தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 november 2014

மைத்திரியை பார்க்க முயற்சித்தேன் மகிந்த தடுத்தார் ஹக்கீம்!



மர்ஹூம் இசைக்கோ நூர்தீன் அவர்கள் குறித்த இரங்கல் நிகழ்வில் பிரதம விருந்தினராக பங்கேற்ற நீதி அமைச்சர் மர்ஹூம் இசைக்கோ நூர்தீன் அவர்கள் பற்றி உரை நிகழ்த்தி விட்டு இன்றைய அரசியல் நிலைமை தொடர்பிலும் ஒரு சில நிமிடம் பேசினார்.

அதன்போது, “இது பரபரப்பான ஒரு காலம். பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சிகளிடத்தில் இருந்த ஒரு சோர்வு ஒரு வாரத்திற்குள் தலைகீழாக மாறியது. இப்படியும் நடக்குமா என்று எண்ணுமளவுக்கு ஒரு விதமான கிளுகிளுப்பை இன்றைய அரசியல் நிலைமை உருவாக்கியிருக்கிறது.

தேர்தல் காலங்களில் தேர்தல் ஆணையாளர் எதனைச் சொன்னாலும், எத்தகைய நியதிகள், சட்டங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறுவதுதான் சாதாரணம் என்ற ஒரு நிலையில் எல்லா விடயங்களும் தாராளமாக நடக்கப் போகின்ற ஒரு காலம்.
எதிர்க் கட்சி வேட்பாளர் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்வில் கலந்து கொள்கிறார் என்பதை அறிந்து நானும் ஆர்வத்துடன் அதைப் பார்க்க முயற்சித்தேன்.

ஆனால், அதனைப் பார்க்க முடியவில்லை. இது என்னடா ஆச்சரியம்! என்றிருந்தபோது பின்னர் அதனை இணையதளத்தில் பார்க்கக் கிடைத்தது………….” எனத் தெரிவித்தார்.�வேறு என்ன ஆசியாவின் ஆச்சரியம்தான். இதனை விட மற்றுமொரு பேராச்சரியம் இருக்கிறது.

அதுதான், சிறையில் இருக்க வேண்டியவர்களெல்லாம் சுதந்திரமாக சிறகடித்துப் பறக்கின்ற…�வெலிக்கடையில் இருக்க வேண்டிய காடையர் கும்பல் நவீனரக வெஹிகல்களில் சுற்றித் திரிகின்ற…�சட்டங்கள் மீறப்படுவது சாதாரணமாகிப் போயிருக்கின்ற நிலையில்…�இதனை விட வேறு என்ன ஆச்சரியம் இருக்கிறது.

29 Nov 2014

http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1417289664&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten