தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 november 2014

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இலங்கையின் நடப்புக்களை கண்காணிக்க வேண்டும்: மன்னிப்பு சபை கோரிக்கை

அமைச்சர் காதருக்கு தொலைபேசி மூலம் உயிர் அச்சுறுத்தல்!
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 02:35.45 AM GMT ]
சுற்றாடல்துறை பிரதியமைச்சர் அப்துல் காதர், தமக்கு இனந்தெரியாத ஒருவர் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இந்த தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டதாக அவர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
கொள்ளுப்பிட்டியில் தங்கியிருந்த வீட்டுக்கே இந்த அழைப்பு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் குறி;த்த அழைப்பு மேற்கொள்ளப்பட்ட தொலைபேசியின் இலக்கங்களை சேவை வழங்குநர்களிடம் இருந்து பெறுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZnw5.html


நாட்டை மீட்டெடுக்க ஐ.தே.க சரியான வேட்பாளரை நிறுத்தவில்லை!– பிரதமர் கிண்டல்
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 02:41.51 AM GMT ]
நாட்டை மீட்டெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி சரியான வேட்பாளர் ஒருவரை நிறுத்தவில்லை என பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை மீட்கக் கூடிய ஒர் வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்தத் தவறியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்த சாத்தியம் இருந்த போதிலும், பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் கட்சியின் வீழ்ச்சியே வெளிப்பட்டுள்ளது.
நாட்டின் முன்னேற்றத்திற்கு சரியான ஆட்சியாளர் ஒருவர் அவசியம்.
அண்மைய வரலாற்றில் இதற்கு மிகவும் பொருத்தமான தலைவர் மஹிந்த ராஜபக்சவேயாகும்.
மஹிந்தவுடன் போட்டியிடக் கூடிய தலைவர் கூட இன்னமும் உருவாகவில்லை.
கடந்தகாலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் போட்டி போட வலுவான எதிர்க்கட்சி இருந்தது.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சி இன்று பலவீனமடைந்துள்ளது.
இலங்கையை இரண்டாக பிளவடையச் செய்ய வேண்டுமென சில நாடுகள் முயற்சித்து வருகின்றன.
மஹிந்த ராஜபக்சவை பணி நீக்கி கைப்பொம்மை ஆட்சியொன்றை உருவாக்க முயற்சிக்கப்படுகின்றது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக பிரதமர் வெளியிட்டு வரும் சில கருத்துக்கள் முன்னுக்கு பின் முரணான வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கை விஜயம் செய்யும் போது புதிய ஜனாதிபதியொருவர் பதவி வகிப்பார் என குறிப்பிட்டிருந்தார்.
தற்போது நாட்டை மீட்டெடுக்கக்கூடிய ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கருத்துக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவா என்பது புரியவில்லை என ஆளும் கட்சியினர் விசனம் வெளியிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZnw6.html


அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் இன்னலுறும் கோடைமேட்டு மக்கள் (செய்தித் துளிகள்)
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 03:01.03 AM GMT ]
மழைகாலம் ஆரம்பித்தால் மக்களின் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தும் எருவிலில் இருந்து கோடைமேட்டுக்குச்செல்லும் குளக்கட்டு வீதியினை புனரமைக்க ஆரம்பித்த காலம் பொருத்தமுடைய காலம் இல்லை என அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்போது தொடர்ந்து மழைபெய்து வருவதன் காரணமாக மக்களின் அன்றாட கடமைகள் பாதிக்கப்பட்டிருப்பதோடு போக்குவரத்துக்களும் தடைப்பட்டு காணப்படுகிறது.
அதனொரு கட்டமாக கோடைமேட்டுக்கு செல்வதற்கு மூன்று வீதிகள் இருந்தபோது தற்போது ஏற்பட்ட மழையினால் மூன்று வீதிகளும் பழுதடைந்து வீதியை மறித்து வெள்ளம் பாய்ந்தோடுகின்றது.
இவ்வூருக்குச்செல்லும் பிரதான பாதையாக இருந்த கோடைமேட்டு பாதையின் திருத்த வேலை காரணமாக அதில் உள்ள மதகு தோண்டி எடுக்கப்பட்டதன் நிமிர்த்தம் தற்போது அந்த வீதியால் மக்கள் எவரும் செல்ல முடியாத நிலை உருவாகியிருக்கின்றது.
அந்த வீதிக்கு பதிலாக தற்காலிகமாக போடப்பட்ட  வீதியும் மூடப்பட்ட நிலையில் இந்த வீதியின் போக்குவரத்துக்கள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
இதன்காரணமாக பாடசாலை செல்லும் மாணவர்கள் தொழில் நிமிர்த்தம் செல்லும் தொழிலாளர்களும் குறுமண்வெளி சென்று அங்கிருந்தே கோடையூரை சென்றடைய வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை உருவாகியிருக்கின்றது.
மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டுப்படுமாக இருந்தால் குளங்களில் உள்ள நீர்மட்டங்கள் சடுதியாக குறைவடையும் அதனால் எதிர்காலத்தில் இந்தக்குளத்தினை நம்பி வேளாண்மை செய்யும் விவசாயிகள் அனைவரும் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.
அத்தோடு தொடர்ந்து மழை பெய்யுமாக இருந்தால் இவ்வூருக்குச் செல்லும் அனைத்து வீதிகளும் மூடப்பட்டு விடும் இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி கவனமெடுத்து மக்களின் நலன்கருதியும், விவசாயிகளின் நலன் கருதியும் தகுந்த நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இழுவை வண்டி 25 அடி பாய்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு
நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோட்டன் ஒஸ்போன் 50 ஏக்கர் தோட்டத்திலிருந்து லெதண்டி தோட்டத்துக்கு கொழுந்து ஏற்றிச்சென்று கொண்டிருந்த இழுவை வண்டி ஒன்று 25 அடி பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இழுவை வண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும் படுங்காயம் அடைந்தவரை உடனடியாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக நோட்டன் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் ஒஸ்போன் தோட்டத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சக்திவேல் (வயது 43) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதில் சாரதி மற்றும் உயிரிழந்தவரான சக்திவேல் ஆகிய இருவரும் பயணித்துள்ளதாகவும் இவ்விபத்தில் சாரதிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனா்.
சடலம் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக பிரேத வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை!
அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலைக்கு மன்றாசி நகரத்திலிருந்து செல்லும் ஒரு கிலோ மீற்றர் தூரம் கொண்ட பிரதான பாதை 5 வருடகாலமாக செப்பணிடாப்படாமல் மிகவும் மோசமாக போக்குவரத்து செய்யமுடியாத நிலையில் காணப்படுகின்றது.
தற்போது பாதை குன்றும் குழியுமாக இருப்பதோடு மழைக்காலங்களில் நீர் நிறைந்து காணப்படுகின்றது.
இதனால் பாதையில் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.
இப்பாதையினை மன்றாசி, சின்னநாகவத்தை, பெரியநாகவத்தை, ஆட்லோ, சென்மார்கட் ஆகிய தோட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அத்தோடு வைத்தியசாலைக்கு செல்பவர்களும் இப்பாதையினை பிரதானமாக பயன்படுத்துகின்றனர்.
இப்பாதையினை செப்பனிட்டு தருமாறு பிரதேச மக்கள் பல முறை மலையக அரசியல் தலைவர்களிடம் கோரிக்கைவிடுத்த போதிலும் அரசியல் வாதிகள் செய்து தருவதாக வாக்குறுதி வழங்கிய போதிலும் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லையென இப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர.
இதேவேளை இப்பாதையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புணரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கைவிடுக்கின்றனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இலங்கையின் நடப்புக்களை கண்காணிக்க வேண்டும்: மன்னிப்பு சபை கோரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 03:01.11 AM GMT ]
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இலங்கையின் நடப்புக்களை ஐக்கிய நாடுகள் சபை கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லண்டனை தலைமையகமாக கொண்ட சர்வதேச மன்னிப்புசபை இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது.
இது தொடர்பான எழுத்து மூல கோரிக்கையை மன்னிப்புசபை மனித உரிமைகள் சபையிடம் கையளித்துள்ளது.
இலங்கையில் தேர்தல் வன்முறைகள் காலங்காலமாக இடம்பெற்று வருகிறது. அத்துடன் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளும் இடம்பெறுகின்றன.
எனவே, இந்த நிலவரங்களை ஐக்கிய நாடுகள் கண்காணிக்கவேண்டும் என்று மன்னிப்புசபை கோரியுள்ளது.
சிறுபான்மையினர் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளின் போது அவற்றை தடுக்க பொலிஸார் தோல்வியடைந்துள்ளதாகவும் குறித்த கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZnxy.html

Geen opmerkingen:

Een reactie posten