தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 november 2014

அரசின் உத்தியோகபூர்வமற்ற பிரதிநிதியாக செயற்படும் கே.பி: சிங்கள இணையத்தளம்

கே.பி என்ற குமரன் பத்மநாதன் என்ற வடக்கிற்கான இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமற்ற பிரதிநிதியாக செயற்பட்டு வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போர் முடிவுக்கு வந்து சில காலங்களின் பின் மலேசியா நாட்டில் கைது செய்யப்பட்ட கே.பி, விடுதலைப் புலிகளின் தலைவர் என தன்னை அறிவித்து கொண்டதுடன் அந்த அமைப்புக்கு நிதி சேகரிப்பு மற்றும் ஆயுத கொள்வனவுகளிலும் முன்னர் ஈடுபட்டு வந்தார்.
சர்வதேச பொலிசாரினால் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து கே.பியின் மனைவியான தாய்லாந்து பெண்ணும் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு அவருடன் தங்க அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தில் கே.பியை சாதாரண சிவில் பொதுமகனாக மாற்றிய அரசாங்கம், வடக்கில் குடியேறவும் சந்தர்ப்பம் வழங்கியது.
கே.பி தற்போது வடக்கிற்கான அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமற்ற பிரதிநிதியாக செயற்பட்டு வருவதாக அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZns5.html

Geen opmerkingen:

Een reactie posten