிழீழம் என்ற மாயையை உருவாக்க பார்க்கிறார்கள்.
தமிழ் மக்களுக்கு எத்தகைய உரிமை வழங்கப்பட வேண்டும்? எப்படியான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்? அவர்கள் பட்ட துன்பங்கள் துயரங்கள் இழப்புகளுக்குரிய பரிகாரமென்ன? என்பதை உணர்ந்து நியாயமான தீர்ப்பை வழங்க யார் தயாராக இருக்கிறார்களோ அவர்களை ஏற்றுக்கொள்வதே நிதானமான முடிவாக இருக்கும். அதுவே மக்களின் எதிர்பார்ப்புமாகும். எடுக்கும் தீர்மானம் மீண்டும் படுகுழியில் தள்ளுவதாக இருக்கக் கூடாது.
எனவே ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபட்டு அத்தலைமையின் கீழ் எடுக்க வேண்டிய முடிவுகளை எடுக்க வேண்டும். இன்றைய சூழலில் மக்களே தீர்மானம் எடுக்கும் ஆற்றல் கொண்டவர்கள். அவர்கள் தீர்க்கமாகவும் சரியான முடிவுகளையும் எடுப்பார்கள் என நாம் நம்பலாம். அதுவரை மௌனம் சாதிப்பதே சிறந்த அரசியல் தந்திரோபாயமாக இருக்கும் என்றார்.
http://www.jvpnews.com/srilanka/88477.html


Geen opmerkingen:

Een reactie posten