தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 november 2014

கல்லறைகளில் உறங்கும் வீர மறவர்களை எண்ணி மனதுருகும் உறவுகளின் மனதை வருத்தும் நிமிடங்கள்!

பொது வேட்பாளர் சதித்திட்டத்தின் பின்னணியில் சந்திரிக்கா: எஸ்.பி.திஸாநாயக்க
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 12:29.11 PM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அன்று 100 நாட்களில் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாக கூறி கடிதம் ஒன்றில் கையெழுத்திட்டு ஜே.வி.பியிடம் கொடுத்து வாக்குறுதியை நிறைவேற்றாது ஏமாற்றியதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சந்திரிக்கா தற்போதும் அப்படியான திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கண்டி உடநுவர பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகம் ஒன்றை இன்று திறந்து வைத்து பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சந்திரிக்கா அம்மையாரின் திட்டத்தை துரதிஷ்டவசமாக ரணில் அறிந்து கொண்டிருக்கலாம். இதனால் 100 நாள் என்பதை 24 மணிநேரமாக மாற்றியுள்ளனர்.
24 மணி நேரத்தில் இரத்தாகும் ஜனாதிபதி பதவியில் அமர்வதற்காக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தயாரில்லை. அதேபோல் ஜே.வி.பி ஏமாந்தது போல் ஏமாற ஐக்கிய தேசியக் கட்சியும் தயாரில்லை.
ஒரு புறம் ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் வாக்காளர்கள் மறுபுறம் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்காளர்களின் விரும்பமின்றி, நடுவில் இருக்கும் சிலரது விருப்பத்திற்கு அமைய தனியாக பயணம் ஒன்றை மேற்கொள்ள முயற்சிக்கும் மைத்திரிபால சிறிசேன குறித்து கவலையடைகிறேன்.
எமது பக்கத்தில் போட்டியில் இறங்கியிருப்பவர் சாதாரண வேட்பாளர் அல்ல. முப்பது வருட போரில் இருந்தும், மரணத்தில் இருந்தும் நாட்டை காப்பற்றியவர்.
உலகில் மிகப் பெரிய, வலுவான, நிதி வளம் கொண்ட மற்றும் கொடூரமான பயங்கரவாத அமைப்பிடம் இருந்து மக்களையும் நாட்டையும் காப்பாற்றிய அரச தலைவர்.
உலகில் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் மாத்திரமின்றி மேற்கிலும் அப்படியான தலைவர் உருவாகவில்லை. இப்படியான நிலையில், எந்த தரத்திலான வேட்பாளரை நிறுத்தினாலும் வெற்றி பெற கூடிய வேட்பாளர் எதிரணியில் தேடியும் கிடைக்க போவதில்லை.
இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு பிரதிநிதியாகவும் உள்நாட்டு பிரதிநிதியாகவும் சந்திரிக்காவே இருந்தார்.
போர் முடிவுக்கு கொண்டு வரும் சந்தர்ப்பத்தில் பிரபாகரனை காப்பாற்ற சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் இந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இருக்கின்றது எனவும் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnuy.html

கல்லறைகளில் உறங்கும் வீர மறவர்களை எண்ணி மனதுருகும் உறவுகளின் மனதை வருத்தும் நிமிடங்கள்
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 12:23.40 PM GMT ]
தமிழனின் மனதினில் மாவீரர் தினம் என்றும் மாறாது தமிழ் இனத்தின் விடுதலை வீரர்களின் நினைவுகளை தடுக்க சிங்களம் நினைத்தால் அதற்கு எதிர் காலம் பதில் சொல்லும்.
ஒவ்வொரு தாயும் தன் வயிற்றில் கருவாக பத்து மாதம் சுமந்து பெற்று, பல கனவுகளோடு ஒவ்வொரு தாயும் வளர்த்திருப்பார்கள். ஆனால் அவர்கள் எங்கள் தேசத்தின் விடிவுக்காக தமிழர்களின் விடிவுக்காக விடுதலைப் போராட்டத்திற்காக தங்களின் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.
அவர்களின் கனவு நனவாக வேண்டும் என லங்காசிறி வானொலியில் இடம்பெற்ற மாவீரர் தின சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnt7.html

கனடாவில் நடைபெறும் மாவீரர் தின நிகழ்வுகளை நேரலையாகக் காணலாம்!
https://www.youtube.com/watch?v=f1JCBPoM__Q

Geen opmerkingen:

Een reactie posten